Saturday 23 January 2010

பெல்ஜியத்தில் மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் - 04.02.10






















இலங்கைத் தீவு பிறர் ஆதிக்கத்தில் இருந்து 1948ல் தனது தனது உரிமையைப் பெற்றுக்கொண்ட நாள் என்பது தமிழர்கள் தமது உரிமைகளைத் தேட ஆரம்பித்த நாள் என தமிழர் வரலாற்றில் பதிவாகி உள்ளது

தமிழர்கள் தம் உரிமைப் போராட்டத்தை ஆரம்பித்ததிலிருந்து, கடந்த 2009 ஆம் ஆண்டு வரை அவர்கள் நடாத்திய போராட்டங்களை சிங்கள பேரினவாதம் சர்வதேச சக்திகளின் துணைகொண்டு ஒடுக்கியது. அதனால் இன்று எம்மினம் தனது உறவுகளையும் வாழ்விடங்களையும் அடையாளங்களையும் இழந்து, அகதிகளாக்கப்பட்டு சொல்லொணா வேதனைகளுக்குள் சிக்கித் தடைமுகாமுகளுக்குள்ளும் திறந்த வெளிச் சிறைச்சாலைகளுக்குள்ளும் வாழ்கின்றது.

எமது மக்களின் சுதந்திர வாழ்வை வேண்டி, அரசியல் ரீதியில் போராடி அதனை சர்வதேசத்தின் அனுசரனையுடன் பெற்றுக் கொள்ள வேண்டிய பாரிய பொறுப்பு புலம்பெயர்ந்த மண்ணில் வாழும் தமிழ்மக்களின் கையில் தான் தங்கியுள்ளது.

எம் மக்களுக்காக, தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு, அனைத்து ஐரோப்பிய மக்களவைகளின் ஆதரவுடன், தமிழர்களிடம் இருந்து சிங்களப் பேரினவாதத்தால் பறிக்கப்பட்ட உரிமையை மீண்டும் அவர்களின் சொந்த நிலத்தில் பெற்றுத் தந்து, அவர்களின் எதிர்கால வாழ்விற்கு வழிவகுப்பதோடு, சிறீலங்கா அரசால் 1948 ல் இருந்து படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியை வழங்கி, சிறீலங்கா அரசை அனைத்துலக நீதிமன்றத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும் என்றும், போர்க் கைதிகள் என்று கூறித் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப் பட்டிருக்கும் போராளிகளை அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் விடுவிக்க வேண்டுமெனவும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரி மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலை நடாத்தவுள்ளது.

இவ் ஒன்றுகூடலில், தமிழினத்தின் விடிவுக்காகக் குரல் கொடுக்க அனைத்துத் தமிழ் அமைப்புக்களும் ஆதரவு வழங்க வேண்டும்.

தகவல்:
ஐரோப்பிய மக்களவைகள் சார்பில் தமிழீழ மக்கள் பேரவை - பிரான்சு

No comments:

Post a Comment