சிறீலங்காவில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது சரணடைய முற்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர்கள் கெல்லப்பட்டது தற்போது உறுதிப்படுத்துள்ள நிலையில் அது தொடர்பில் ஐக்கிய நாடுகளை சபை விசாரணைகளை மேற்கொள்ளுமா என இன்னசிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஊடக அமைப்பான இன்னசிற்றி பிரஸ் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சிறீலங்காவில் நடைபெற்ற போரின் இறுதி நாட்களில் அங்கு ஒரு இரத்தஆறு ஓடப்போகின்றது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருந்தது. அந்த சமயத்தில் வெள்ளை கொடிகளுடன் சரணடைய முற்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டதாக தற்போது அறிக்கைகள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகளை வெள்ளை கொடியுடன் சரணடையுமாறு ஐக்கிய நாடுகள் சபையை சேர்ந்த அதிகாரி விஜய் நம்பியாரே தெரிவித்திருந்தார்.
சரணடைய முற்படுபவர்களை உடனடியாக படுகொலை செய்யுமாறு சிறீலங்கா அரசின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சா இராணுவத்திற்கு உத்தரவிட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது ஜெனீவா சட்டங்களை மீறும் செயல்.
சில மாதங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ராஜபக்சா சகோதரர்கள் மூவரையும் சந்தித்திருந்தார். அப்போது போரியல் குற்றம் தொடர்பான சுயாதீன விசாரணகள் குறித்து பேசியிருந்தார். ராஜபக்சாக்கள் தம்மை தாமே விசாரிப்பதாக கூறிய போதும் அது நிகழவில்லை.
இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் பல ஆயிரம் மக்கள் சிறீலங்காவில் கொல்லப்பட்டபோதும் ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை குழுவை கினியா பகுதிக்கு விசாரணைக்கு அனுப்பியுள்ளார். அங்கு 157 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
ஐக்கிய நாடுகள் சபை பாரபட்சமாக நடந்து கொள்கின்றது என கினியாவுக்கு அருகில் உள்ள ஆபிரிக்க நாடுகள் தெரிவித்ததை தொடர்ந்தே இந்த விசாரணைக்குழு அனுப்பப்பட்டுள்ளது. எனவே பக்கத்து நாடுகள் கூறினால் தான் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகளை ஏற்றுக்கொள்ளுமா? என அது தெரிவித்துள்ளது
As Killing of Those Seeking to Surrender in Sri Lanka Is Alleged, Will UN Investigate?
In the final days in Sri Lanka of what even the UN called the bloodbath on the beach, there were reports that when some in the Liberation Tigers of Tamil Eelam sought to surrender with white flags, they were killed by the Army. The UN's Vijay Nambiar, it was reported, had urged the LTTE officials to come out waving white flags.
Now, General Sarath Fonseka has confirmed that Gotabhaya Rajapaksa, presidential brother and Defense Secretary, ordered his forced to execute even those seeking to surrender, in violation of the Geneva Conventions.
Months ago the UN Secretary General Ban Ki-moon, who has met with all three Rajapaksa brothers, spoke vaguely about an independent international inquiry into war crimes in Sri Lanka. While he seemed to count on the Rajapaksas to credibly investigate themselves, this has not happened.
Even since killing of tens of thousands of civilians in Sri Lanka in the first five months of this year, Ban has sent a group of UN investigators to Guinea to probe the killing of 157 civilians there.
While his excuse for the seeming double standard is that neighboring African states requested the Guinea inquiry, can the UN accept that human rights only matter if the neighbors say so? Watch this site.
Footnote: the North Korean cargo airplane found full of weapons in Bangkok, in violation of UN sanctions, reported had a Sri Lankan connection. Will the UN remain silent about this, too? Ban Ki-moon was asked about the North Korean plane during his end of the year press conference on Monday -- the questions above were not allowed -- and Ban said it is up to the Security Council. And so the buck passing continues.
Kilde: Innercity press
No comments:
Post a Comment