யாழ்ப்பாணத்திற்கு இரு நாள் விஜயம் மேற்கொண்ட பிரிட்டிஷ், நோர்வே தூது வர்களிடம் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான மக்கள் குழு
மேற்கண்ட வாறு வலியுறுத்தியது. ஹரித்தாஸ், கியூடெக் நிறுவன அலு வலகத்தில் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்ற சந்திப்பின் போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:
*யாழ்ப்பாணத்திற்கும் வெளியிடங் களுக்கும்,மக்கள் சுதந்திரமாக நடமாட போக்குவரத்து வசதிகள் செய்யப்படு வதாக பத்திரிகையில் செய்திகள் வெளி யாகின்றன. ஆனால் நிலமை அப்படி யில்லை. காலை 4 மணிக்குச் சென்று வரிசையில் காத்திருந்து பஸ்களில் ஏற வேண்டும். அந்த பஸ்கள் தனியாகச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. சகல பஸ்களும் ஒரே வாகன அணிமூலம் அழைத்துச் செல்லப்படும்.அவர்கள் வவு னியா சென்று அங்கு கொழும்பு ரயிலை பிடிக்க முடியாது போனால் அங்கு தங்கி யிருந்து பெரும் அசௌகரியங்களுக்கு ஆளாக வேண்டிய நிலையே உள்ளது.
*குடாநாட்டில் 50 ஆயிரம், 60 ஆயிரம் பேரை மீள்குடியமர்த்தி விட்டோம் என அரசு பிரசாரம் செய்கிறது. ஆனால் இங்கு வந்தவர்கள் முகாம்களிலும் அவர்களது உறவினர்களது வீடுகளிலுமே தங்கியுள்ள னர். அவர்களுக்கு மறுவாழ்வுக்கு வெறும் 5 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டு வருகின் றது. அந்த மக்களுக்கு போதியளவு உதவி கள் வழங்கப்படாததால் அவர்கள் வாழ்வு மோசமான நிலையில் உள்ளது.
*யுத்தம் முடிந்தும் குடாநாட்டில் அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற பேரில் மக் களின் மீள் குடியமர்வு மறுக்கப்படுகின் றது. மக்கள் சுதந்திரமாக நடமாடக் கூடிய சூழல் இன்னும் இல்லை.
*மக்களின் மீள்குடியமர்வு, அபிவிருத்தி என்ற பேச்சளவோடு நிற்காமல் அந்த மக்களின் அரசியல் அபிலாஷைக ளைத் தீர்க்கும் வகையில் தீர்வு முன் வைக்கப்பட வேண்டும். அந்தத் தீர்வு இலங்கைக்குள் எட்ட முடியாதென்ற நிலைப்பாட்டைக் கடந்த 50 வருடங்களாக அந்த மக்கள் கொண்டிருப்பதால், ஐ.நாவின் அதிகாரிகள் கொண்ட உயர்மட்டக்குழு இரு தரப்பினரின் விருப்பங்களையும் கேட்டறிந்து சர்வதேச நடைமுறைக்கு ஏற்ப தீர்வைக் கண்டு அதை நடைமுறைப் படுத்த ஏற்பாடு செய்யவேண்டும்.
*கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கான நஷ்ட ஈட்டுக்கொடுப்பனவு தொடர்பாக ஐ.நா. உயர்மட்டக் குழு வடக்கு கிழக்கில் ஆய்வு செய்யவேண்டும். அதன் அடிப்படையில், சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய அந்த மக்களுக்கு நஷ்டஈடு கிடைக்க வழிசெய்ய வேண்டும்.
Kilde: உதயன்
No comments:
Post a Comment