Monday, 15 March 2010

சொர்க்கம் 2010 கண்காட்சியில் பேர்லின் இளையோர்களால் கவனயீர்ப்பு போராட்டம் – 2ம் நாள்


உலகலாவியரீதியில் பேர்லின் மாநகரில் நடைபெற்று முடிந்த உல்லாசத் துறைக்கான கண்காட்சியில் இரண்டாம் நாள் போராட்டமாக பேர்லின் வாழ் இளையோர்கள் சிறீலங்காவின் உல்லாசத் துறைக்கெதிரான பரப்புரையினில் ஈடுப்பட்டனர்.

அத்துடன் அங்கு வருகை தந்திருந்த பல்லின மக்கள் ஏற்கனவே தாங்கள் இவ் வருடம் சிறிலங்காவுக்கு செல்லும் விமானக்கட்டணம் மிக மலிவாக இருப்பதை சந்தேகத்துடன் அவதானித்ததாகவும், சிறிலங்கா அரசின் பொய்யான பரப்புரையை தாங்கள் நம்பமாட்டார்கள் என்றும் உறிதியாக கூறினார்கள்.

அதனைத் தொடர்ந்து 180 நாடுகளுக்கும் மேலாக கலந்துக்கொண்ட உலகில் மிகப் பெரிய சுற்றுலாப்பயணிகளுக்கான கண்காட்சி 2010இல் சிறிலங்காவின் கண்காட்சி நிலையத்தில் மிகவும் கணிசமான பார்வையாளர்களையே காணக்கூடியதாக இருந்தது.

No comments:

Post a Comment