Tuesday, 2 February 2010

Norge skal ha en grundig evaluering av hele den norske involveringen i fredsprosessen på Srilanka - விடுதலைப் புலிகள் மீது தடை விதித்ததே அமைதிப் பேச்சு முறிவிற்குக் காரணம்!


Utviklingsminister Erik Solheim vil sette i gang en grundig evaluering av Norges rolle som fredsmekler på Sri Lanka.

Vil evaluere Sri Lanka-innsats

Norske diplomater hadde en sentral rolle i fredsprosessen som endte i full krig mellom regjeringshæren og De tamilske tigrene på Sri Lanka. Norske forskere har kritisert den norske innsatsen, og nå får de en gjennomgang av hva som ble gjort, melder NRK.

– Vi skal ha en grundig evaluering av hele den norske involveringen i fredsprosessen. Det vil bli lagt ut på et internasjonalt anbud, slik at ulike forskningsinstitusjoner kan gå gjennom materialet. Folk i departementet har lagt til rette enorme bunker med referater fra ulike samtaler og annet materiale som må være av interesse, sier SV-statsråd Solheim.

Kilde: (ANB-NTB)

விடுதலைப் புலிகள் மீது தடை விதித்ததே அமைதிப் பேச்சு முறிவிற்குக் காரணம்!

சிறிலங்க அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் பயங்கரவாத இயக்கம் என்று முத்திரையிட்டு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தடை விதித்ததே அமைதிப் பேச்சு முறிந்ததற்குக் காரணம் என்று அயர்லாந்தில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயம் முடிவுக்கு வந்தததாக அத்தீர்ப்பாயத்தின் விசாரணையில் பங்கேற்ற பேராசிரியர் முனைவர் பால் நியூமேன் கூறியுள்ளார்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரில் சிறிலங்கப் படையினரின் மனித உரிமை மீறல்கள் குறித்து அயர்லாந்து தலைநகர் டப்ளினில் கடந்த ஜனவரி 14 , 15 ஆம் தேதிகளில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் விசாரணை செய்திருந்தது தெரிந்ததே.

இந்த விசாரணையில் கலந்துகொண்டு, நேரிடையாக சாட்சியமளித்தவர்களில் ஒருவர் பெங்களூர் பல்கலைக்கழகத்தின் அரசியல் துறைப் பேராசிரியர் முனைவர் பால் நியூமேனனும் ஆவார்.

இலங்கைக்குச் சென்று சமூக ஆய்வு மேற்கொண்ட இவர். அயர்லாந்து மக்கள் தீர்ப்பாயத்தில் இவர் அளித்த சாட்சியம் மிக மிக முக்கியமானதாகும்.

சென்னையில் பால் நியூமேனன் இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கைய செவ்வியிலேயே இதனைத் தெருவித்துள்ளார்.

No comments:

Post a Comment