Thursday 29 April 2010

நோர்வேயில் ஈழத்தமிழ் இளைஞனின் சாதனை - ஜனகன் சிவகுமார்



உ.லகின் எப்பகுதியில் ஈழத்தமிழர்களாகிய நாம் வாழ்ந்தாலும், தாய் நாட்டுக்கும் வாழ்கின்ற நாட்டுக்கும் பெருமை சேர்ப்பவர்களாகவே வாழ்ந்து வருவது வரவேற்புக்குரியது

அந்த வகையில் தாயகத்தில் உரும்பராயைச் சேர்ந்த சிவகுமார், பிருந்தா தம்பதிகளின் புதல்வன் ஜனகன் சிவகுமார் (வயது 16) அவர்கள் ரக்வொண்Nடா (Taekwondo) என்னும் தற்காப்புக் கலையில் சர்வதேச தரத்தில் திகழ்ந்து நோர்வே நாட்டுக்காகப் பல வெற்றிக் கிண்ணங்களைப் பெற்றுக் கொடுத்து வருகின்றார். .

நோர்வே நாடளாவிய ரீதியில் நடைபெற்ற போட்டிகளில் 12 தடவைகள் முதலாவது இடத்தையும், 3 தடவைகள் இரண்டாம் இடத்தையும் பெற்ற பெருமை செல்வன் ஜனகன் அவர்களுக்குண்டு.


கடந்த மூன்று ஆண்டுகளாக (16 வயதுக்குட்பட்டோர் 48 கிலோ) நோர்வேயின் அதிசிறந்த வீரராகத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்டு வரும் இவரே இப்பிரிவில் வெற்றி பெற்றவர்களில் குறைந்த வயதுடையவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருதடவைகள் அதிசிறந்த ஸ்கன்டினேவிய வீரராகவும், கடந்த இருவருடங்களாக அதி சிறந்த நோர்டிக் வீரராகவும் தெரிவாகியது மட்டுமன்றிப் பல நாடுகளுக்கும் சென்று விளையாடிப் பெருமெண்ணிக்கையில் வெற்றிக் கிண்ணங்களைத் தனதாக்கிவரும் இவர் 2009ஆம் ஆண்டுக்கான ஐரோப்பிய வெற்றிக்கிண்ணப் போட்டியில் குறைந்த வயதில் பங்குபற்றிய சிறப்பையும் கொண்டவர்.

இவ்வாண்டு மெக்சிக்கோவில் நடைபெற்ற உலக வெற்றிக்கிண்ணப் போட்டியில் (16 வயதுக்குட்பட்டோர் 48 கிலோ) பங்கெடுத்துச் செனகல், கனடா ஆகிய நாடுகளுடன் முறையே 7 - 2, 4 - 2 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்குத் தெரிவாகியிருந்தார்.



மூன்றாவது சுற்றில் டொமினிக்கன் குடியரசுடன் மிகத்திறமையாக விளையாடி இறுதிக்கணத்தில் துரதிர்ஷ்டவசமாக வெற்றிவாய்ப்பைத் தவறவிட்டிருந்த போதிலும் நோர்வே நாட்டின் சார்பாக இவ்வுலக வெற்றிக்கிண்ணப் போட்டியில் கலந்து கொண்டவர்களில் சர்வதேச ரக்வொண்டோ வீரர்கள் பலரை வென்று மூன்றாவது சுற்று வரைக்கும் முன்னேறியிந்த நோர்வேயிய வீரர் என்ற பெருமையை இவர் பெற்றிருந்தார்.

இவர் தொடர்ந்து இத்துறையில் முன்னேறித் தாம் வாழும் நாடான நோர்வேக்கும், தாய்நாட்டுக்கும் புகழ்சேர்க்க வாழ்த்துகின்றோம்

No comments:

Post a Comment