Thursday, 24 March 2011

லிபிய பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது - மகிந்த













நரி ஓநாய்க்கு புத்திமதி சொல்கிறது

லிபிய பொதுமக்கள் மீது மேற்குலக நாடுகள் தாக்குதல் நடத்தக்கூடாது என சிறீலங்கா அரசாங்கம் நேற்றுக் கோரிக்கை விடுத்திருக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் தலைமையில் தாக்குதல்கள் இன்று 4 வது நாளாகவும் தொடரும் பின்புலத்தில் சிறீலங்கா இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கின்றது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சு, லிபிய பொதுமக்களைப் பாதுகாப்பதில் தமக்கு கரிசனை இருப்பதாகத் தெரிவித்துள்ளது. வன்னியில் பல நூற்றுக்கணக்கான தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசி பொதுமக்களைப் படுகொலை செய்துள்ள சிறீலங்கா அரசாங்கம், ஏனைய நாடுகளுக்கு உபதேசம் செய்ய முற்படுகின்றமை கேலிக்குரிய விடயம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, சீனா, ரஸ்யா போன்று லிபியா மீதான மேற்குலக நாடுகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், லிபிய உள்நாட்டுப் பிரச்சினையில் மேற்குலக நாடுகள் தலையிடக்கூடாது என இந்தியாவும் நேற்று அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment