Dr./Associate Professor,
Høgskolen i Bergen (elektromagnetisk modellering)
Sri Lanka
Valgt som ”åretsforeleser av studentene på ingeniørutdanning ved HiB, har skrevet norsk-tamilsk ordbøker, sitter i blant annet regjeringsoppnevnt utvalg KIM, Forbrukerådets styre, kompetansegruppe for tospråklig opplæring, leder for Tamilsk Ressurs og Veiledningssenter (Bergen), Rektor Den tamilske skolen i Bergen.
Entusiasme
På Høgskolen i Bergen står en entusiastisk tamil foran sine studenter. Han er valgt til årets foreleser på ingeniørutdanningen. Førsteamanuensis Dhayalan Velauthapillai (45) er et unikum på mange måter. Han er ikke bare en dyktig fagperson, men også en primus motor.
– Jeg begynte på høyere utdanning da jeg fortsatt bodde på Sri Lanka. men som tamil ble det for farlig å bli værende i landet, så jeg søkte om opptak på flere utenlandske universiteter. Det første positive svaret kom fra Bergen, og dit kom jeg i 1984, forteller Velauthapillai.
Hans positive væremåte gjør inntrykk. De sosiale egenskapene i kombinasjon med et skarpt intellekt, gjorde at møtet med Norge og nordmenn gikk knirkefritt.
– Jeg hadde store forventninger da jeg kom. Dessuten var jeg svært motivert for å studere realfag. Jeg var så heldig å få gode karakterer slik at jeg fikk stipender og dermed kunne fullføre doktorgraden raskt.
Dhayalans fagfelt er elektromagnetisk modellering, og han er tilknyttet både Høgskolen og Universitetet i Bergen. Han er dessuten rektor på den tamilske skolen, han hjelper ungdom med matematikkferdigheter, har skrevet ordbøker og sitter i det regjeringsoppnevnte KIM-utvalget.
Besøk også følgende linker
Kim
http://www.kim.no/templates/Artikkel.aspx?id=2905
Hio
http://www.hib.no/aktuelt/nyheter/2010/01/Engasjertrollemodell.asp
நோர்வேயின் முதன்மை வெளிநாட்டவராக தமிழர் தெரிவு
நோர்வேயின் பத்து முதன்மை (top10) வெளிநாட்டவர்களில் ஒருவராக, தமிழரான பேராசிரியர் வேலாயுதபிள்ளை தயாளன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
நோர்வே சமூகத்தின் சமூகக் கலாச்சார மற்றும் தொழில்சார் விடயங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய 10 முதன்மையான வெளிநாட்டவர்களை வருடந்தோறும் சுயாதீனமாக ஓர் அமைப்பு தெரிவு செய்து வருகிறது.
16 வயதிற்கு மேல் நோர்வே நாட்டுக்குப் புலம்பெயர்ந்து, மற்றைய வெளிநாட்டவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் தலைமைத்துவ பண்புகளைக் கொண்ட வெளிநாட்டவர்களையே இவ் அமைப்பு தெரிவு செய்து வருகிறது. இவ்வகையில், நோர்வே, பேர்கன் பல்கலைக்கழக, பொறியியல்துறையில் பேராசிரியராக கடமைபுரியும் திரு வேலாயுதபிள்ளை தயாளனை இவ்வமைப்பு 10 முதன்மையான வெளிநாட்டவர்களில் ஒருவராகத் தெரிவு செய்துள்ளது.
பேராசிரியர் தயாளன் அவர்கள் 1984 ம் ஆண்டிலிருந்து நோர்வேயில் வசித்து வருபவர். தான் பிறந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் ஒருவரான இவர், பேர்கனில் தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பெரும் அக்கறையோடு செயற்பட்டு வருவதோடு, பேர்கன் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் அதிபராகவும் சேவையாற்றி வருகிறார். இளைய சமூகம் பல்வேறு ஆளுமைகள் கொண்ட வளம்மிக்க சமூகமாக வளரவேண்டுமென்பதில் அக்கறையுடன் செயற்படும் பேராசிரியர் தயாளன், நோர்வே TECH அமைப்பின் தலைவராகவும் இருந்து, தனது மண் வளம்பெற தனது பங்களிப்பைச் செய்துள்ளார்.
பேராசிரியர் தயாளன், பேர்கன் பல்கலைக்கழகத்தின் முதன்மைப் பேராசிரியராக மாணவர்களால் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அத்துடன் நோர்வேஜிய அரசுக்கு, குடியேறியவர்க்கான விடயங்களில் ஆலோசனை வழங்கும் KIM அமைப்பில் நோர்வேஜிய அரசினால் நியமிக்கப்பட்டிருந்தார். அத்துடன் நோர்வேஜிய கல்வித்திணைக்களத்துக்கான ஆலோசனைக்குழுவிலும், நோர்வேஜிய ஆய்வுநிறுவனத்தின் ஆலோசனைக்குழுவிலும், மற்றும் வேறு அரச, அரசசார்பற்ற ஆலோசனைக் குழுக்களிலும் பேராசிரியர் தயாளன் அங்கம் வகித்து வருகிறார்.
தமிழர்களுக்குப் பெருமை தரும் விதத்தில் அமைந்துள்ள இத்தெரிவையிட்டு தமிழ்மக்கள், குறிப்பாக மாணவர் சமூகம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
Kim
http://www.kim.no/templates/Artikkel.aspx?id=2905
Hio
http://www.hib.no/aktuelt/nyheter/2010/01/Engasjertrollemodell.asp
Kilde: Aftenposten og Tamilwin
No comments:
Post a Comment