Friday, 7 May 2010

வெற்றி தோல்வியல்ல சாதித்தது யாரென்பதே முக்கியம்..


உலகத்தில் பலர் நன்மை என்பது வெற்றியால் கிடைக்கும் என்று கருதுகிறார்கள், தோற்றுவிட்டால் எல்லாமே தொலைந்துவிடுமென அஞ்சுகிறார்கள்.

வெற்றி, தோல்வி ஆகிய இரண்டும் உளவியல் நோயின் இரு பக்கங்கள் மட்டுமே, நன்மை என்ற மரம் இந்த இரண்டிற்குள்ளாலும் வளர்வதில்லை.

இரண்டாவது உலகப்போரில் மகத்தான வெற்றி பெற்றது பிரிட்டன், வரலாறு காணாத படு தோல்வியை சந்தித்தது ஜேர்மன்.

அதுபோல போரில் வென்றுவிட்டோம் என்று அமெரிக்கர்கள் மார்தட்டி மகிழ்ந்தார்கள்..

ஆனால் நடந்தது என்ன..

தாம் பெற்ற வெற்றி எதிரணியினர் அடைந்த தோல்வியை விட மோசமான தோல்வி என்பதை அவர்கள் அறிய அதிக காலம் பிடிக்கவில்லை.

போரினால் முற்றாக அழிந்த ஜேர்மனி, மறுபடியும் முற்றாகவே தன்னைப் புதுப்பித்துக் கொண்டது.

அனைத்துக் கட்டிடங்களும் அதி நவீன முறையில் அங்கு புனரமைக்கப்பட்டன, சாலைகள் அனைத்தும் உலகத்தின் அதிசிறந்த சாலைகளாக மறுபடியும் வடிவமைக்கப்பட்டன.

தொழிற்சாலைகள் அனைத்தும் நவீன இயந்திரங்களால் புத்தம் புதிதாக எழுந்து நின்றன.

பிரிட்டனைவிட மகத்தான வளர்ச்சி பெற்றது ஜேர்மனி. இன்றும் வெற்றிபெற்ற பிரிட்டன் மிகப்பழைய சாலைகளை இடிக்க முடியாமல் சாலை நெரிசலில் சிக்குண்டு கிடக்கிறது.

மிகப்பழைய இயந்திரங்கள், மிகப்பழைய வங்கித் தொழிற்பாடுகள் என்று காலத்திற்கு ஒவ்வாத பழமைகளில் மூழ்கிக் கிடக்கிறது.. தமது தோல்வியை மறைக்க நாம் பழமை பேணுகிறோம் என்ற போலிக் கொள்கையை பிரிட்டன் பேசித்திரிகிறது..

அன்று..

மெயின்காம் என்ற புத்தகத்தை எழுதிய சர்வாதிகாரி ஹிட்லர் ஒரு சிறந்த உதாரணத்தை தனது நூலில் எழுதினான். தான் சிறுவனாக இருந்தபோது சட்டைப் பையில் பணத்தைக் கொண்டு சென்று ஒரு கூடை நிறைய முட்டைகளை வாங்கி வந்தேன்.. பின்னர் கூடை நிறைய பணத்தைக் கொண்டு சென்று சட்டைப் பையில் முட்டையை வாங்கினேன் என்று எழுதினான்.

இப்படிப்பட்ட மோசமான பொருளாதார மந்த நிலையை அடியோடு மாற்ற வேண்டுமானால் உலகத்தை அடியோடு மாற்ற வேண்டுமென அவன் நினைத்தான். உலகப் போரைத் தொடங்கினான், தவறான பாதையில் சென்று தோல்வியும் கண்டான்.

ஆனால்..

போர் முடிந்த சில காலத்தில் அவன் தேடிய வளர்ச்சியை ஜேர்மனி பெற்றுக் கொண்டது..

பிரிட்டனோ.. தாம் வைத்தருந்த காலனித்துவ நாடுகளை எல்லாம் இழந்து தனித்து நின்றது..

ஜேர்மனியோ பேர்ளின் சுவரை உடைத்து 28 ஐரோப்பிய நாடுகளை இணைத்து, தனக்கெதிராக மூன்றாவது உலகப்போரை யாருமே ஆரம்பிக்க முடியாதளவிற்கு வலிமை பெற்று நின்றது.

ஆனால் பிரிட்டனோ ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு காலும், அமெரிக்காவில் மறுகாலும் வைத்து யாருக்குமே நண்பனில்லாமல் தனித்து நிற்கிறது..

மறுபறும்..

ஜப்பானின் மீது அணுகுண்டை வீசி மாறாத களங்கத்தை சுமந்து கொண்டது அமெரிக்கா..

அணுகுண்டுகளே விழுந்தாலும் அசைந்துவிடாது மாபெரும் பொருளாதார வளர்ச்சி கண்டு நிற்கிறது ஜப்பான்.

இந்த இரண்டு நிகழ்வுகளையும் நாம் தினசரி சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். வெற்றிபெற்ற நாடுகளைவிட தோல்வியடைந்த நாடுகளே பெரும் சிறப்பை தேடிக் கொண்ட உண்மை இதற்குள் இருக்கிறது.

இதைக் கேட்டதும் தோல்வியடைந்தால் சிறப்பு வந்துவிடுமென நினைத்துவிடக்கூடாது.

தோல்வி என்பதைவிட.. அழிவு ஆக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் உண்மை.

அன்று நாம் எதற்காக ஆயுதம் ஏந்தினோம்… ?

தரப்படுத்தலே காரணம் என்றார்கள் இளைஞர்கள்.

இன்று உலகத்தின் எல்லாப் பெரிய பல்கலைக்கழகங்களிலும் நிறைந்து கிடக்கிறான் ஈழத் தமிழன். அவன் பார்க்காத பல்கலைக்கழகமா..

வேலை வாய்ப்பில் பாரபட்சம் என்றார்கள்.. !

இன்று இலங்கைத் தீவையே விலைக்கு வாங்கக் கூடிய பொருளாதார பலத்துடன் புலம் பெயர் தமிழன் இருக்கிறான். அவனை முந்திச் செல்லும் பலத்தை பெரும்பான்மைச் சிங்கள வெகுஜனமே இழந்துவிட்டது.

சிங்களம் படிக்க மாட்டோம் என்றோம்..

இன்று உலகத்தின் எல்லா மொழிகளையும் சரளமாகப் பேசும் ஒரே இனம் ஈழத்தமிழினமே என்கிறார்கள் அறிஞர்கள்..

சுதந்திர தமீழக தாயகம் வேண்டுமென்றோம்…

நம்மைவிட பெரிய சுதந்திர நாட்டை அமைத்தவர்கள் உலகத்தில் யாருண்டு..?

புதுமாத்தளனில் 30ற்கும் மேற்பட்ட உலக வல்லரசுகள் புலிகளுக்கு எதிராகப் போரிட்டன. ஒவ்வொரு சிறிய நகர்வுக்கும் இந்தியாவிடம் அனுமதி பெற சிங்கள அரசு ஓடியோடிப் போனது..

சிந்தித்துப் பாருங்கள்.. சொந்த முடிவெடுக்க முடியாத சிறீலங்கா ஒரு சுதந்திரமான நாடா..?

யாருக்குமே வளைந்து போகாத தமிழர் தாயகம் சுதந்திரமான நாடா?

துடிதுடிக்கும் உங்கள் மனச்சாட்சியை ஒரு தடவை தொட்டுப் பார்த்து இந்தக் கேள்விக்கு விடை சொல்லுங்கள்…

உலகில் தானாக முடிவெடுக்கும் சுதந்திரமுள்ள நாடென்று ஒரு நாடுகூடக் கிடையாது..

ஆனால் ஈழத் தமிழன் உலகில் யாருடைய உதவியும் இல்லாமல் வன்னி மண்ணில் உருவாக்கி வைத்திருந்ததுதான் உலகின் ஒரேயொரு சுதந்திர நாடு..

விமானம் – நீர்மூழ்கிக்கப்பல் முதற் கொண்டு, ஒரு நாட்டுக்குரிய அத்தனை கட்டுமானங்களையும் அமைத்து, அதிலுருந்தும் ஒரு படி மேலேறி யாருக்குமே அடிமைப்படாத ஒரு தேசமாகவும் அதை உருவாக்கிக் காட்டியவனே பிரபாகரன்.

யாருடைய உதவியும் இன்றி, எந்தவித சர்வதேச அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் தன்மானத்துடன் முப்பதாண்டுகள் தலைநிமிர்ந்து நின்று உலகிற்கு ஓர் அரசை அமைத்துக் காட்டினான்.

எடுத்த இலக்கை எல்லாம் முப்பதே ஆண்டுகளில் எட்டித் தொட்ட ஈழத் தமிழனை எண்ணி உலகம் மூக்கில் விரலை வைக்கிறது.. அப்படிப்பட்ட நீ புதுமாத்தளனுக்காக கலங்கலாமா..

வெற்றி தோல்விகளை விட்டெறி…

சாதித்தவன் யாரென்று கூட்டிக் கழித்துப்பார்..

அழவேண்டியவன் நீயல்ல என்பதை புரிந்து கொள்வாய்..

No comments:

Post a Comment