வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீள்வலியுறுத்தி பிரான்சில் 12,13 நாட்களில் தமிழீழ தாகத்தை உலகிற்கு மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி எடுத்துரைக்கும் நாள் அதற்கான எமது உறுதிப்பாட்டை நடைபெறும் வாக்களிப்பில் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களித்து உலகிற்கு நிரூபிக்கும் நாள்.
இது காலாவதியான தீர்மானம் அல்ல இது தமிழன் உரிமையினைத் தீர்மானிக்கும் தீர்மானம் .தமிழனோடு வாழும் தீர்மானம்.தமிழீழம் அமையும் வரை மீண்டும் மீண்டும் தமிழனுக்கு நினைவூட்டும் தீர்மானம் தமிழனின் நெஞ்சமதில் நிறைந்திருக்கும் தீர்மானம்.
ஆகவே பிரான்ஸ் வாழ் தமிழீழ உறவுகளே என்வீட்டில் இழவில்லை எனக்கேன் இது என்று வீணே இருக்காது எம் வருங்காலச் செல்வங்களாவது இத்தரணியிலே தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வோடு அனைவரும் இதற்கு வாக்களிக்கவேண்டும் என்று நோர்வே தமிழீழ மக்களவை சார்பாகவும் ஏலவே வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை பெரும்பான்மை மக்களின் அமோக ஆதரவுடன் நிறைவேற்றியவர்கள் என்ற பெருமையின் காரணத்தாலும் எம் தமிழீ உறவுகளே தங்களை நாம் வேண்டி நிற்கின்றோம்.
அனைவரது ஒருங்கிணைந்த ஆதரவோடு நோர்வேயை மிஞ்சும் வகையில் இவ் வாக்கெடுப்பு வெற்றிபெற வேண்டும் என்றும் தங்களை வாழ்த்தி நிற்கின்றோம்.
நன்றி
தொடர்புகளுக்கு
ரமணன் கந்தையா.
இணைப்பாளர் (மக்களவை - NCET )
ஒஸ்லோ நோர்வே. 0047 979 75 308.
No comments:
Post a Comment