Tuesday, 4 May 2010

Long struggle for displaced Tamils



In northern Sri Lanka, 80,000 war-displaced people still live in army-run camps, waiting while their devastated land is cleared of mines and jungle. Tens of thousands are now beginning to resettle near the homes they fled from, but it is not easy, says the BBC’s Charles Haviland.

It is early morning but sweat pours from the brows of labourers on a railway track north of Vavuniya.

With a roar of exertion, they heave a piece of rail into place with a loud clanging of hammers and crowbars.

These men are literally rebuilding the Sri Lankan railway. It is part of what the government calls the “northern spring” – the reconstruction of northern Sri Lanka’s infrastructure after the war which ended a year ago.

Just through the trees, others are rebuilding their own lives.

About 15 years after fleeing the villages round here, they have come home from the refugee camps but found their old homes vanished, destroyed by war.


Grief

In the village of Paranattahal, Subramaniam brings in his cattle at dusk. His face is etched with grief and trauma.

His wife was killed in shelling in the war’s last days as they cowered in a bunker in the final conflict zone in the north-east.

Both his son-in-law and son are now detained by the government, suspected of links with the defeated Tamil Tigers.

He can visit his son, who is in a government “rehabilitation” programme, but he doesn’t know when he will be out.

He and his daughter have been discharged from the government camps with the bare minimum to start afresh.

Subramaniam is very happy to be on his old land even though his house was demolished by the army as the frontline drew closer.

From the camps they were dropped at the town council, registered, and then took a bus to the village.

Later they were given 16 tin sheets for construction – but, he says, “that wasn’t enough to do anything, so I went to the forest, cut this timber and made this little house.”

There are two rooms, a clay stove and utensils drying outside – and the cattle.

It is very basic but he and his daughter are regaining an independence they have not had for years.

On a small plot they are growing vegetables. Smoke rises from the chimneys.

In Nochchimoddai nearby, some of the new dwellings are simply a tin room on four sticks without any covering for the earth.

One school is built from shiny new corrugated iron and a roof thatched with coconut leaves.

It is not clear when there will be the resources to build stronger structures.

Fund shortage

Some returnees are restoring and rebuilding a destroyed well. They can use it themselves and for this work they also get a bit of cash from a local non-governmental organisation.

They need it. Because there is currently a shortage of international donor funds to the war-displaced Tamils, the $220 grant offered to returnees is, for now, suspended.

Like Subramaniam, many villagers say they are glad to be back on home soil. But they do have problems.

“Because the land is being cleared, there’s not much jungle cover,” says Nagappan.

“Soldiers are deployed everywhere, too. So the women cannot go to the toilet. Toilets are urgently needed now. We need water, too. We’ll be thankful if these needs can be fulfilled immediately.”

Others have tried to grow crops but many plants have died as the rain has failed.

Those still living in the huge camps west of Vavuniya cannot farm. They are getting by in other ways.

It is still extremely difficult for the BBC to visit the camps but we meet IDPs who have come into the town on temporary exit permits.

Aid for sale

Market stalls have sprung up under bright umbrellas. But in among the usual fruit and vegetables and cheap clothing there is a curious sight – big sacks of flour, lentils and rice with the stamp of aid agencies on them.

“Not to be sold or exchanged” say sacks marked “USAID – From the American People”. It is ignored.

The refugees are here to sell their camp rations so they can get a greater variety of fresh food with the cash.

The funding crunch is making life in the camps tougher. United Nations agencies now depend on a special emergency fund to finance the camps and those resettling.

One woman, Vijayakumari, is selling everything from sanitary towels to razors to tins of chickpeas – all provided as aid, some that she has bought from other displaced people.

For her and others in the camps, the main wish is to leave.

“Life inside the camps is very difficult,” she says. “These days we only get the absolute basics.”

In the evening in Paranattahal, Sinhalese soldiers and former Tamil refugees play a good-humoured game of cricket. Here they seem to get on well.

There are army camps scattered around the north.

Critics of the government accuse them of excessively militarising post-war northern Sri Lanka.

But the military spokesman, Prasad Samarasinghe, insists that they have to prevent any possible resurgence of militancy and says they will in time give way to the police.

“Development work is going to come. Investments are going to come. The people should need security for those developments. Investors will not come if you don’t have security,” he says.

Monday, 3 May 2010

திரும்பிப் பார்க்காதே .. நட - 3


பாரதப்போர் முடிந்த சில காலத்தில் கலியுகம் பிறந்துவிடுகிறது.. அதாவது இன்றைய கலியுக மனிதன் பிறந்துவிடுகிறான்..

புதுமாத்தளன் போரும் பாரதப் போரும் 18ம் நாளும் 18ம் திகதியும் முடிவடைந்த போர்களாகும். தற்போது மே 18ம் திகதியை துயர் சுமந்த நாளாக புலம் பெயர் தமிழர் உலகம் முழுதும் அனுட்டிக்கிறார்கள். இந்த மே 18 என்றதும் நமது எண்ணங்கள் 18ம் நாள் பாரதப்போருக்குள் நுழைகிறது.. இன்று பாரதப்போருக்குள் இருந்து ஓர் உன்னத சிந்தனையை முன் வைக்கிறோம்.

பாரதப்போர் முடிந்த சில காலத்தில் கலியுகம் பிறந்துவிடுகிறது.. அதாவது இன்றைய கலியுக மனிதன் பிறந்துவிடுகிறான்..

கலியுகம் பிறந்த அந்த ஒற்றை நிமிடத்து நிகழ்வு இதுதான்…

பாண்டவர்களில் மூத்தவனாகிய உதிஸ்டிரன ஆகிய தர்மன் நல்லாட்சி நடாத்திக் கொண்டிருக்கிறான்…

அப்போது, அண்ணா கலியன் பிறந்துவிட்டான்..! , என்றபடி அர்ச்சுனன் துடித்துப் பதைத்து, வியர்த்து விறுவிறுத்து ஓடி வருகிறான்.

அன்றைய தினம் யாரோ ஒரு தாயின் வயிற்றில் இருந்து, தலைப்பக்கமாக ஒரு பிள்ளை பிறந்துவிட்டது. தலையால் பிறக்கும் மனிதனை உலகத்தில் யாராலுமே திருத்த முடியாது என்பதால் அவனுடைய பிறப்பே கலியுகத்தின் பிறப்பு என்று சொல்ல அர்ச்சனன் ஓடி வந்தான்.

அதற்கு முன் கால்புறமாக மனிதன் தாயின் வயிற்றில் இருந்து பிறந்தான் என்பது கருத்து..

ஓடி வந்தவன் அந்த அவசரத்தில் தோளில் இருந்த சால்வையை மரியாதையாக எடுத்து இடுப்பில் கட்டவும், காலில் இருந்த செருப்பை வாசலிலேயே கழற்றவும் மறந்து அண்ணன் முன் வந்து நின்றுவிட்டான்.

உதிர்ஸ்டிரனாகிய தர்மர் அவனுடைய கால்களைப் பார்க்கிறார்.. அங்கே கழற்றப்படாத செருப்பு…

அருச்சுனனின் விரல்கள் துடிக்கின்றன.. ஐயோ.. என்று நாக்கைக் கடித்துக் கொள்கிறான்…

அதே வேகத்தில் அவன் தோள்களைப் பார்க்கிறார்.. அங்கே சால்வை..

அருச்சுனன் அங்கமெல்லாம் துடிதுடிக்க அவசரமாகவும், சங்கடமாகவும் சால்வையை எடுத்து இடுப்பில் கட்டுகிறான்..

தர்மன் சிரிக்கிறான்..

, தம்பீ.. கலியன் எங்கோ பிறக்கவில்லை.. என் வீட்டிலேயே பிறந்துவிட்டானே.. , என்று செருப்பையும், சால்வையையும் காட்டுகிறான்..

அவ்வளவுதான் அதற்குமேல் அவன் எதுவுமே பேசவில்லை..

அன்றே.. அக்கணமே.. அந்த அவலத்தைத் திரும்பிப் பார்க்காமல் ஆட்சியை விடுத்து, நாட்டைவிட்டு வெளியேற முடிவு செய்தான்..

தர்மனும் அவனுடைய நான்கு சகோதரரும், பாஞ்சாலியும் இமயமலை நோக்கி நடந்து கொண்டிருக்கிறார்கள்.

அப்போது வழியில் முதலாவதாக பாஞ்சாலி மலைச்சாரலில் விழுந்து மடிகிறாள்..

திரும்பிப் பார்த்த கடைசித் தம்பி சகாதேவன்.. பலத்த குரலில் , அண்ணா ..! பாஞ்சாலி இறந்துவிட்டாள் ! , என்கிறான்…

, திரும்பிப் பார்க்காதே .. நட..! , தர்மன் ஆணையிடுகிறான்..

அதன் பின் மலைச்சாரலில் ஒவ்வொருவராக வீழ்ந்து மடிகிறார்கள்…

தர்மனோ திரும்பிப் பார்க்காமலே தொடர்ந்து நடக்கிறான்…

திரும்பிப் பார்க்காமலே நடந்த தர்மனே இறுதியில் சுவர்க்கம் செல்லும் புஸ்பக விமானத்தைத் தொடுகிறான் என்று முடிகிறது கதை…

திரும்பிப் பார்க்காதே..!

இது மாபெரும் தத்துவமாகும்..

இதுபோலத்தான் ஆதி காலத்தில் மனிதன் கடல் வழியாக தூரச் சென்றால்.. கடலும் வானமும் சங்கமிக்கும் இடத்தில் உள்ள பாதாளத்தில் விழுந்து தொலைந்துவிடுவேன் என்று பயந்து நடுங்கினான்..

இதனால் எப்போதுமே தனது படகில் ஒரு கயிற்றைக் கட்டிக்கொண்டே கடலில் பயணித்தான்..

அவன் அச்சத்தின் காரணமாகவும், தனது குடும்பத்தையும் உறவுகளையும் பிரிய மனமில்லாமலும் கயிற்றினால் கட்டிக் கொண்டு, மட்டுப்படுத்தப்பட்ட பயணங்களை மேற் கொண்டான்..

அவர்களில் இருந்து ஒரு மனிதன் வெளிவந்தான்.. அவன்தான் மகலன்..

ஒரு நாள் அவன் , திரும்பிப் பார்க்காதே.. !, என்று உரத்துக் குரலிட்டான்..

யாருமே அவன் பேச்சைக் கேட்கவில்லை..

தன் கப்பலில் இருந்த கயிற்றின் மீது ஒரு கோடரியைப் போட்டான்.. கயிறு அறுந்தது..

கப்பலில் இருந்த அனைவரும் பயத்தால் ஓலமிட்டார்கள்…

திரும்பிப் பார்க்காதே.. என்றபடியே எதிரேயுள்ள கடலை நோக்கி துணிச்சலுடன் முன்னேறினான்..

ஆம் !

அன்று திரும்பிப் பார்க்காமல் புறப்பட்ட மகலனே.. கப்பலில் புறப்பட்டு உலகத்தை முதல் தடவையாக சுற்றிவந்து, உலக சாதனை படைத்தான்..

திரும்பிப்பார்த்தவனுக்கோ கடலின் முடிவு பாதாளமாகத் தெரிந்தது..

திரும்பிப்பார்க்காமல் இலக்கை நோக்கி நடந்தவனுக்கோ உலகமே உருண்டையாகி காலடியில் கிடந்தது..

இனி புதுமாத்தளன் போவோம்..

நீதியற்ற முறையில் நடாத்தப்பட்ட புதுமாத்தளன் போரே கலியனுக்கெல்லாம் கலியன் பிறந்த தினமாகும்…

திரும்பிப் பார்க்கதே என்று கூறி பிரபாகரன் நடந்த தினமும் அதுதான்..

பிரபாகரன் போல நீயும் திரும்பிப் பார்க்காதே உன் இலக்கை நோக்கி நட…

உன் எதிரில் இருப்பது கடலின் முடிவல்ல.. உன்னை அழிக்கும் பாதாளப் பெருவெளியல்ல..

உன் கண்ணீரைத் துடைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் நட..

வெற்றி உனது கையில் வரும்..

அதற்கு முன் கொஞ்சம் நில்..

உலகத்தின் பாச பந்தங்களை அறுத்துக் கொண்டு.. அமைதிப் பெரு வெளிக்குள் நுழை..

கொஞ்சம் காது கொடுத்துக் கேட்டுப்பார்..

பிரபாகரன் திரும்பிப் பார்க்காமல் நடந்து கொண்டிருக்கும் காலடி ஓசைகள் உன் காதுகளில் கேட்கும்..

திரும்பிப் பார்க்காதே…நட..

புதுமாத்தளன் நமக்கு கண்ணீரல்ல - 2


ஒலிம்பிக் போட்டியின் உன்னத தத்துவம்..

புதுமாத்தளனில் புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள் என்று பல ஊடகங்கள் எழுதி வருகின்றன. இந்த உலகத்தில் எதுவுமே முற்றாகத் தோற்கடிக்கப்படுவதுமில்லை முற்றாக வெற்றி கொள்ளப்படுவதுமில்லை. இதை அறிய ஒலிம்பிக் போட்டிக்குள் ஒரு விளக்கம் இருக்கிறது.

எத்தனையோ வருடங்களாக கடும் பயிற்சி எடுத்து, ஒலிம்பிக் போட்டிக்கு வீரர்கள் வருகிறார்கள். அதில் ஒருவன் மட்டும் தங்கப்பதக்கம் பெறுகிறான், மற்றவர்களால் அது முடிவதில்லை.

தோல்வியடைந்த ஒருவன் நான் தோற்கடிக்கப்பட்டுவிட்டேன், இனி எனக்கு எதிர்காலமே இல்லை என்று கண்ணீர்விட்டால் ஒலிம்பிக் போட்டியின் முடிவுதான் என்ன ?

இதுவரை காலமும் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவர்களை பட்டியலிட்டுப் பாருங்கள்.. தொண்ணுhற்றி ஒன்பது விழுக்காடு தோல்வியடைந்தவர்களே.. இவ்வளவு பேர் தோல்வியடையக் காரணமான ஒலிம்பிக் போட்டியை ஏன் நடாத்த வேண்டும். தொண்ணுhற்றி ஒன்பது வீதம் வீரர்களின் தோல்விக்குக் காரணமான ஒலிம்பிக் போட்டியை நிறுத்துவதுதானே முறை..

ஆனால் உண்மை அப்படியில்லை ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டுமென்ற ஆர்வம் நாளுக்கு நாள் பெருகிச் செல்கிறதே ஏன்.. ?

ஒலிம்பிக்கில் பங்கேற்று தோல்வியடைந்தாலும் அவருக்குப் பெயர் வீரரே.. வெற்றியடைந்தாலும் அவருக்குப் பெயர் வீரரே..

தோல்வியடைந்தவன் கோழையல்ல, அவனும் வீரனே என்பதுதான் ஒலிம்பிக்கின் தத்துவமாகும். களத்தில் இறங்கும்போதே அவன் வீரனாகிவிடுகிறான், இதுதான் ஒலிம்பிக் தரும் சிறப்பு..

ஆனால் ஒரு கேள்வி…

ஒலிம்பிக் போட்டியில் அதிபாரக் குத்துச் சண்டையில் மைக் தைசான் களத்தில் இறங்கிவிட்டார்…

இவருடன் மோதுவதற்கு எல்லோருமே பயந்து நடுங்குகிறார்கள்…

அப்போது ஓர் ஐந்து வயது சிறுவன் அச்சமின்றி கோதாவில் இறங்குகிறான்..

இந்தப் போட்டியில் சமநிலை இல்லை..

ஆனால் ஐந்து வயது சிறுவன்தானே.. இவனை அடித்து வீழ்த்தி இலகுவாக தங்கப்பதக்கத்தை எடுத்துவிடலாமென மைக்தைசான் நினைத்தால் அக்கணமே மைக்தைசான் தோல்வியை தழுவிவிடுவார். உலகம் அவருடைய வெற்றியை ஒரு பொருட்டாக மதிக்கவே மாட்டாது.

மாறாக அதே போரில் சிறுவன் வென்றுவிட்டால் தைசானுக்கு அதைவிட பெரிய கேவலம் எதுவுமே கிடையாது.

வென்றாலும் அவமானம், தோற்றாலும் அவமானம் என்ற நிலை.. இப்போது மைக்தாய்சான் என்ன செய்ய வேண்டும். அந்தச் சிறுவனின் ஓர்மத்தைப் பாராட்ட வேண்டும். அவனைக் கட்டியணைத்து, இந்த உலகத்தில் யாருமே துணியாத ஒரு காரியத்தை நீ செய்ய வந்துவிட்டாய் என்று போற்றி அவனுக்கே, தங்கப்பதக்கத்தைக் கொடுக்கவும் வேண்டும்.

இதுதான் வீரத்திற்கு அழகு..

ஆனால் புதுமாத்தளனில் நடந்தது என்ன..

சுமார் 32ற்கும் மேற்பட்ட உலக நாடுகள் ஐந்து வயது சிறுவனுக்கு ஒப்பான சிறிய படையணியை சுற்றி நின்று மோதினார்கள்.

சண்டை ஆரம்பித்தவுடன் சிறுவன் பயந்து ஓடவில்லை.. அதைத் துணிவுடன் எதிர் கொண்டான்..

அவனுடைய தோல்வி உண்மையான தோல்வியா..?

அவன் தோற்றுவிட்டான் என்று நாம் அழலாமா ?

ஆடுகளம் சமமாக இல்லாத இடத்தில் நம் ஈழத் தமிழ் வீரர்கள் மோதினார்கள்.. அவர்கள் அழிக்கப்படவில்லை.. இப்போரில் அவர்களுக்கே வெற்றி..

இந்த உண்மையை உணர்ந்து நமது கண்ணீரை ஆனந்தக் கண்ணீராக மாற்ற வேண்டும்.

சங்கப்பாடலில் இதற்கு இன்னொரு உதாரணம்…

குடும்பத்தில் எல்லோரும் இறந்த பின் தன் சிறுவயது பிள்ளையை போர்க்களம் அனுப்புகிறாள் தாய்..

அவன் மார்பிலே வேலேந்துகிறான்..

அந்தச் சிறுவனை வென்றவர்கள் யார்…

அவர்கள் வரலாற்றில் வீரர்களாகவா இடம் பெற்றார்கள்…

இல்லை…

தோல்வியடைந்த அந்தச் சிறுவனே வெற்றியாளன்.. அவனே வரலாற்றில் நின்றான்.. வெற்றி பெற்றோம் என்று மார்தட்டிய அனைவரையும் வரலாறு அடித்து சென்றுவிட்டது…

இப்போது சொல்லுங்கள்…

தனது சிறிய படையணியோடு உலகத்தையே துணிந்து எதிர்த்த பிரபாகரன் அடைந்தது தோல்வியா…?

தன் பிள்ளைகள் மனைவி, வயதான பெற்றோரைக் கூட பாதுகாப்பாக வேறிடம் அனுப்பாது மக்களோடு மக்களாக உலகை எதிர்த்து களத்தில் நின்ற அந்த வீரன் அடைந்தது தோல்வியா..

எண்ணிப்பாருங்கள்…

நாம் தோல்விக்காக கண்ணீர்விட்டால் நம்மை உலகம் மூடர் என்றுதான் அழைக்கும்..

நாம் அடைந்தது தோல்வியல்ல.. வெற்றி..

தோல்வியென்று கண்ணீர் விட்டால் நமது பிரச்சனைக்கு தீர்வு எதுவும் கிடைக்காது..

வெற்றி என்று மார்தட்டி நின்றால்..

நமது கண்களில் வடியும் கண்ணீரை ஆனந்தக் கண்ணீராக மாற்றினால்…

விடிகாலை வர முன் விடிவு வரும்..

ஆம்..!

நம் மக்கள் உலகச் சரித்திரம் படைத்த மாதமே இந்தப் புதுமாத்தளன் போர் நடைபெற்ற மாதம் என்ற உண்மையை உணர்ந்து, நாம் ஒவ்வொருவரும் புது வலு பெற வேண்டும்.

புதுமாத்தளனிற்குள் புதைந்துள்ள புதுமை - 1



புலம் பெயர் தமிழ் மக்களில் பலர் புதுமாத்தளனில் நடைபெற்ற தமிழின படுகொலைகளின் கவலைகளை மறக்கவில்லை. அவர்களின் தார்மீகக் கோபம் அணையாத நெருப்பாகவே இருந்து வருகிறது. வரும் மே 18 புதுமாத்தளன் துயர் சுமந்த ஓராண்டு நினைவு வருகிறது.

புயலுக்குள் புதுமை கண்ட புகழ் மன்னன் பாரி.

சங்க காலத்தில் புகழ் பெற்ற மன்னன் பாரியை அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. புயல் காற்றில் சிக்குண்ட முல்லைக் கொடிக்கு தன் தேரையே கொடுத்து உலகப் புகழ் பெற்றவனே பாரியாகும்.

அடடா நமது கொடை வள்ளல் பாரி ஒரு முல்லைக் கொடிக்காக எவ்வளவு இரங்கியிருக்கிறான் என்ற கோணத்தில்தான் இதுவரை நாம் பாரி கதையை படித்து வருகிறோம். ஆனால் அதற்கும் அப்பால் பாரி கதையில் பல புதுமைகள் இருக்கின்றன இதோ அதில் ஒன்று..

புயல் காற்று வீசுகிறது.. யாருமற்ற புறம்பு மலையை அண்டிய பொட்டல் வெளியில் ஒரு முல்லைக்கொடி ஆதரவின்றி வட்டமாகச் சுழல்கிறது.. சொற்ப நேரத்தில் அது கொடுங்காற்றில் துண்டு துண்டாய் அறுபட்டு சிதறிப் பறக்கப்போகிறது.

பக்கத்தில் பாரி அந்தக் கொடிய காட்சியைப் பார்த்தபடி அவன் சிந்திக்கிறான்…

உலகத்தின் சக்தியெல்லாம் ஒன்று திரண்டு அந்த வெளியில் பெருங்காற்றாக வீசுவதை உணர்கிறான். இந்தக் காற்றை நிறுத்தும் வலு நமக்கு இருக்கிறதா என்று சிந்திக்கிறான்.

இல்லை.. அங்கு வீசிக்கொண்டிருக்கும் புயல் காற்று மனிதசக்திக்கு அப்பாற்பட்டது யாராலுமே நிறுத்த முடியாதது..

என்ன செய்யலாம்…

ஓரெயொரு நொடி..

அவன் மூளை அபாரமாக வேலை செய்கிறது…

படீர்… மூளையில் ஓர் அதிர்வு…

மகத்தான அதிசயம் ஒன்று அந்த ஆபத்தில் மறைந்திருப்பதை சட்டெனக் கண்டு கொண்டான்.

உலகத்தின் பெருமூச்சாய் வீசும் அந்தக் காற்றுக்குள்தான் உலகப்புகழ் பெறும் இரகசியம் புதைந்து கிடப்பதை கண்டு கொள்கிறான்.

ஒரேநொடி…

உடனடியாக தனது தேரை விட்டுச் சரேலென இறங்குகிறான்…

முல்லைக் கொடியின் முன்னால் அதை நிறுத்துகிறான்.. மெல்லெனக் கொடியை எடுத்து தேரில் படர விடுகிறான்…

முல்லைக் கொடிக்கு தேரைக் கொடுத்த உலகப்புகழைப் பெறும் உன்னதம் அந்தப் புயலுக்குள்தான் புதைந்து கிடக்கிறது என்பதைக் கண்டு கொள்கிறான்.

இரண்டாயிரமாண்டு அழியாப் புகழைப் பெற இயேசுநாதர் சிலுவை சுமந்து முள் முடி தரித்தார்..

எகிப்தியர்கள் மாடாய் முறிந்து, ஓடாய் இளைத்து பிரமிட்டுக்களை அமைத்து உலகப் புகழ் பெற்றார்கள்.

ஆனால் பாரியோ ஒரு தேருடன் இரண்டாயிரம் ஆண்டுப் புகழை ஒரே நொடியில் பெற்றுக் கொண்டான்..

இனி சிந்தனைக்கு வருவோம்…

புயல் ஏன் வந்தது ?

முல்லைக்கொடி ஏன் உயிருக்குப் போராடியது..?

அந்த வழியாக பாரி மட்டும் ஏன் வரவேண்டும்..?

மூன்று நிகழ்வுகளையும் ஒன்றாக்கிப் பாருங்கள் உலகப் புகழ் பெறும் உன்னதம் தன்னை அடையாளம் காட்ட உருவாக்கிய மூன்று பெரும் காட்சிகள்தான் இவை என்பதை உணர்வீர்கள்..

முல்லைக் கொடிக்கு தேரைக் கொடுத்ததோ அதன் உயிரைக்காப்பாற்றியதோ இங்கு புதுமையல்ல…

புயல் வந்தபோது கவலை கொள்ளாமல் அதற்குள் இருந்த புதுமையைக் கண்டு பிடித்து உலகப் புகழ் பெற்றதுதான் அதில் உள்ள உன்னதமான செய்தியாகும்.

வாய்ப்புக்கள் பிறப்பிலிருந்தும் வரலாம் இறப்பில் இருந்தும் வரலாம்.. ஆனால் அது ஒரு முறைதான் வரும்.. அது வரும்போதே பற்றிக் கொண்டால் கவலைகள் பறக்கும் உலகப்புகழ் கைகளில் கிடைக்கும்..

இது பாரி முல்லைக்கொடிக்கு தேர் கொடுத்த கதையல்ல அவன் உலகப் புகழ் பெற்ற கதை.

இனி புதுமாத்தளனுக்கு வாருங்கள்…

புதுமாத்தளன்தான் அன்றைய புறம்புமலைப் பொட்டல் வெளி…

முல்லைக் கொடி போலத்தான் புயலில் சிக்குண்ட நமது மக்கள்..

புயல் காற்றுத்தான் அவர்களை அழிக்க ஒன்று திரண்ட உலக சமுதாயம்…

அன்று தேருடன் வந்த பாரி போலத்தான் புலம் பெயர் தமிழ் மக்களாகிய உங்களின் நிலை..

இந்த நான்கு முனைகளையும் இணைத்துப் பாருங்கள்..

பாரிபோல உங்கள் மூளையை நாற்புறமும் சுழல விடுங்கள்..

இன்று நீங்கள் வெறும் கண்ணீர் விடுவதைப் போல அன்று பாரியும் வெற்றுக் கண்ணீர்விட்டிருந்தால் விளைவு என்னவாகியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்…

இன்று உங்கள் அறிவையும், கண்களையும் மறைத்து நிற்கும் கண்ணீர் போல பாரியின் கண்களும், அறிவும் கண்ணீரில் மறைந்து போயிருக்கும்…

ஆம்…

புதுமாத்தளன் என்ற போர் நீங்கள் கவலைப்படுவதற்காக வரவில்லை என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்..

புலம் பெயர் தமிழன் உலகப் புகழ் பெறும் உன்னதம் அதற்குள்தான் புதைந்து கிடக்கிறது என்ற உன்னதத்தைக் கண்டு பிடிக்க காலம் உங்கள் முன் ஒரு சவாலை விட்டிருக்கிறது..

புலம் பெயர் வாழ்வையும், பொருளாதாரத் தேரையும், தாயகத்தில் புயலையும் ஏன் படைத்தான் இறைவன் என்றும் எண்ணிப் பாருங்கள்…

பொங்கி அழவேண்டிய இடமல்ல புதுமாத்தளன்…

பொங்கி எழவேண்டிய இடமே புதுமாத்தளன்..

எண்ணங்களை மாற்றுங்கள் புதுமாத்தளன் என்றால் புதிய மாற்றங்களை செய்யுங்கள் என்பதுதான் பொருளாகும்..புதுமை பெறுங்கள்…

போர்க் குற்றவியல் நாள் - மே 18 (War Crimes Day May – 18)























மனித நேயப் பண்பாடும் மனித உரிமைகள் பற்றிய கரிசனைகளும் உச்சநிலை அடைந்துள்ள 21 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கை தனது நாட்டின் பகுதியினரான தமிழர்கள் மீது நேரடித் தாக்குதல் நடவடிக்கையை முப்படை மூலம் மேற்கொண்டுள்ளது.


வடக்கின் வன்னி நிலத்தில் வாழ்ந்த அப்பாவித் தமிழர்கள் இந்தத் தாக்குதலுக்கு இலக்காகினர். தம்மைப் பாதுகாக்கும் வலுவற்ற ஆண், பெண், சிறுவர், குழந்தைகள் வயது வேறுபாடின்றித் தாக்கப்பட்டனர். தமது பாரம்பரிய பூர்வீக நிலங்களில் வாழ்ந்த மூன்று இலட்சம் வரையிலான வன்னி மக்கள் இரானுவத்தினரால் படிபடியாக விரட்டிச் செல்லப்பட்டு மனித வாழ்வுக்குச் சாதகமற்ற காட்டுப் பகுதியில் முட்கம்பியால் சுற்றி வளைக்கப்பட்ட தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரச படைகளின் இறுதிகட்டத் தாக்குதலின் போது 40,000 க்கும் மேற்பட்ட தமிழ்ப் பொது மக்கள் இலக்கு வைத்து தாக்கப்ப்டடு உயிரிழப்பைச் சந்தித்தனர். இந்த பாரிய உயிரிழப்புக்கள் மே 18 ஆம் நாள் மேற்படி போர் முடிவுறும் நாளுக்கு முந்திய குறகிய காலத்தில் நடைபெற்றன. முப்படைகளின் தாக்குதலால் நடைபெற்ற இந்தப் படுகொலைகள் முள்ளிவாய்க்கால் என்ற கடலோரப் பிராந்தியத்தில் நடைபெற்ற காரணத்தால் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் என்று அழைக்கப்படுகின்றன. தமது சோக வரலாற்றின் குறியீடாகவும் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும் இவ்வருடம் தொட்டுத் உலகத் தமிழர்கள், ஈழத்தமிழர்கள், மனித நேய ஆர்வலர்கள் ஆகியோர் மே 18 நாளைப் “போர்க் குற்றவியல் நாள்” (War Crimes Day May – 18) என்று அடையாளப் படுத்தியுள்ளனர்.

இலங்கைப் படைகள் புரிந்த சர்வதேச மனிதநேயச் சட்ட மீறல்கள் மனித உரிமை நியமங்களுக்குப் புறம்பான செயல்கள் (breaches of inter national humanitarian law and abuses of human rights norms) தண்டனைக்குரிய குற்றங்களாகும் இலங்கைக்கான ஜீ.எஸ.பி பிளஸ் வரிச் சலுகைகளை மறுக்கும் அறிக்கையில் 2010 மூன்று சர்வதேசச் சட்டங்களைச் சிறிலங்கா மீறியுள்ளதாக ஜரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது. ஆவையாவன 1) சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை. The inter national covenant on civiland politicalrights – iccpr. 2) சித்திரவதை மற்றும் கொடிய மனிதத் தன்மையற்ற அல்லது இழிவான நடத்தை அல்லது தண்டனைகளுக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கை. The convention against torture andother cruel inhuman or degrading treatment orpunishment – cat 3) சிறுவர் உரிமைக்கான சர்வதேச உடன்படிக்கை. The convention on the rights of the child.

இந்தச் சர்வதேசச் சட்டங்கள் குறிப்பிடும் உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ளவில்லை என்றும் பொது மக்களின் பாதுகாப்புக்கு எதிராகப் பொலிஸ், இராணுவம், விசேட அணிகள், துணைப்படைகள் என்பன தண்டனை அச்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ள அரசு அனுமதித்ததாகவும் ஜரோப்பிய ஒன்றிய அறிக்கை குறிப்பிடுகிறது. அரச படைகளின் அத்து மீறல்களைப் பதிவு செய்வதற்கு உள்ளுர் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் வழங்கிய தகவல்கள் தமக்குப் பயன்பட்டதாக ஜரோப்பிய ஒன்றியத்தினர் குறிப்பிடுகின்றனர்.

அமெரிக்கா இராஜாங்கச் செயலகம் மார்ச் 2010 இல் வெளியிட்ட 2009 ம் ஆண்டிற்கான மனித உரிமை அறிக்கை. கடந்த வருட மே மாதக் காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் பல்வேறு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் சுதந்திரமாக ஒன்றுகூடல், பேச்சு சுதந்திரம், நடமாட்ட சுதந்திரம் என்பனவற்றை மீறியதாகவும் குறிப்பிடுகிறது இந்தக் குறிப்பு செட்டிக்குளம் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டோர் பற்றியதாகும் மேலும் ஒரு முன்னிலை தொண்டு நிறுவனம் உலக ஊடகங்களின் பார்வையைப் பெறாத மனித அவலம் செட்டிக்குளத்தில் நடப்பதாக அறிக்கை வெளியட்டுள்ளது. உணவு மற்றும் மருந்து பற்றாக்குறை அங்கு பரவலாக நிலவுவதாகவும் அது தெரிவிக்கிறது.

வன்னி வாழ் தமிழ் மக்கள் மீது கொடிய யுத்தத்தைக் கட்டவிழ்த்து விட்ட சிங்கள பௌத்த பேரினவாத அரசு நாளும் விமானக் குண்டு வீச்சுக்களையும் எறிகணைத் தாக்குதல்களையும் நடத்தியது குடியிருப்புக்கள், வணக்கத் தலங்கள், மக்கள் கூடும் பொது இடங்கள், பள்ளிகூடங்கள், மருத்துவமனைகள், நிவாரணம் வழங்கும் மக்கள் நெரிசலாக நிற்கும் கடைகள் என்பன தாக்தல்களுக்கு உள்ளாகின. சாட்சிகள் இல்லாத இனப்படுகொலையை இலங்கை அரசு நடத்தியது. இந்த மக்கள் மத்தயில் நிலை கொண்டு ஓரளவேனும் உதவி செய்து கொண்டிருந்த ஜநா உதவி அமைப்புக்கள், எம்.எஸ்.எப் மருத்துவ உதவி வழங்கும் தொண்டு நிறுவனம், சிறுவர் நலன் காக்கும் சிறுவர் பாதுகாப்பு நிதியம், ஒக்ஸ்பாம் ஆகிய சர்வதேச நிறுவனங்கள் அரசின் மிரட்டல்களுக்குப் பணிந்து வன்னியில் இருந்து வெளியேறின. இதனால் காடுகளிலும் மணல் வெளிகளிலும் மடிந்து கொண்டிருந்த தமிழ் மக்கள் தனிமைப் படுத்தப்பட்டனர்.

மனிதநேய நியமங்கள் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது வாழ்விடம், தோல்நிறம், வரலாறு, நாகரீகம் போன்ற வேறுபாடுகள் இந்த நியமங்களையும் பிரமாணங்களையும் எவ்வகையிலும் மாற்ற முடியாது. தனித்துவங்களுக்கு இடமளிக்காத பொது நியமம் போரின் போது வதைபடும் அனைத்து சிவிலியன் பொதுமக்களுக்கும் நீதி வழங்கும் கட்டாய நிலையில் இருக்கிறது. தமிழர்களை இப்படித்தான் நடத்துவோம் அதற்க்கான சட்ட திட்டங்களை நாம் இயற்றியுள்ளோம் என்ற சிங்கள அரசின் வாதம் சர்வதேச மனிதநேயச் சட்டங்களின் முன்நிலையில் எடுபட வாய்பில்லை. எனவே சிங்களப் படைகள் புரிந்த அட்டூழியங்களுக்கான தண்டனையை சர்வதேச சட்டம் வழங்காமல் இருக்கமுடியாது.

போரில் ஈடுபடுவோர் கடைபிடிக்கவேண்டிய விதி முறைகளை ஜெனிவா உடன்படிக்கை (Geneva convention) பட்டியலிடுகிறது போர் கைதிகள் நடத்தப்படும் முறைகள் பற்றியும் சரனடையும் போராளிகளுக்குரிய பாதுகாப்புக்கள் பற்றியும் இந்த உடன் படிக்கை எடுத்துக் கூறுகிறது ஜெனிவா உடன் படிக்கையை அமுல் படுத்தும் பொறுப்பு ஐ.சி.ஆர்.சியின் பொறுப்பாகும் சர்வதேச மனிதநேயச் சட்டங்களின் பாதுகாவலனாகவும் போரில் ஈடுபடும் மனித குலத்தின் மனச் சாட்சியாகவும் ஐ.சி.ஆர்.சி (icrc) இடம் பெறுகிறது பொது மக்களுக்கு எதிராக மாத்திரமல்ல சரண்புகுந்த எல்ரிரிஈ போராளிகளுக்கு எதிராகவும் இலங்கை படையினர் புரிந்த மனித நேயச் சட்டங்களுக்குப் புறம்பான அத்து மீறல் களுக்கு சட்ட நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு ஐ.சி ஆர் சிக்கு உரியதாகும்.

இரண்டாம் உலகப் போர் முடிந்த கையோடு இரு முக்கிய போர் குற்றவியல் நீதி மன்றங்கள் யேர்மனியிலும் யப்பானிலும் அமர்வுகளை மேற் கொண்டன போரில் வெற்றி பெற்ற நாடுகளின் நீதி மன்றங்களாக இவை அமைந்தன யேர்மன் மற்றும் யப்பான் இராணுவத் தலைவர்கள் நீதி விசாரணை செய்யப்பட்டுத் தண்டிக்கப் பட்டனர் அதன் முக்கியத்துவம் கருதி யேர்மன் நாட்டின் நூறெம்பேர்க் நீதி விசாரணைகள் பற்றிப் பார்ப்போம். Nuremberg trials என்றழைக்கப்படும் இந்த விசாரணைகள் 20 நவம்பர் 1945ல் ஆரம்பித்து 218 நாட்கள் நடைபெற்றன யேர்மன் நாசிப் படைத் தலைவர்கள் மீது நான்கு குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டன அவையாவன

01) அமைதிக்கு எதிரான குற்றங்கள் - ஆக்கிரமிப்புப் போர்களைத் தொடுத்தல்

02) போரியல் குற்றங்கள் - போர் சட்டங்கள் மரபுகளை மீறுதல்

03) மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் - படு கொலைகள், அடிமைப் படுத்தல், சிவிலியன் பொது மக்களை நாடு கடத்தல்

04)சதி செய்தல் - மேற் கூறிய மூன்று குற்றங்களைச் செய்வதற்குப் பொதுத்திட்டம் தீட்டுதல்.

வரலாறாகிய நூறெம்பேர்க் விசாரணைகளுக்கு முக்கியத்துவம் உண்டு போர் குற்றம் செய்த இராணுவத்தினர் தண்டிக்கப்படுவர் என்ற கோட்பாடும் மேலிடத்துக் கட்டளையை நிறைவேற்றுகிறோம், நாமாகக் குற்றம் இழைக்க வில்லை என்ற இராணுவத்தினர் வாதமும் கவனத்தைப் பெற்றன மேற் கூறிய கோட்பாடு இன்ற வரை நிலைத்து நிற்கிறது இராணுவத்தினரின் மேலிடத்துக் கட்டளை வாதம் அன்றும் இன்றும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

இன்று நிலவரம் வித்தியாசமாக இருக்கிறது ரோம் நகரில் கைச் சாத்திடப்பட்ட உடன் படிக்கையின் பிரகாரம் சர்வதேச குற்றவியல் நீதி மன்றம் ஹாக் நகரில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ளது (Rome statute of the international criminal court- icc-at the Hague) ரோம் உடன் படிக்கையில் 110 உலக நாடுகள் மாத்திரம் கைச்சாத்திட்டுள்ளன இலங்கை உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக மாத்திரம் ஐசிசி எனப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் நேரடியாக வழக்கத் தொடர முடியும் எனவே இலங்கைக்கு எதிராக ஐசிசியினால் வழக்குத் தொடர முடியாது இலங்கை புரிந்த போர் குற்றங்களுக்காக அதன் இராணுவ அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் ஆகியோரை சர்வசேத குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு மாற்று உபாயம் இருக்கிறதா என்ற வினாவுக்கு இருக்கிறது என்பது தான் பதில்.

ஐநா செயலாளர் நாயகம் ஐநா பாதுகாப்பு சபை ஆகியோர் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே இலங்கைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த முடியும். பான் கீ மூன் இந்தப் பிரச்சனையைக் கையாள்வதில் ஏற்கனவே பின்னடைவைச் சந்தித்துள்ளார் போர் உக்கிரமடைந்த காலத்தில் உலக அமைதிக்குப் பொறுப்பான ஐநாவின் அமைதி நடவடிக்கைகளை முன்னெடுப்பவருமான செயலாளர் நாயகம் பொறுப்பற்ற விதத்தில் நடந்துள்ளார் முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்களில் பாரிய போர்க் குற்றச் சம்பவங்கள் நடந்ததை திருவாட்டி நவநீதம்பிள்ளை உறுதிபட சுட்டியதோடு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துச் சொன்னார். அதன் பின் பான் கீ மூன் விழித்துக்கொண்டார்.

இலங்கை விவகாரத்தில் மத்தியட்சம் வகித்த நோர்வேயின் இராசதந்திர அறிக்கையின் படி இலங்கைப் போர்க் செயலாளர் நாயகத்தின் வலுவற்ற கையாள்கைக்கு மீண்டுமொரு உதாரணமாக அமைகிறது ஆயிரக் கணக்கான சிவிலியன்கள் கொல்லப்படும் போதும் தமது வாழ்விடங்களில் இருந்து விரட்டப்படும் போதும் செயலாளர் நாயகம் வலுவற்ற பார்வையாளராக இருந்தார். உலகின் பிணக்குகளைத் தீர்க்கும் பொறுப்பு வாய்ந்த ஐநாவும் செயலாளர் நாயகமும் வாளாவிருந்துள்ளனர் இவ்வாறு அந்த உயர்மட்ட அறிக்கை குற்றஞ் சுமத்துகிறது.

நியூயோர்க்கின் இன்னர் சிற்றி பிறெஸ் என்ற ஊடகத்திற்கு நேர்காணல் வழங்கிய ஐநாவுக்கான பிரான்சு இராசதந்திரி ஜெராட் அவுட் (Gerard Araud) இலங்கை விவகாரத்தில் ஐநாவும் செயலாளர் நாயகமும் ஆமை வேகத்தில் செயற்பட்டதற்கு உறுப்பு நாடுகளின் குறிப்பாக இந்தியா, சீனா, ஆகியவை கொடுத்த அழுத்தம் தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை விவகாரம் பற்றித் தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஒரு நிபுணர் குழுவை நியமிக்கப் போவதாக பான் கீ மூன் அண்மையில் தகவல் வெளியிட்டுள்ளார் இது பற்றிய அறிவிப்பை இலங்கை சனாதிபதி மகிந்த ராஜபக்சாவுக்கு மேற்கொண்ட பான் கீன் மூன் நிபுணர்கள் குழுவின் முடிவின் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

செயலாளர் நாயகத்தின் பரிந்துரை ஆதாரங்களோடு ஐநா பாதுகாப்புச் சபைக்குப் சமர்பிக்கப்பட்ட பின் பாதுகாப்புச் சபை சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றினால் குற்றவாளிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் செயலாளர் நாயகத்தின் பரிந்துரையிலும் பாதுகாப்புச் சபையின் தீர்மானத்திலும் இலங்கையின் தலைவிதி தொங்கிக் கொண்டிருக்கிறது எனினும் இந்தியாவும் சீனாவும் இருக்கும் வரை இலங்கை அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.

குற்றவியல் நீதி மன்றத்தின் நடவடிக்கைக்குக் கால வரையறை கிடையாது 1994 ல் 600,000 ருட்சி இனத்தவர்களின் படுகொலைக்குப் பொறுப்பான மூன்று ஹுட்டு இன் அமைச்சர்கள் 2005 ம் ஆண்டில் அதன் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர். அரசியல் தலைவர்களும் தண்டிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. தமிழர்களுக்கு எதிரான போரை நடத்திய மகிந்த ராஜபக்ச நிகழ்வுகள் சரிவர நடந்தால் தண்டிக்கப்படலாம். சேர்பியா நாட்டின் அதிபர் சுலொபோதன் மிலோசேவிச் நான்கு வருட விசாரணைக்குப் பின் நீதி மன்றச் சிறையில் தண்டணைக்கு முன்னர் மார்ச் 2006 இல் இறந்தார் பல்லாயிரம் பொஸ்னிய முஸ்லிம்களை 1995ல் கொன்ற றடோவன் கறாட்சிக் 2008ல் நீதி மன்றத்தின் முன்னர் நிறுத்தப்பட்டார்.

சிறிலங்காவின் சனாதிபதி படைத்தலைவர்கள் ஆகியோர் இப்போதைக்கு நட்பு சக்திகளின் உதவியால் தப்பிக் கொண்டாலும் நூல் இழையில் தலைக்கு மேல் தொங்கும் கூரிய கத்தி போல் அவர்கள் செய்த தமிழினப் படுகொலைக் குற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் இதற்காக நாம் எமது பங்களிப்பைச் செய்வது அவசியம் எம்மை உலகம் மறக்க விடாமல் எம்மால் இயன்ற பரப்புரைகளையும் கவன ஈர்ப்பக்களையும் தொடர்சியாக மேற்கொள்வது அத்தியாவசியம். அமெரிக்க நகர் ஒன்றில் தொழிலாளர்களுக்கு எதிராக பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட தொழிலாளர்கள் நினைவாகவே மே 01ம் நாள் உலகத் தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதைப்போல் மே 18 போர்க் குற்றவியல் நாளாக உலக வரலாற்றில் இடம் பெறச் செய்ய அனைத்தையும் நாம் முன்னெடுக்கவேண்டும்.

'Global Cemetery' - May is the month of remembering the massacre of Tamils in Sri Lanka

 
Sri Lankan, Sinhala state not only committed crimes against humanity, dire rights abuses and war crimes against section of its citizens (Tamils), but legitimated its actions along with the support of its powerful friendlier nations including China and others.

It is sad turn of events that the whole world was not able to prevent slaughter of more than 40,000 Tamils and maiming of more than 50,000 including women and children. There are still more than 100,000 Tamil Internally Displaced People (IDPs) which includes thousands of children illegally held up in many Sri Lankan government run, in-adequately managed, poorly fed, military guarded, and over crowded detention camps.

These statistics were confirmed by the United Nations recently.

All of these people became refugees in their own land. In addition, more than 11,000 young Tamils who were allegedly had some sort of connection to Tamil rebels are being locked up in secret detention camps without any access to aid workers or independent media for the past eleven months.

Tamil Diaspora must continue to expose Sri Lanka for its dastardly act of crimes against humanity against Tamils, violating both international humanitarian and human rights laws of Tamils for the past 62 years and particularly in the last phase of the military operation against Tamils early last year. Sinhalese have shown to other nations of the world that it is their way or the highway as far as the international norms are concerned.

Norway election results - Transnational Government of Tamil Eelam - நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்காக தெரிவான நோர்வே பிரதிநிதிகள்













Tamiler danner transnasjonal regjering

Tamiler i Norge har valgt tre personer til den nye Transnasjonal regjering hvor representanter fra hele verden vil bli representert.

Etter at krigen på Sri Lanka tok en dramatisk slutt i mai i fjor, tok sentrale personer i den tamilske diasporaen initiativ til å forme en Transnasjonal Regjering med demokratiske virkemidler.

Følgende personer er valgt under valget som foregikk den søndag i fem regioner i Norge, i følge en pressemelding.

Jeyasri Balasubramaniam, kvinne 49 år
Murali Sivanandan, mann 46 år
Sivakanesan Thillaiampalam, mann 49 år

I alt 8 personer fra Norge kjempet om plass i det nye verdensrådet for tamiler.

3500 norsktamiler deltok under valget. Det er litt over 50 prosent av alle stemmeberettigede. Valget foregikk samtidig over hele verden. 135 representanter vil representere i verdensrådet for tamiler, i følge pressemeldingen.


நோர்வேயிலிருந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு 3 பிரதிநிதிகள் தெரிவாகியுள்ளனர்.

நேற்று (02.05.2010) நோர்வே தழுவிய நிலையில் நடைபெற்ற தேர்தலில் நோர்வேயின் கிழக்குப் பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 6 வேட்பாளர்களும்> ஏனைய பிராந்தியங்களைப் பிதிநிதித்துவப்படுத்தி 2 வேட்பாளர்களுமாக மொத்தம் 8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

8 வேட்பாளர்களில் 3 வேட்பாளர்கள் நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் தேர்தலில் நிறுத்தப்பட்டனர்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் நிறுத்தப்பட்ட 3 வேட்பாளர்களும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்குத் தெரிவாகியுள்ளனர்.

நோர்வேயின் கிழக்குப் பிராந்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட 6 வேட்பாளர்களில் ஜெயசிறி பாலசுப்ரமணியம் & முரளி சிவானந்தன் ஆகிய இருவர் தெரிவாகியுள்ளனர்

நோர்வேயின் ஏனைய பிராந்தியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களில் சிவகணேசன் தில்லையம்பலம் தெரிவாகியுள்ளார்.

பிரதம தேர்தல் ஆணையாளராக கடமையாற்றிய நோர்வேஜியரான சமூக மானிடவியல் துறை ஆய்வாளர் Eugene Guribye அவர்களால் தேர்தல் முடிவுகள் பிரகடனப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டது.

நோர்வேயில் ஈழத்தமிழர்களின் குடிசனப்பரம்பலைக் கருத்திற் கொண்டு, நோர்வேயிலிருந்து தெரிவு செய்யப்படவேண்டிய 3 பிரதிநிதிகளில் இரண்டு பிரதிநிதிகள் நோர்வேயின் கிழக்கு பிராந்தியத்திலிருந்தும் ஒரு பிரதிநிதி கிழக்குப் பிராந்தியத்திற்கு வெளியிலுள்ள ஏனைய பிராந்தியங்களைப் பிரதிநிதித்தும் வகையிலும் தெரிவு செய்யப்பட்டனர்.

நோர்வே முழுவதுமாக 3511 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் பெற்ற வாக்கு எண்ணிக்கை வருமாறு:

ஜெயசிறி பாலசுப்ரமணியம்: 2342 வாக்குகள்

முரளி சிவானந்தன்: 2321 வாக்குகள்

சிவகணேசன் தில்லையம்பலம்: 2449 வாக்குகள்

நோர்வே முழுவதுமாக 17 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து வேட்பாளர்களும் பிராந்திய அடிப்படையில் பெற்ற வாக்கு விபரங்களை www.tamilvalg2010.com இணையத்தளத்;தில் அறிந்து கொள்ளலாம்.

1) http://www.tamilvalg2010.com/node/66

2) http://www.tamilvalg2010.com/node/67