Welcome to this blogg. More than 80 million tamil people live in many countries across distant seas. There is no state without a Tamil - but there is no state for the tamils. Velkommen til denne bloggen. Her vil jeg oppdatere nyheter om tamiler og deres kamp for et selvstyre både på Sri Lanka og utenfor øya. என்னுடைய இந்த இணைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி: தமிழன் இல்லாத நாடில்லை, தமிழனுக்கென்று ஓர் நாடில்லை
Thursday, 6 May 2010
தற்போதைய வெளிவிவகார அமைச்சரும் ஈழத்தமிழர்களின் அரசியல் நகர்வும்
ஜீ. எல். பீரிஸ் (காமினி லக்ஷ்மன் பீரிஸ்) என்று சொன்னதுமே, விடுதலைப்புலிகளின் சமாதானப்பேச்சுக்களே நினைவில் வரும். அத்தனைதூரம் புலிகளின் ஒவ்வெரு பேச்சுக்களிலும் அரசு சார்பில் தலைமைதாங்கியவர்.
இதில் புலிகளின் சார்பில் ஈடுபட்டோரில், (அமரர்) திரு அன்ரன் பாலசிங்கம் மற்றும் (அமரர்) சுப தமிழ்ச்செல்வன் போன்றோர். தம்முடைய நிலையில் இனி வாய்பேச முடியாது என்பதனை நன்கு உணர்ந்த இலங்கை அரசானது, பேச்சுக்களில் ஈடுபட்ட இன்னும் இரு முக்கியஸ்தர்கள் என்ற வகையில் எதிர்கொள்ள வேண்டியவர்களாகக் காணப்படுகின்றமைக்கு, சர்வதேசத்தில் பதில் சொல்லியாக வேண்டும் என்று இருக்கின்றபோது, உள்ளாநாட்டில் மிஞ்சியுள்ள தற்போதை பிரதி அமைச்சரும், சர்வதேசத்தின் பார்வைக்கு முன்னாள் புலிகளின் தலைவர்களில் ஒருவராக கருதப்பட்டவருமான கருணா என்கின்ற திரு.வி.முரளிதரன் அவர்களை ஒருவாறு தனது கட்டுப்பாட்டுக்குள் ஏற்கனவே கொணர்ந்த போதிலும், புலத்தில் மிஞ்சியுள்ள ஒருவராகவும் சட்டத்தரணியாகவும் காணப்படுவதோடு மட்டுமல்லாது, புலத்தில் தனது நிலையினைக் காலூன்ற, மக்களின் பலத்தினை அரணாகக்கொண்டு இன்று நாடுகடந்த அரசை அமைப்பதற்கான ஒருங்கிணைப்பாளராக இருக்கும் திரு வி.உருத்திரகுமார் அவர்களை ஒரு வழிபண்ணவேண்டும் என்ற புதிய புலத்தின் அரசியல் போர் உத்திகளுக்காக இலங்கை, அரசால் தெரிவாகியிருக்கும் ஒரு புத்திஜீவியும் பழுத்த அரசியல் அனுபவசாலியுமான “ஜீ. எல். பீரிஸ்” என்ற இந்த மனிதரை நியமித்துள்ளது.
உள்நாட்டில், பலம்பொருந்தி ஆயுத அரசியலில் 2009வரை கால்பதழித்திருந்த புலிகளை, அடியோடு அழித்துவிட்டோம் என்று ஆணவம் கொண்டிருந்த போதிலும், “புலம்பெயர்ந்த புலிகளாக” “புலிகள் பெயர்ந்து தமிழர்களாக” உருவாக்கப்பட்ட கட்டமைப்பை எப்படி மண்ணோடு மண்ணாக்குவது என்ற முனைப்பு ஒருபுறமிருக்க… சர்வதேசத்தால் தனது முன்னைய புலிகளுடனான அனுபவத்தை வைத்து காய்களை பக்குவமாக நகர்த்துவதற்காகவே இவர் இந்த பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார் என்றே இன்னொருபுறம் எண்ணத்தோன்றுகின்றது.
புலத்தின், மற்றும் புலிகளின் கட்டமைப்பில் ஏற்பட்ட பிளவுகளும் மனக்கசப்புகளும் இலங்கை அரசை மேலதிகமாக மூச்சுவிட வைத்துள்ளது என்றால் அது மிகையில்லை. கடந்த ஐந்தாம் மாதத்தில் இருந்து இந்த வருடம் ஐந்தாம் மாதம் வரையிலான ஒருவருடத்தில், இலங்கை அரசானது பல சர்வதேச அரசியல், உள்நாட்டு ஜனநாயக நகர்வுகளை மேற்கொண்டிருந்த போதிலும், தமிழர்களின் சார்பில் கட்டப்பட்ட கட்டமைப்பை ஒரு முழுவடிவத்திற்கு கொண்டுவருவதில் ஏற்பட்ட தமிழர்களின் பின்னடைவு, இலங்கை அரசின் சர்வதேச அரசியலில் அவர்களை முன்னடைய வைத்துள்ளது.
புலத்தில் இவ்வாறான தமிழர் ஒருங்கிணைப்பு செயற்பாடுகளை மேற்கொள்வோர், இலங்கைத்தேசியத்தை ஏலவே மாற்றி பிறிதொரு தேசியத்தில் இருப்பதால், அவர்களுக்கெதிராக எந்த நடவடிக்கையினையும் இலகுவில் எடுக்கமுடியாது போய்விட்டது. இருந்தபோதிலும் சர்வதேசத்தின் அனுசரணையுடன் இந்த முறியடிப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள சந்தர்ப்பங்கள் தேடப்படுவதென்பெது உண்மையே!
இப்போது இலங்கை அரசின் பார்வையானது, அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நாடுகடந்த கட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் அதாவது உள் மற்றும் வெளிசெயற்பாட்டில் இருந்தே, இலங்கை அரசின் இதற்கெதிரான சட்டபோக்குகளில் மாற்றம் ஏற்படப்போகின்றது. இந்த நாடுகடந்த கட்டமைப்பபானது, புலிகளின் போக்கினை வளர்த்தெடுப்பதாகவோ, அல்லது புலத்தில் இருந்து நிதிகளைச் வசூலிப்பதில் சட்டத்திற்குப்புறம்பாக மேற்கொண்டாலோ, இலங்கை அரசிற்கு ஒரு அச்சுறுத்தல் தரக்கூடிய நடவடிக்கையாக காணப்பட்டாலோ அன்றி இந்த நாடுகடந்த அரசை இலங்கை அரசு எதிர்க்கப்போவதில்லை.
அவ்வாறான செயற்பாட்டை உற்று நோக்கிய இந்த அமைச்சர் “பீரீசை” பொறுப்பாக அமர்த்தியதற்கான காரணம் இப்போது மக்களுக்கு தெளிவாக விழங்கியிருக்கும். ஏற்கனவே அரசின் சார்பில் அணுவளவும் குறைவு படாத பாலித்தவை வைக்கவேண்டிய இடத்தில் ஏற்கனவே வைத்துள்ளமை சற்று அரசியல் வாதிகளை சிந்திக்கவைத்திருக்கும். அத்துடன் பாங்கிமூன் தொடர்பாக எதுகும் நான் செல்லவேண்டியது இல்லை, காரணம் அவர் யார், எந்த நாட்டையுடையவர், அந்த நாட்டிற்கும் இலங்கைக்கும் உள்ள மத மற்றும் நிதி, ஒப்பந்தங்கள் தொடர்பாக உள்ள ஈடுபாடுகள் அப்பப்பா!!!…
இவ்வாறு இருக்க, ஜீ. எல். பீரிஸ் (காமினி லக்ஷ்மன் பீரிஸ்) இலங்கையில் ஒரு பேராசிரியரும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து செயற்பட்ட அரசியல்வாதியும் ஆவார். ரணில் விக்கிரமசிங்கவின் அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமாதானப்பேச்சுக்களில் அரசதரப்பின் தலைவராக இவர் இருந்ததோடு, மட்டுமல்லாது நாட்டின் ஒவ்வொரு கட்ட அரசவையிலும் பலமிக்க அதிகாரமுடைய அமைச்சினைக் கையாண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தற்போது அமைக்கவிருக்கும் நாடுகடந்த அரசின் அதிகாரிகள், மிகத்திறனுள்ள ஒரு அரசியல் சாணக்கியமுள்ள இலங்கை அரச தலைவரை எதிர்த்தே எமது போராட்டம் தொடங்கப்போகின்றது என்பதனை நன்கு நினைவில் வைத்திருக்க வேண்டும்.
உதாரணமாக சொல்லப்போனால், முன்னைய பாராளுமன்ற அனுபவமுள்ள ஒருவரையும் இந்தக்கட்டமைப்பு உள்வாங்கியிருப்பதென்பது ஒரு மிகச்சிறந்த சந்தர்ப்பமாகக்கெகாண்டாலும், இன்னும் சில சந்தேகங்கள் எளாமல் இல்லை இந்த சந்தேகங்கள் உண்மையாகிவிடக்கூடாது என்பதற்காக இந்தப்பகுதியில் அவை இணைக்கப்படப்போவதில்லை.
அத்தோடு, இத்தனை காலமும் இருந்த வெளிநாட்டு அமைச்சர்களிலும் பார்க்க தற்போதுள்ள ஜீ.எல்.பீரிஸ் அவர்களை சாதாரணமாக எடைபோட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இந்த அரசியல் துணுக்கு எழுதப்படுகின்றது. இதனை, அமைக்கவிருக்கும் நாடுகடந்த அரசின் நடத்துனர்களும் அமைப்பாளர்களும் அறிந்து மிகப்பக்குவமாக காய்களை நகர்த்தும்படி அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.
மேலும் , கடந்த தேர்தல்களில் (புலத்தில்) இடம்பெற்ற ஜனநாயகப்போக்கு வரவேற்கத்தக்கதாக இருந்த போதிலும், சர்வதேச கணிப்பீட்டின்படி மக்கள் தொகையில் வாக்களித்தவர்களின் தொகையினை சர்வதேசக்கணிப்பாளர்கள் குறை கண்டுபிடிக்காதளவிற்கு அமைப்பதில் அதிக கவனம் செலுத்தும்படி வேண்டப்படுகின்றீர்கள்.
இலங்கை அரசின் மொளனத்தை அச்சமென்றோ, இயலாத்தன்மை என்றோ, அல்லது தமிழர்களின் போக்குச்சிறந்தது என்ற அடிப்படையிலோ, முட்டாள்தனமாக எனது எழுத்துக்கள் பாராட்டிய கருத்துக்களாக இருக்காது, எப்படி ஆரம்பத்தில் புலிகளின் நகர்வை அறியமுடியாது இலங்கை அரசு திண்டாடியதோ, அதுபோலவே இன்றுள்ள இலங்கை அரசின்போக்கு என்பதனை எச்சரிக்கையோடு, அரசியல் சாணக்கியத்தைப் பயன்படுத்துமாறு தமிழ்த்தலைவர்களை விழித்துக்கொள்ளச் சொல்கின்றேன்.
தற்போது மேய்ப்பனில்லாத ஆடுகளாக இருக்கும் தமிழர்களுக்கு ஒரே ஒரு தொடர்புச்சாதனமாக அமைந்திருப்பது இணையங்களே.அந்த இணையங்களின் சாதூர்யமான கருத்துக்களை வைத்தே தமிழர்கள் சர்வதேச சாணக்கியத்தை தமிழர்கள் புரிந்து கொள்ளவும், இலங்கை அரசின் சாணக்கியத்தை முறியடிக்கவும் வேண்டும்.
உண்மையில் இலங்கை அரசு புலிகளை முடக்கிவிட்ட வீராப்பில் தூங்கிக் கொண்டாலும், அதை நாம் தூக்கமாகக்கருதக்கூடாது, அது தூங்குவதுபோல் நடிப்பதாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆமை வேகத்தில் நாம் சென்றாலும், முயல் வேகத்தில் செல்லும் இலங்கை அரசை தமிழர்கள் சார்பால் இந்த நாடுகடந்த அரசு வெல்லவேண்டும்.
சில தினங்களுக்கு முன்னர் இலங்கை அரசு சார்பில் மேற்கொண்ட பத்திரிகை மானாடுகளில் அமைச்சர்கள் வெளியிட்ட கருத்தாவது, புலிகளும் நாடுகடந்த அரசும் ஒன்றே என்ற பாணியை கொணர முயற்சிப்பதில் இருந்து அரசு வேறுவழியில் இந்த நாடுகடந்த அரசிற்கெதிரான தனது காய்களை நகர்த்திவருகின்றது என்பது வெளிச்சம். அத்துடன், அமைச்சர் பிரிசால் வழங்கப்படுகின்ற கட்டளைகளை இலங்கைத்தூதராலயங்கள் உலகின் பல பாகங்களிலும் திடமாக மேற்கொள்வதோடு, உலக அரசுகளும் தமது நகர்வுகளை இவருடைய அழுத்தத்திலிருந்தே மேற்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வகையில் இன்றுள் அரசியல் சூழலில் இந்நபர் மிகவும் முக்கிய காயக தமிழர்களுக்கு விழங்கள் போகின்றார். இதனை எதிர்கொள்ள நாடுகடந்த அரசு அவையைப்பலப்படுத்துவதிலும், பெருமைகொள்வதிலும் பார்க்க இதற்கு “முறியடிப்பு” முகங்கொடுப்பதில் அக்கறை அதிகம் செலுத்த வேண்டும் என்பதே எனது கருத்து. –
தமிழர்களின் பலம்பொருந்திய சிறந்த,அழிக்க முடியாத சர்வதேச கட்டமைப்பை எதிர்பார்த்து… …-
அருகன், (5/05/2010)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment