Thursday, 4 February 2010

பிரபாகரனின் மரணச் சான்றிதழ் - சிதம்பரசக்கரம்


பிரபாகரன் கொல்லப் பட்டதாக சென்ற ஆண்டு மே மாதம் 18-ம் திகதி இலங்கை அரசு அறிவித்தது. அதைக் கொண்டாடுவதற்கு இலங்கை சென்ற எம். கே நாராயணனிடம் பிரபாகரன் இறந்ததற்கான ஆக்கபூர்வமானதாகவோ அல்லது அதிகார பூர்வமானதாகவோ எந்த சாட்சியத்தையும் இலங்கை அரசு எம் கே நாராயணனிடம் சமர்ப்பிக்கவில்லை. இது பற்றி எம் கே நாராயணனிடம் வினவியபோது இலங்கை அரசு பிரபாகரன் இறந்துவிட்டதாக பகிரங்கமாக அறிவித்ததே ஒரு சாட்சி என்று சொல்லிச் சமாளித்தார். மேற்கொண்டு எதையும் செய்வதற்கில்லையென்றும் நாராயணன் கூறி பத்திரிகையாளர்களின் மற்றக் கேள்விகளைத் தவிர்த்தார்.

ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கில் பிரபாகரனும் ஒரு குற்றவாளி. அந்த வழக்கு இந்தியாவில் அப்போது நிலுவையில் இருந்தது. இலங்கையிலும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் பிரபாகரனும் பொட்டு அம்மானும் பிரதான எதிரிகள்.

கொழும்பு உயர்நீதிமன்றத்தில் 2009 செப்டம்பர் 8-ம் திகதி முன்னைநாள் வெளிநாட்டமைச்சர் லக்‌ஷ்மண் கதிர்காமர் வழக்கில் எதிரிகளின் பெயர் பட்டியலினை நீதிமன்றம் மாற்றம் செய்ய அனுமதித்தது. அவர்கள் இருவரும் கொல்லப் பட்டதாக பிரதி சட்டமா அதிபர் நீதிமன்றில் ஒரு அறிக்கை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அதில் முக்கிய எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராகவிருந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது நெருங்கிய சகாவாகவும் அவ்வியக்கத்தின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளராகவும் இருந்த பொட்டு அம்மான் எனப்பட்ட சண்முகநாதன் சிவசங்கர் ஆகியோரின் பெயர்கள் நீக்கப் பட்டன. ஆனால் அவர்கள் இருவரும் இறந்ததற்கான இறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப் படவில்லை. அதன் பின்பும் அவர்கள் இருவரும் இறந்து விட்டதாக இந்தியாவிற்கு இலங்கை அறிவிக்கவில்லை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு 20வருடங்களாகியும் தொடர்ந்து கொண்டே இருந்தது. நீதிமன்றில் இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களம் சமர்ப்பித்த அறிக்கையும் அதனை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதும் இருவரும் இறந்ததற்கான சட்டபூர்வமான பதிவுகளாக கருதப்படக்கூடியன.

பின்னர் இலங்கை அரசு இந்தியாவிற்கு பிரபாகரன் இறந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. அந்த அறிவிப்பு எத்தகையது என்று இருதரப்பும் அறிவிக்கவில்லை.

சிதம்பர இரகசியம்.

2010 ஜனவரி 31-ம் திகதி பிரபாகரனின் இறப்புச் சான்றிதழ் தமக்குக் கிடைக்கவில்லை என இந்திய மத்திய புலனாய்வுத் துறை அறிவித்தது. அதுவும் சும்மா அறிவிக்கவில்லை தகவலறியும் சட்டத்தின் கீழ் வற்புறுத்திக் கேட்டதன் பேரில் அறிவித்தது. இந்த இரகசியம் வெளிவந்ததால் சிங்கள் அரசிற்கு சங்கடமான நிலை ஏற்படும் என்று கவலைப் பட்ட சிவகாசித் தொகுதியில் ஏதோ செய்து வெற்றி பெற்ற சிதம்பரம் அண்ணாச்சி ஒரு அறிக்கை வெளியிட்டார். ராஜபக்சேக்கள் என்னும் எஜமானிகளின்மீதான எஜமான விசுவாசம் அவரை இப்படி ஒருஅறிகை விடத் தூண்டியதா என்ற சந்தேகம் கூட எழலாம். அவர் விட்ட அறிக்கை தொடர்பாக வந்த செய்தி:

India’s Union Home Minister P, Chidambaram said that India’s Central Bureau of Investigation (CBI) has received the 'documentation' from Sri Lanka confirming the death of LTTE Chief Vellupillai Prabhakaran.

Speaking to reporters today, Chidambaram said, "The CBI has told me that they received documentation from the Government of Sri Lanka confirming the death of Prabhakaran."

பிரபாகரன் இறந்தது தொடர்பான பத்திரங்கள் இந்திய மத்திய புலனாய்வுத் துறைக்குக் கிடைத்ததாக சிதம்பரம் தெரிவித்தார். அது என்ன பத்திரம் என்பது சிதம்பர இரகசியம். சிதம்பரத்தின் கூற்றில் "Death Certificate" என்ற பதம் பாவிக்கப் படவில்லை. சிதம்பரத்தின் அறிக்கையை அடிப்படையாக வைத்து இலங்கை ஊடகங்கள் மரணச் சான்றிதழ் கிடைத்ததாக சிதம்பரம் தெரிவித்ததாக செய்திகள் வெளியிட்டன. தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான ஊடகங்களும் இப்படி அறிவித்தன:

இந்தியாவின் மத்திய உளவு நிறுவனமான சிபிஐ (CBI) க்கு தமிழ்த் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மரணச் சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இலங்கையைப் பொறுத்தவரை மரணச் சான்றிதழ் என்பது இலங்கை பதிவாளர் திணைகளத்தில் ஒருவரின் இறப்பைப் பதிவு செய்து அத்திணைக்களம் வழங்கும் பத்திரமே மரணச் சான்றிதழ். பிரபாகரன் மரணம் இதுவரை இலங்கை பதிவாளர் திணைகளத்தில் பதிவு செய்யப் பட்டதாகத் தகவல் இல்லை. லக்ஷ்மண் கதிர்காமர் கொலைவழக்கில் பிரபாகரனுடையதோ அல்லது பொட்டு அம்மானுடையதோ இறப்புச் சான்றிதழ் சமர்கபிக்கப் படவில்லை. பிரதி சட்டமா அதிபர் ஒரு அறிக்கை மட்டுமே சமர்ப்பித்தார். சிவகாசித் தொகுதித் தில்லுமுல்லு சிதம்பரமும், பிரபாகரனுடையதோ அல்லது பொட்டு அம்மானுடையதோ இறப்புச் சான்றிதழ் இந்தியாவிற்கு சமர்ப்பிக்கப் பட்டதாகக் கூறவுமில்லை.

ஏற்கனவே இருமுறை பிரபாகரன் இறந்தபோதும் மரணச் சான்றிதழ்கள் வழங்க்கப் படவில்லை ஆனால் பகிரங்க அறிவிப்புகள் வெளியிடப் பட்டன.

Related link
http://oslotamils.blogspot.com/2010/01/yet-to-get-ltte-chiefs-death.html

No comments:

Post a Comment