Monday, 20 September 2010

யாழ். குடாநாட்டில் கலாசாரச் சீரழிவுகள்


படம் : கொக்குவிலில் வீசப்பட்ட ஆண் குழந்தை.

யாழ்ப்பாணத்தில் சமீபகாலமாக ஒழுக்கச் சீர்கேடு பல்கிப் பெருகி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் கொக்குவிலில் பிரசவித்த ஆண் குழந்தையை தாய் தெருவில் வீசிச் சென்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதுபோல சிசுக்களை வீசும் செயல் பரவலாக நடைபெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ். நல்லூர் தேரின்போது தடைசெய்யப்பட்ட போதைவஸ்த்து பீடா பகிரங்கமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. திருமண வயதை 16 ஆக அரசு இறக்கிவிட்ட பின்னர் கல்விக்கூடங்களும்இ மாணவர்களும்இ கைத்தொலைபேசிகளும்இ காதல் மொழிகளும் கரைபுரண்டு ஓடுவதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண கலாச்சாரத்தை காப்பாற்ற போராடும் வெளிநாட்டு தமிழர்கள் பலர் இவற்றை நேரில் பார்த்து வெளிநாடுகளில் கூட இத்தகைய சீத்துவக்கேடு கிடையாதே என்று ஆச்சரியப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

சமீபத்தில் சில யாழ். தமிழ் இளைஞர்களை பிடித்து கண்டித்த சிங்கள போலீஸ்காரர் ஒருவர் உங்களுக்கெல்லாம் பிரபாகரன்தான்டா சரி என்று திட்டியதாக தெரியவருகிறது. ஒரு வருடத்தில் இப்படி தலைகீழாக மாறும் ஓர் இனத்தின் விடிவிற்காகத்தான் ஒரு வாரத்தில் ஓர் இலட்சம் மக்கள் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள் என்று கலங்கியபடி சொன்னார் யாழ். சென்று திரும்பிய முதியவர் ஒருவர். அதேவேளை வெளிநாடுகளில் இருந்து தாறுமாறாக பணத்தை அனுப்பி அங்குள்ள இளையோரை சீரழிவுக்குள் தள்ளுவதில் புலம் பெயர் தமிழ் குடும்பங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொடுக்கும் பணத்திற்கு நடக்கும் பணி என்ன என்பதை வரையறை செய்யாமல் பணத்தை அனுப்புவதால் வரும் பேராபத்தாக இவை உள்ளமை குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் யாழில் உள்ள ஊர் ஒன்றில் ஏழ்மையில் உள்ளோருக்கு தொழில் செய்து வாழ இயந்திரங்கள் தருவதாக வெளிநாட்டு தாபனமொன்று கேட்டபோது யாருமே தொழில் செய்யும் பணியில் ஆர்வம் காட்டவில்லை என்ற அறிக்கை கிடைத்துள்ளது. இவைகள் இன்றைய யாழ்ப்பாணத்தை அளவீடு செய்யும் ஆவணங்களாக உள்ளன.

********************************************************
யாழ். குடாநாட்டில் வர்த்தக நடவடிக்கைகள் விவசாயம், பொருளாதாரத் துறைகளின் அபிவிருத்திகள், உல்லாசப் பயணிகள் வருகை என்று அனைத் துச் செயற்பாடுகளும் “ஜெற்’ வேகத்தில் முன்னேறி வருகின்றன.

இவற்றுக்கு ஈடுகொடுக்குமாற் போல் கலாசாரச் சீரழிவுகளும் போட்டிபோட்டுக் கொண்டு அதிகரித்து வருகின்றன. இந்தச் சீரழிவு நிலைமையை அவதானித்து அதனைக் கட்டுப்படுத்தி ஒழித்துக் கட்ட களத்தில் குதிக்கத் தயாராகிவிட்டார் யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார்.

குடாநாட்டில் அருவருக்கத்தக்க கலாசாரச் சீரழிவுகள் நாளாந்தம் பெருகி வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அவை தொடர்பாக பல்வேறு தரப்புக்களிடம் இருந்தும் எனக்கு முறைப்பாடு களும் வந்த வண்ணமுள்ளன.

இந்த மோசமான நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டிய அவசியத்தை நான் உணர்ந்துள்ளேன். அதற்கான நடவடிக்கைகளிலும் நான் இறங்கியுள்ளேன். இந்த விடயம் தொடர்பாக பொலிஸாரின் உதவியை நாடியுள்ளேன். அவர்களுடன் இது குறித்து விரிவாகக் கலந்துரையாடி உள்ளேன். தாம் முழு ஒத்துழைப்பை வழங்கத்தயார் என்று பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.

கலாசாரச் சீரழிவுகள் குறித்து பொது மக்கள் முறையிடுவதற்கு வசதியாக பிரத்தியேக தொலைபேசி இலக்கத்தை ஒதுக்கித் தருமாறு பொலிஸாரிடம் கோரியுள்ளேன். அந்தத் தொலைபேசி இலக்கம் வழங்கப்பட்டவுடன் கலாசாரச் சீரழிவுகள் தொடர்பில் எமக்கு எவரும் அறியத்தந்தால் பொலிஸார் நடவடிக்கையில் இறங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

No comments:

Post a Comment