Tuesday, 15 December 2009

Sri Lankan war crimes video is authentic, Times investigation finds


http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6956569.ece

சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான காணொளிக் காட்சிகள் மோசடி செய்யப்பட்டவை அல்ல: ரைம்ஸ்

http://video.yahoo.com/watch/5968359

ஸ்ரீலங்கா இராணுவம் தமிழ் இளைஞர்களை படுகொலை செய்வது தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான காணொளிக் காட்சிகள் மோசடி செய்யப்பட்டவை அல்ல என்று ரைம்ஸ் சஞ்சிகை தெரிவித்துள்ளது.


குறிப்பிட்ட காணொளிகளை உரிய முறையில் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியதன் மூலம் அவை உண்மையானவை என்பதை தமது குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளதாக ரைம்ஸ் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் குறிப்பிட்ட காணொளிக் காட்சிகள் போலியானவை என்றும் மோசடியான முறையில் தயாரிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரைம்ஸ் சஞ்சிகை குறிப்பிட்ட காணொளி தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்றை நடத்தியுள்ளது.

கிரான் பெரடறிக் என்ற காணொளிக் காட்சிகளின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒருவர் மூலமாகவே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

எப்.பி.ஐ எனப்படும் அமெரிக்க புலனாய்வு பிரிவின் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளராக கடமையாற்றி வரும் கிரான் குறிப்பிட்ட காணொளிகளில் மோசடிகள் இடம்பெற்றிருக்கவில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்த காணொளிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதாவோ வேறு விடயங்கள் புகுத்தப்பட்டுள்ளதாகவோ கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த காட்சிகளை திட்டமிட்ட முறையில் நடிகர்கள் மூலமாக படம் பிடித்திருக்க முடியாது என்றும் துப்பாக்கி குண்டு துளைத்தவுடன் தலையில் இருந்த வெளியேறும் குருதி மற்றும் சூடு பட்டவர்கள் விழும் முறை போன்றவை இயற்கையானவை என்றும் காணொளி மாற்றங்கள் மற்றும் ஒளிக்கலவைகளை; இன்றி அவற்றை நிஜமானவை போன்று ஒருபோதும் படமாக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிஜமாக ஒருவர் சுடப்பட்டு இறக்கும் போது ஏற்படும் அசைவுகளை நடிப்பில் வெளிப்படுத்தவே முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த காணொளிகாட்சியானது நொக்கியா கைத் தொலைபேசி மூலமாகவே படமாக்கப்பட்டுள்ளதாகவும் அதில் எந்த விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இதன் காரணமாக அந்த காணொளி நூறு சதவீதம் உண்மையானது என்றும் இடம்பெற்ற மனிதப் படுகொலைகள் மாற்றுக் கருத்துகள் இன்ற நிஜமாகவே இடம்பெற்றிருப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளதாக ரைமஸ் சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ரைம்ஸ் சஞ்சிகையினர் இந்த உறுதிப்படுத்தலானது ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் யுத்த குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கான சர்வதேசத்தின் குரரை மேலும் வலுப்படுத்தும் என்று அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Kilde: TimesOnline

No comments:

Post a Comment