Wednesday 23 February 2011

Rajapakse is ready to protect Gaddafi - இனம் இனத்தை நாடும்! வில்லங்கத்தையும் தேடும்!












Mahinda Rajapaksa has officially informe Libyan dictator Muammmar Gaddafi through a senior External Affairs Ministry official that the Sri Lankan government is ready to give protection to him whenever he needed it, a senior External Affairs Ministry official told Lanka News agencies














The Libyan leader is one of the few world leaders who are close to President Rajapaksa. Also, the President’s son, Namal Rajapaksa is a close friend of the LibyanPresident’s son, Saif Al-Islam Gaddafi. A large number of protests have been held by Libyan people in the country’s capitol Tripoli asking the President to step down. Foreign Media reports state that Gaddafi has fled to Venezuela amidst the growing protests.

However, the Libyan leader appeared before the media and dismissed claims that he had fled the country.

கேணல் கடாபிக்கு அரசியல் தஞ்சம் வழங்க இலங்கை தயார்-மகிந்த ராஜபக்ச!

லிபியத் தலைவர் கேணல் முஹம்மர் அல் கடாபியின் அரசாங்கம் ஆபத்தில் சிக்கினால் அவருக்கு அரசியல் தஞ்சம் வழங்க இலங்கை தயாராக இருப்பதாக சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சா வெளிநாட்டு அமைச்சின் அதிகாரியொருவர் ஊடாக இராஜதந்திர ரீதியில் அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரியொருவர் புலம்பெயர் ஆங்கில இணையத்தளம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.















மஹிந்த ராஜபக்சாவின் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் உலகத் தலைவர்களில் கடாபியும் முக்கியமான ஒருவர் என்ற வகையிலேயே அவருக்கு அந்தச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. லிபியாவின் அரசாங்கத்துக்கெதிரான ஆர்ப்பாட்டங்களினால் லிபியத் தலைவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அவர் உடனடியாக சிறீலங்கா வந்து சேரும் பட்சத்தில் போதுமான பாதுகாப்பு மற்றும் கௌரவத்தை வழங்க தமது அரசாங்கம் தயாராகவுள்ளதாக அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மகிந்தாவின் புதல்வர் நாமல் மற்றும் கடாபியின் புதல்வர் சைபுல் இஸ்லாம் ஆகியோரும் நெருங்கிய தோழமை கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Kilde: UKtamilnews

No comments:

Post a Comment