Saturday 10 July 2010

இலங்கை தமிழரை கடத்திச் சென்று ரூ.17.5 லட்சத்தை பறித்த கும்பல் கைது

இலங்கை தமிழரை கடத்திச் சென்று ரூ.17.5 லட்சத்தை பறித்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.


இங்கிலாந்து நாட்டில் குடியுரிமை பெற்ற இலங்கை தமிழர் சண்முகவேல் (வயது 36). இவர் தொழில் அதிபர் ஆவார். இவரது மனைவி பெயர் ராதிகா. இவர் சென்னையை அடுத்த பொழிச்சலூரைச் சேர்ந்தவர். சண்முகவேல் கடந்த 5-ந் தேதி பல்லாவரம் போலீசில் ஒரு புகார் மனு தந்தார். அதில், "கடந்த 22-ந் தேதி காரில் திருவல்லிக்கேணிக்கு சென்று கொண்டிருந்த போது ஆட்டோவில் வந்த சிலர் தன்னை வழி மறித்து கடத்திச் சென்று ஒரு வீட்டில் 2 நாட்கள் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டியதாகவும், பின்னர் தனது மனைவி ரூ.17.5 லட்சம் கொடுத்து அவர்களிடம் இருந்து தன்னை மீட்டதாகவும் கூறி இருந்தார். கடத்தல் கும்பல் தாக்கி தனது கையை உடைத்ததாகவும் குறிப்பிட்டு இருந்த அவர், அந்த கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இதைத்தொடர்ந்து, அந்த கடத்தல் கும்பலை பிடிக்க புறநகர் போலீஸ் கமிசனர் எஸ்.ஆர்.ஜாங்கிட் உத்தரவின் பேரில், பரங்கிமலை துணை கமிசனர் வரதராஜு மேற்பார்வையில், மீனம்பாக்கம் உதவி கமிசனர் குப்புசாமி, பல்லாவரம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், ஆல்பின்ராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில், சண்முகவேல் லண்டனில் இருந்தபோது இலங்கை தமிழரான பாலா என்பவருடன் சேர்ந்து தொழில் செய்து வந்தது தெரிய வந்தது. அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும், இதைத்தொடர்ந்து பாலா சென்னையில் உள்ள தன்னுடைய நண்பர் சிவா என்பவருடன் சேர்ந்து சண்முகவேலை கடத்திச் சென்று ஒரு வீட்டில் வைத்து ரூ.25 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதும், பின்னர் பல்லாவரத்தில் வைத்து சண்முகவேல் மனைவியிடம் இருந்து ரூ.17.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு அவரை விடுவித்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இதற்கிடையே போலீசார் பல்லாவரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமாக சென்ற ஒரு காரை தடுத்து நிறுத்தினார்கள். போலீசாரை கண்டதும் காரில் இருந்தவர்கள் இறங்கி தப்பி ஓடினார்கள். இருந்தபோதிலும் போலீசார் விரட்டிச் சென்று 4 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கொளத்தூர் ஜனார்த்தனம் (30), பெரம்பூர் சீனிவாசன் (28), சுரேஷ் (29), பெரியபாளையம் பாஸ்கர் (31) ஆகியோர் என தெரிய வந்தது. காரில் இருந்த கத்தி, உருட்டுகட்டைகள் மற்றும் ரூ.9 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பாலா, சிவா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Thursday 8 July 2010

உண்மையின் தரிசனம் - Video



விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் சுதுமலை உரை

http://video.yahoo.com/watch/7829256

சிறிலங்காவின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாது விசாரணைகளை மேற்கொள்க! ஐ.நா.விடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள்!


சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பணிமனை சிறிலங்கா ஜனாதிபதிக்கு நெருக்கமானதொரு மூத்த அமைச்சர் ஒருவரின் தலைமையில் முற்றுகை செய்யப்பட்டமையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாகக் கண்டனம் செய்கிறது. இந்த மூர்க்கமான முற்றுகையினை சிறிலங்கா பொலீசார் கையாண்ட முறை சிறிலங்கா அரசுக்கு எதிரான அமைதியான எதிர்ப்புப் போராட்டங்களைக் கையாளும் முறைக்கு மிகவும் மாறுபட்டதாகவும் உள்ளது.

சிறிலங்கா ஆயுதப்படையினர் பல ஆயிரக்கணக்கான தமிழர்களைத் தொடர்ந்தும் தடுப்பு முகாம்களில் வைத்திருக்கும் இவ் வேளையில் இவர்கள் தொடர்பாக அக்கறை கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கத்தை பொறுப்பான முறையில் நடந்து கொள்ளுமாறும், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவினை சிறிலங்காவினுள் அனுமதிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களின் சுமூகமான செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் இடித்துரைக்கிறது. இவ்வாறு அச்சுறுத்தல்களையும் பயமுறுத்தல்களையும் செய்வதன் ஊடாக தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை, போர் மற்றும் மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்களில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் தப்பித்துக் கொள்ள முடியாது.

சிறிலங்கா அரசாங்கத்தின் இத்தகைய பணய அரசியலுக்கு அடிபணியாது, வகுக்கப்பட்ட திட்டத்துற்கு அமைய இனப்படுகொலை, போர் மற்றும் மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைத் தொடருமாறும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையை வேண்டிக் கொள்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழுவுக்கு உரிய உதவிகளையும், ஒத்துழைப்புகளையும் வழங்குவதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தயாராக உள்ளது.

- விசுவநாதன் ருத்ரகுமாரன்
இடைக்கால முதன்மை நிறைவேற்றுனர்.

சிறிலங்கா செல்லும் உறவுகளிற்கான பிரயாண அறிவுறுத்தல் – விழிப்பாக இருங்கள்


அன்புடையீர்!

நீண்ட காலத்திற்குப் பின்னர் எமது தாயக உறவுகளை பார்க்கச்செல்லும் இரவல் தாயக உறவுகளிற்கு வணக்கம். சிங்கள ராஜபக்சாக்கள் பல்லாயிரக்கணக்கான எமது தாயக உறவுகளைத் திறந்தவெளி சிறைகளிலும் சித்திரைவதை முகாம்களிலும் அடைத்துவைத்திருப்பது உங்களெல்லோரிற்கும் தெரிந்த விடயமே. ஆகவேதான் இவற்றையெல்லாம் உல்லாசபயணிகள் ஆகிய உங்கள் மனதிலிருந்து அகற்றுவதற்காகச் சிங்களவர் உங்களுடன் பின்வரும் முறையில் நடந்துகொள்வார்கள்.

• சிங்கள சிப்பாய், புதிய புத்தவிகாரைகள், சிங்கள ஊர்சுற்றிகள், தடைமுகாம்கள், சோதனைச்சாவடிகள் இவை அனைத்துமே உங்கள் கண்களிற் தெரியும்.

இந்த நிலை உங்களிற்கே சர்வ சாதாரணமாகப்படும். ஆனால் தடைமுகாம்கள், சோதனைச்சாவடிகள், ஆயுதம் தரித்த இராணுவத்தினர் நடமாட்டம் என்பன நீங்கள் வாழும் சமுதாயத்திலும் வழமையானவையா என்பதைச் சிந்தியுங்கள்.

• சிங்கள சிப்பாய்கள் உங்களுடன் சிரித்துப் பேசுவார்கள், காக்கைவன்னியனின் வாரிசுகள் உங்களில் பலரை அன்புடன் அரவணைப்பார்கள், சிங்கள புலனாய்வாளர்கள் உங்களிற்குத் தெரியாமல் உங்களிற்குள் நுழைந்துவிடுவார்கள். இவை எதற்காகவென்ற கேள்வியெழுவது இயற்கையே. இவர்கள் உங்கள் மனதை வென்று, வெளிநாடுகளில் உங்களை வைத்தே தமக்குச் சாதகமாகப் பிரச்சாரம் செய்வதற்குப் பாவிப்பார்கள்.

• தமிழர் தேசமெங்கும் தமிழர்களை முதலாளிகளில்லாமல் நுகர்வோராக்கச் சிங்களம் திட்டமிட்டுத் தனது இனத்தவரை பெட்டிக்கடைக்காராரக்கித் தமிழர்களின் வணிகங்களை இல்லாதொழிக்க வேலைசெய்கின்றது. ஆகவே நீங்கள் உங்கள் பணத்தினை பயன்படுத்தும் போது தமிழர்களின் நிறுவனங்களைத் தெரிவு செய்யுங்கள். சுற்றுலாபோகும் போது தமிழர் தாயகத்திலுள்ள பிரதேசங்களைத் தெரிவுசெய்யுங்கள். தமிழீழத்தில் பல உல்லாசமான கடற்கரைப்பகுதிகள் பல கரையோர நகரங்களிலும் உள்ளன. மன்னார் திருகோணமலை யாழ்ப்பாணம் முல்லைத்தீவு மட்டக்களப்பு அம்பாறை என்பன குறிப்பிடத்தக்கவை.

• உல்லாச பயணத்தின் போது சிங்களதேசத்தில் முதலீடு செய்யவரும்புவோர் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள்:

சிறிலங்காவில் எந்தச் சட்டமும் ராஜபக்சகக்களால் தான் தீர்மானிக்கப்படுகின்றது. இந்த நாட்டில் ஆட்சி செய்பவர்கள் தமது சொந்தச் சட்டங்களையோ அல்லது சர்வதேசச் சட்டங்களையோ அனுசரித்து நடப்பவர்களல்லர்.

சிங்கள தேசத்தின் முதலாவது எதிரியாக இருப்பது தமிழனல்ல. தமிழர்களின் முதுகெலும்பினை உடைத்து விட்டோமென்ற இறுமாப்பில் சிங்களவர்கள் இருக்கின்றார்கள்.

அவர்களிற்கு முதலெதிரியாகவிருப்பவை மேற்குலக நாடுகளான ஜரோப்பிய ஒன்றியம், வடஅமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா என்பன. உங்களில் பலர் இந்த நாடுகளிலிருந்துதான் பயணிப்பீர்கள். இந்த நாட்டு பிரஜைகளாக இருந்தாலும் சரி இரு நாட்டு பிரஜாவுரிமைகளை உடையவர்களாகவிருந்தாலும் சரி உங்களின் உரிமைகளைச் சட்டபூர்வமாகப் பெற்றுக்கொள்வதென்பது சிறீலங்கா என்னும் சிங்கள தேசத்தில் நடைமுறைக்குச் சாத்தியானமானதல்ல.

பொருளாதாரப் பின்னடைவினால் மேற்குலகம் மிகவும் பாதிப்புற்றிருப்பதாலும் கீழைத்தேசம் முன்னணியில் நிற்பதாலும் மேற்குலகின் வேண்டுகோள்களினையோ கட்டளைகளையோ சிங்களதேசம் செவிமடுக்க மறுப்பது நீங்கள் அறிந்ததே. தமிழின அழிப்பில் முன்னணியில் நின்று ராஜபகசாக்களின் மனிதப்படுகொலைகளை நடாத்திமுடித்த கொலையாளி, சரத் பொன்சேகா சிங்களவர் மத்தியில் மிகவும் பிரபல்யமானவர்.

இந்தக் கொலையாளி இப்போது சிறையில் கம்பி எண்ணுகின்றாரென்றால் சாதாரண முதலீட்டாளர்களாக இருக்கக் கூடிய உங்கள் நிலைமையைச் சிந்தித்துப்பார்த்துச் செயற்படுங்கள். சிங்களவர்களுடன் சேர்ந்து உங்களைச் சூறையாட, காக்கை வன்னியன் கூட்டமும் காவலிருக்கின்றது.

உங்கள் முதலீட்டிற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாத தேசத்தில் பணத்தை முதலீடு செய்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

Kilde:
டென்மார்க் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்

பொன் மகேஸ்வரன்