Welcome to this blogg. More than 80 million tamil people live in many countries across distant seas. There is no state without a Tamil - but there is no state for the tamils. Velkommen til denne bloggen. Her vil jeg oppdatere nyheter om tamiler og deres kamp for et selvstyre både på Sri Lanka og utenfor øya. என்னுடைய இந்த இணைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி: தமிழன் இல்லாத நாடில்லை, தமிழனுக்கென்று ஓர் நாடில்லை
Wednesday, 13 January 2010
கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் (16.01.2010)
“கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்
நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும்
எமது விடுதலை வரலாற்றின்
ஒரு காலத்தின் பதிவு”
அணையா தீபம்; கேணல் கிட்டு
உயிரின் அடிநாதத்தில் எழுகிறது
உனக்கான கூக்குரல் -
குண்டு தொலைக்காத உன் தைரியத்தை
ஒரு கப்பல் தகர்த்ததே சோகம்;
தோல்வி நெருங்கிடாத உன்
ராஜா பாட்டையில் -
ஒரு வெற்றி குறுக்கிட்டு
உயிர் தின்றதே வலிக்கும் ரணமானது;
எதிரியின் உறக்கத்திலும் -
உயிர் தைக்கும் மரணபயத்தை
உன் வீரிய புயலின் வளர்ச்சி கொடுத்தும் – அதை
காலம் தின்று வரலாறு பேசுகிறதே – வருத்தமில்லையா;
இரண்டில் ஒரு கால் இழந்தும்
இரட்டை குழல் துப்பாக்கி ஏந்தி
எவர் வரினும் தவிடு தவிடாக்கிய உன் வீரத்தை
ஒற்றை கப்பல் பறித்துக் கொண்டதே; நியாயமா???
இன்று உலகமறிந்த இந்திய சூழ்ச்சிக்கு
என்றோ பறையடித்து மானம் வென்ற மாவீரா;
உன் உயிர் உறைந்த எம் ஈழ தேசம் -
உன் நினைவுகளால் உன்னை -
எங்களில் உயிர்பித்திருக்குமென்றே கர்ஜிக்கிறோம்!
கப்பல் தகர்த்ததா(?) கடுந்தீ தின்றதா(?) எல்லாம்
வரலாற்றில் இருக்கட்டும்;
இதயத்தில் விளக்காக என்றுமே எரியும்
ஈழ தீபமே; அண்ணன் கேணல் கிட்டுவே;
ஒரு சபதம் புரி;
என்று வரை ஈழ காற்று வீசுமோ
என்று வரை தமிழாள் உயிர் கொள்வாளோ
என்றுவரை ஒரு ஈழ தமிழருக்கான சுவாசம் இயங்குமோ
என்றுவரை தமிழனின் கடைசி சப்தம் அடங்குமோ
அன்றுவரை அத்தனை இதயமும் உனை தாங்கியே
உயிர் பூண்டிருக்கும்;
உனக்காய் ஒரு சொட்டேனும் கண்ணீர்
சொட்டிக் கொண்டே இருக்கும்!!
- வித்யாசாகர்
----------------------------------------------------------------------
கேணல் கிட்டுவும் அவருடன் வந்த ஒன்பது தோழர்களும் தீயோடு தீயாகி வங்கக் கடலில் சங்கமித்த அந்தச் சம்பவம் சரித்திரம் மறக்காத ஒரு சாவு மட்டுமல்ல அது எங்கள் நெஞ்சங்களை நீங்க மறுக்கும் நெடும் அலையாகி நினைவெங்கும் நிலைபெற்று விட்டதொன்று. கேணல் கிட்டு தேசியத் தலைவரால் அதிகம் நேசிக்கப்பட்டவர். அவரின் அன்பை அனுபவித்தவர். தலைவரின் இலட்சியத்திற்கு தோள் கொடுத்து அவரின் மனதோடு ஒன்றித்து வாழ்ந்தவர்
அதனால்தான் தமிழீழத் தேசியத் தலைவர் “கிட்டுவை ஆழமாக நேசித்தேன் தம்பியாக தளபதியாக எனது சுமைகளைத் தாங்கும் உற்ற தோழனாக நான் அவனை நேசித்தேன். இது சாதாரண மனித பாசத்திற்கு அப்பாலானது. ஒரே இலட்சியப்பற்றுணர்வில் ஒன்றித்து போராட்ட வாழ்வில் நாம் பகிர்ந்துகொண்ட அனுபவத்தில் ஒருவரையொருவர் ஆழமாக இனங்கண்ட புரிந்துணர்வில் வளர்த்த நேயம் அது” என கேணல் கிட்டுவிற்கும் தமக்கும் இடையே இருந்த பாசப் பிணைப்பினை வெளிப்படுத்துகிறார். கிட்டு எந்தளவிற்கு தலைவரின் மனதில் இடம்பிடித்தாரோ அதேயளவு தமிழீழ மக்களின் மனங்களிலும் நிறைந்திருக்கின்றார். எந்தக் காலத்திலும் மறக்கமுடியாத அவரின் நினைவுகளோடு இன்று தமிழீழம் நிமிர்ந்து நிற்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்திலிருந்து ஆழப்பதிக்கப்பட்ட கிட்டுவின் வரலாற்றுத் தடங்கள் அழிக்க முடியாத பெரும் பதிவாக பரிணமித்துஇ தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
1979ல் ஆரம்ப காலப்பகுதி விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிடப்பட்ட காலம், சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் பதினெட்டு வயது நிறைந்த இளைஞன் தன்னை விடுதலைப் போராளியாக மாற்றியதன் மூலம் வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்றுஇ பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். கிட்டுவும்இ இன்னும் சில தோழர்களும் தலைவரிடமே போரியலை நேரில் கற்றார்கள். கிட்டுவின் துடிப்பும், வேகமும் அங்கிருந்தவர்களிடையே அவரை வேறுபடுத்திக் காட்டியது. எதையும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற வேகமும் எந்த விடயத்தையும் அறிந்துகொள்ளும் ஆற்றலும் கிட்டுவிற்கு இயல்பாகவே இருந்ததால் தலைவரின் எண்ணங்களைஇ சிந்தனைகளைஇ மக்கள் மீது அவர் கொண்டிருந்த எல்லை கடந்த பாசத்தைஇ தலைவரின் அருகில் இருந்த கிட்டு அறிந்துகொள்கிறார். அளவு கடந்த திறமையுடன் வேகமும் விவேகமும் நிறைந்த அவரது செயற்பாடுகள் அவர் மீதான தனி நம்பிக்கை வளரக் காரணமாகின்றன. தன் மீது தலைவர் வைத்திருக்கும் நம்பிக்கையை நிரூபிக்கும் காலம் கனிந்துவரும் வரை கிட்டு காத்திருக்கிறார்.
1983 மார்ச் 04 இல் அற்புதன் தலைமையில் உமையாள்புரம் தாக்குதலுக்காக விடுதலைப் புலிகளின் அணி ஒன்று செல்கிறது. அதில் கிட்டுவும் ஒருவர், தாக்குதலுக்கான களம் தீர்மானிக்கப்படுகிறது. வீதியில் நிலக் கண்ணிவெடிகளை பொருத்திவிட்டு எதிரியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கண்ணிவெடிகளை கையாளும் போதியளவு செயற்திறன் போராளிகளுக்கு இல்லாத காலம் அது. இராணுவ வாகனங்கள் இலக்காக அண்மிக்கும் நேரத்தில், துரதிஸ்ட வசமாக வாகனங்களைக் கண்டு மிரண்டு ஓடி வந்த ஆட்டுக்குட்டியின் கால்கள் பட்டு கண்ணிவெடிகள் வெடிக்க போராளிகள் நிலை குலைந்து போகிறார்கள். துப்பாக்கி ரவைகளைக் கக்கியவாறு இரு இராணுவ கவச வாகனங்கள் போராளிகளை நெருங்கிவர, பின்வாங்கிச் செல்வதைத்தவிர வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால், கிட்டு மட்டும் எதிரியை எதிர்கொள்ளும் சாதகமற்ற களநிலையைக் கருத்திற்கொள்ளாது துணிந்து நின்று தான் வைத்திருந்த ஜுத்திறி (பு-3) துப்பாக்கியால் இராணுவ கவசவாக னத்தை நோக்கிச் சுடுகிறார். இலக்குத் தவறவில்லை. சாரதி காயப்பட வாகனம் செயலற்றுப் போகிறது. தலைவரின் நம்பிக்கையை மெய்ப்பித்த மகிழ்ச்சியோடு கிட்டு களம் விட்டு அகன்றார். அவரின் முதல் களமே தனி மனித சாதனையாக ஆரம்பமாகிறது.
1983 ஏப்ரல் 07இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். இதன்பின் சிறீலங்கா அரசால் திணிக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல, ஜுலை 23ல் இராணுவ வாகனங்கள் மீது நடாத்தப்பட்ட திருநெல்வேலிக் கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் கலந்து கொள்கின்றார். இவவாண்டின் இறுதிக் காலத்தில் இந்திய மண்ணில் பயிற்சிக்கெனச் சென்ற இயக்கத்தின் முதற்குழுவின் இரண்டாவது பொறுப்பாளராக கிட்டு நியமிக்கப் படுகின்றார்.
பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டு 1984 மார்ச் 02இல் நடைபெற்ற குருநகர் இராணுவமுகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்துகின்றார். இதேநேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் 1985 ஜனவரி 09இல் எதிரியுடனான மோதலில் வீரச்சாவடைய அவரின் இடத்திற்கு கிட்டு தலைவரால் நியமிக்கப்படுகின்றார். யாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடாத்திஇ அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார்.
யாழ். மாவட்டத்தில் கிட்டுவின் வெற்றிகரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. எதிரிப்படை யாழ். மண்ணில் அவனுடைய முகாமுக்குள்ளேயே முடக்கப்படுகிறது. யாழ். கோட்டையை ஆக்கிரமித்திருந்த சிறீலங்கா இராணுவம் கிட்டு என்ற பெயரைக் கேட்டாலே கதிகலங்கிப் போகும் நிலை உருவானது. மக்கள் மத்தியில் கிட்டு என்ற மூன்றெழுத்துப் பெயர் மந்திரமாக உச்சரிக்கப்படுகிறது. யாழ். மண்ணில் எதிரிப்படையை மட்டும் அவர் வெற்றிகொள்ளவில்லை. மாறாகஇ மக்களின் மனங்களையும் அவர் வெற்றிகொண்டார். மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதில் அவர் அதிக அக்கறை செலுத்தினார். தொழில் நிலையங்கள்இ நூலகங்கள்இ மலிவுவிலைக் கடைகள்இ பூங்காக்கள் என்பவற்றை நிறுவி மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தினார். இவவாறாகக் கிட்டுவின் சமூகப்பணிகள் விரிவடையஇ அவர் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் ஒரு ஒப்பற்ற போராளியாக மக்களால் உணரப்பட்டார்.
தமிழீழ மக்கள் மனங்களில் மாத்திரமல்லஇ எல்லைகடந்து வாழும் தமிழ் உறவுகள் அனைவருமே கிட்டுவின் வீரசாதனைகளை அறிந்து பெருமிதம் அடைந்தார்கள். விடுதலைப் புலிகளால் மன்னாரில் வைத்துச் சிறைப்பிடிக்கப்பட்ட இரு சிங்களச் சிப்பாய்களின் விடுவிப்பு தொடர்பாக 1986 நவம்பர் 10இல் சிங்கள இராணுவத் தளபதியான கேணல் ஆனந்த வீரசேகராஇ கப்டன் கொத்தலாவை ஆகியோரை தனது இடத்திற்கு அழைத்துச் சந்தித்ததன் மூலம் கிட்டு என்ற பெயர் சிங்கள மக்கள் மத்தியிலும் பிரபல்யம் அடைந்தது.
1987 மார்ச் இறுதியில் தேசத்துரோகி ஒருவனின் கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இடதுகாலை இழந்த கிட்டு தனது மனஉறுதியால் முன்னைய வேகத்துடனும்இ திடகாத்திரத்துடனும் விடுதலைப் போருக்கு வலுச்சேர்ப்பவராக வளர்ந்து வந்தார். இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா சென்ற கிட்டு ஒப்பந்தம் முறிவடைந்த நிலையில்இ இந்திய அரசினால் திணிக்கப்பட்ட போரின் உண்மை நிலைப்பாட்டை வெளிக் கொணர பெரிதும் பாடுபட்டார். இந்திய அரசியல் தலைவர்கள்இ பத்திரிகையாளர்களர்இ கலைஞர்கள்இ பேராசிரியர்கள் எனப் பலரையும் சந்தித்துஇ எமது நிலைப்பாடு தொடர்பாக எடுத்துரைத்தார். எமது தியாக வரலாறுகளை பல வெளியீடுகள் மூலம் இந்திய மக்களின் பார்வைக்குக் கொண்டுவந்தார். இவவாறான நிலையில் கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும்இ சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்து வைத்திருந்தது. சிறைக்குள் இருந்தபடியே அவர் தமிழகத்திலிருந்து வெளிவரும் தேவி இதழுக்கு போராட்டம் தொடர்பான நீண்ட தொடர் கட்டுரையை எழுதினார். சிறையிலிருக்கும் தன்னை விடுவிக்கும்படி கிட்டு நடாத்திய அகிம்சைப் போருக்கு அஞ்சிய இந்திய அரசு அவரை தமிழீழத்தில் விடுதலை செய்தது. விடுதலை பெற்ற கிட்டு வன்னிக் காட்டில் தலைவரைச் சந்தித்து இந்திய இராணுவத்திற்கு எதிரான போருக்கு இறுதிவரை முகங் கொடுத்தார்.
இந்திய இராணுவம் மெல்ல மெல்ல தோல்விமுகம் காணும் நிலை உருவானது. அமெரிக்காவிற்கு வியட்நாமும்இ ரஸ்யாவிற்கு ஆப்கானிஸ்தானும் புகட்டிய பாடத்தை தமிழீழம் இந்தியாவிற்குப் புகட்டியது. இந்நிலையில் இலங்கை அரசு இந்தியாவை நிராகரித்து புலிகளுடன் பேச முன்வந்தது. 1989இல் சிறீலங்கா அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டனுக்குப் பயணமானார்.
கிட்டு லண்டனில் வாழ்ந்த காலத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழரிடையே போராட்ட உணர்வையும்இ நம்பிக்கையையும் ஊட்டினார். களத்தில்இ எரிமலை’ எனப் பல்வேறு சஞ்சிகைகள் மூலம் ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துச் சென்றார். விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்புஇவிடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகம்இ எனப் பல்வேறு அமைப்புக்களையும் வெளிநாட்டில் அமைத்துச் செயற்பட்டார். விடுதலை உணர்வையும்இ தாய் மண்ணின் பற்றுறுதியையும் தாயக மண்ணை விட்டு புலம்பெயர்ந்த மக்கள் மறந்து போகாவண்ணம் தனது செயற்பாட்டை விரிவுபடுத்தினார். எனினும் கிட்டு எங்குதான் வாழ்ந்தாலும் எப்பணியைச் செய்தாலும் அவர் மனம் தமிழீழ மண்ணையே சுற்றிவந்தது. அவர் தலைவரைஇ தாயகத்தைஇ தமிழீழ மக்களை ஆழமாக நேசித்தார். தமிழீழத்தில் எப்போது தனது கால் மீண்டும் பதியும் என ஏக்கத்தோடு காத்திருந்தார்.
கிட்டு எதிர்பார்த்திருந்தது போல தமிழீழத்திற்குச் செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. குவேக்கஸ் சமாதானக் குழுவின் யோசனைகளுடன் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் கிட்டுவும் அவரது தோழர்களும் பயணமானார்கள். யாரும் சென்று வரக்கூடிய சர்வதேச கடற்பரப்பில் இந்தியா தனது சதிவலையைப் பின்னியது. இந்தியக் கடற்படை சர்வதேச கடல் எல்லையில் கிட்டுவின் கப்பலை மறித்து வலுக்கட்டாயமாக தனது எல்லைக்குள் இழுத்துச் சென்றது. சமாதான முயற்சிகள் பற்றி இந்திய அரசிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவை பயனற்றுப் போயின. குமரப்பாஇ புலேந்திரன்இ திலீபன்இ ஜொனி என எமது தளபதிகளின் தொடர் இழப்புக்குக் காரணமான இந்தியா தனது பொறிக்குள் மூத்த தளபதி கிட்டுவையும் சிக்கவைத்தது. உயிரிலும் பெரிது தன்மானம் என நினைக்கும் தலைவனின் வழியில் வளர்ந்த கிட்டுவும் ஒன்பது தோழர்களும் அன்று ஆட்சியிலிருந்த இந்திய அரசிடம் பணிந்து போகாதுஇ தமிழீழத்தைஇ தலைவனை நினைத்தவாறே தீயில் கலந்து கடலில் சங்கமித்துப் போனார்கள்.
கேணல் கிட்டுவின் இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவர்
கிட்டுவின் இழப்பு தலைவனின் ஆத்மாவை மாத்திரமல்ல, தமிழினத்தின் ஆத்மாவையே பிழிந்த ஒரு சோக நிகழ்வு. மக்களால் மனதாரப் போற்றப்பட்ட அந்தப்பெரு வீரனை இனி எங்கு காண்போம் எனத் துடித்தனர் மக்கள். பல இழப்புக்களைக் கடந்து வாழக்கற்றுக்கொண்ட மக்களிற்கு கிட்டுவின் இழப்பு ஜீரணிக்கமுடியாத தொன்றாகவே இருந்தது. எனினும் தோல்விகளையும், இழப் புக்களையும் தனக்கான வெற்றியின் பாடமாக் கிக் கொள்ளும் தலைவர், கிட்டுவின் இழப் பிற்கு புதிய பரிமாணத்தைக் கொடுக்கின் றார். “கிட்டு நீ சாகவில்லை, ஒரு புதிய மூச் சாக பிறந்திருக்கிறாய்” எனக்கூறி தனக் குள் ஒரு வீரசபதம் எடுத்துக்கொள்கிறார்.
இன்றைய உலகில், தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் எவராலும் நிராகரிக்க முடியாத பெரும் வடிவம் எடுத்ததில் கிட்டுவின் பங்கு இன்றியமையாதது. உலகெங்கும் சிதறிவாழ்ந்த தமிழ் மக்களை ஒருங்கிணைத்து, தமிழீழ விடுதலையை நோக்கி அவர்களை அணிதிரட்டுவதில் கிட்டு வெற்றி கண்டார் என்றே சொல்லவேண்டும். அந்தநிலை இன்று இன்னும் விரிவடைந்து மக்கள் -புலிகள் என்ற வேறுபாட்டை இல்லாதொழித்துவிட்டது. சர்வதேச சமூகம் விடுதலைப் போராட்டங்களையும், பயங்கரவாதத்துடன் இணைத்து தனது பிற்போக்குத் தனமான செயலை நியாயப்படுத்திவரும் வேளைகளில்கூட, உலகெங்கும் பரந்துநிற்கும் தமிழ் மக்கள் அந்த நெருக்கடிக்கு முகம் கொடுத்து தொடர்ந்தும் எழுச்சி கொள்கிறார்களென்றால் அது கிட்டுவால் அன்று விதைக்கப்பட்ட விடுதலை குறித்த கருத்துருவாக்கமும் விழிப்புணர்வுமே அடிப்படைக் காரணமாகின்றன.
கெரில்லா அமைப்பாக இயங்கிய அந்த நாடகளில், சிறியரக ஆயுதங்களைக்கொண்டு பெரும் சாதனைகளை நிலைநாட்டிய அந்த ஒப்பற்ற வீரனின் பெயரிலே, இன்று தமிழீழ தாயகத்தில் உருவாக்கப்பட்டுள்ள கனரக ஆயுதங்களைக் கொண்ட மிகப்பெரிய படையணி தனது சாதனைகளால் உலகத்தை வியக்கவைக்கின்றது. போரியல் நுணுக்கமும் போரிடும் திறனும் கொண்ட கேணல் கிட்டு பீரங்கிப் படையணி எண்ணிலடங்கா சமர்க்களங்களில் ஈட்டிய பெரும் வெற்றிகள் மூலம், தனது சாதனைத் தடங்களை தொடர்ந்தும் பதித்துக்கொண்டிருக்கின்றது. நவீன போரி யற்கலையில் தமிழனின் தேசியப்படை முன்னேறிச் செல்வதற்கு கிட்டுவின் கனவும் ஒரு காரணம்.
ஊடகங்களில் தமிழரின் உண்மையான முகம் வெளியில் தெரியவேண்டும் என்பதில் கிட்டு அதிக அக்கறை காட்டினார். தமிழினத்தின் நியாயப் போராட்டங்களை பயங்கரவாதப்படுத்தி உலகெங்கும் பொய்யுரைக்கும் சிறீலங்கா அரச ஊடகங்களையும் அவற்றைச் சார்ந்துநிற்கும் சர்வதேச ஊடகங்களையும் கடந்து, உண்மையான செய்திகள் உலகெங்கும் தெரிவிக்கப்படவேண்டும் என்பதே அவர் கொண்டிருந்த எண்ணமாகும். இவை இன்று நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. தமிழீழத்திலும் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் தங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் உண்மை முகத் தோற்றத்தை உணரக்கூடிய விதத்தில் தமிழ் ஊடகத்துறை பெற்றிருக்கும் அபரிமிதமான வளர்ச்சிக்கு கிட்டுவின் எண்ணங்களின் தாக்கமும் ஒரு காரணம்.
சிறுவர் நலன்பேணும் திட்டங்கள், கல்வி, அபிவிருத்தி, பொருண்மிய மேம்பாடு, சமூக மேம்பாடு என மக்கள் நலன்பேணும் திட்டங்களில் அவர் காட்டிய அதீத அக்கறையின் பயனாக இன்னும் எம்மண்ணில் இச்செயற்பாடுகள் பெரும் வளர்ச்சி பெற்ற நிலையில் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு மேலாக, ஒன்றுபட்ட தமிழினத்தின் எழுச்சியை இவர் கனவாகக் கொண்டிருந்தார். எதிரியின் இறுகிய பிடிக்குள்ளும் நிமிர்ந்து நின்று தமிழ் மக்கள் வெளிப்படுத்தும் உணர்வெழுச்சி கிட்டுவின் கனவிற்கு கட்டியம் கூறிநிற்கின்றது.
எங்கும் எதிலும் எல்லாவற்றிலும் கிட்டு என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழினத்தின் ஆன்மாவில் அழிக்கமுடியாததோர் இடம் அவருக்கு என்றுமுண்டு. எல்லையற்ற திறமைகளாலும் மக்கள் மேல் அவர் வைத்திருந்த உண்மையான பாசத்தினாலும் தமிழினத்தில் நீங்காத நினைவுகளை அவர் பதித்துச் சென்றி ருக்கின்றார். இறுதிமூச்சுவரை தமிழினத்தின் தன்மானம் காத்து தமிழினத் தலைவனுக்குப் பெருமையைச் சேர்த்த அந்த ஒப்பற்ற வீரனை எந்நாளும் எவராலும் மறக்கமுடியாது. “கிட்டு ஒரு தனிமனித சரித்திரம், நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றின் ஒரு காலத்தின் பதிவு” எனக்கூறும் தமிழீழத் தேசியத் தலைவரின் எண்ணங்களோடு ஒன்றிணைந்து கேணல் கிட்டுவை நெஞ்சிலேற்றுவோம். அவர் நினைவு தினத்தில் உறுதியெடுத்துக்கொள்வோம்
நடுக்கடலில் படுகொலை
‘கிட்டு பயணம் செய்து எம்.வி. யகதா என்னும் கப்பல் ஹோண்டுராஸ் நாட்டிலுள்ள சான் – லோரன்சோ என்னும் துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டதாகும். இந்தக் கப்பலின் மேற்புறத்தில் அதன் பெயரும் அஃது எந்த நாட்டிற்கு உரியது என்பது; தெளிவாக எழுதப்பட்டிருந்தன. இந்தியக் கடற்படைக் கப்பல்கள் 14.1.93 அன்று இரவு 10.30 மணிக்கு அதன் அருகில் நெருங்கிய பொழுது ”இக்கப்பலின் பெயரைப் பார்க்க முடியவில்லை அதன் மீது எந்த நாட்டுக் கொடியும் பறக்கவில்லை”" என்று குற்றம் சாட்டுவது அர்த்தமற்றது. ஏனென்றால் எந்த நாட்டுக்கொடியும் கதிரவன் மறைந்த பி;ன்பு பறக்கவிடுவது வழக்கமல்ல. ஏன் இந்தியாவின் கொடி பறக்கவில்லை.
7.1.93 அன்று இந்தோனேசியாவின் மலாக்கா – சந்தியிலுள்ள பியுூபர் – கலா தீவி;ல் தளபதி கிட்டுவும் மற்றும் 9 விடுதலைப் புலிகளும் இந்தக் கப்பலில் ஏறி;னார்கள். இந்தக் கப்பலில் ஆயுதங்கள் எதுவும் இருக்கவில்லை. தமிழீழப் பகுதிக்குக் கொண்டு செல்வதற்காகப் பெட்ரோல், டீசல், மருந்துகள் போன்றவை மட்டுமே இருந்தன. இவற்றுடன் ஆயுதங்களோ, வெடி மருந்துகளோ எடுத்து வருவது அபாயகரமானது. எனவே அவற்றைக் கொண்டு வரவில்லை.
13.1.93 அன்று இந்தியாவில் இருந்து 440 மைல்களுக்கு இப்பாலும், இலங்கையின் தென் முனையிலிருந்து 290 மைல்களுக்கு அப்பாலும், நிலநேர்கோட்;டிற்கு வடக்கில் 6 பாகையிலும் நிலக்கோட்டிற்கு கிழக்கே 8 பாகையிலும் இந்தக் கப்பல் சென்று கொண்டிருந்த பொழுது கப்பல் நிறுத்தப்பட்டு கடலைகளின் இயற்கையோட்டத்தில் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. சனவரி 16-ஆம் நாள் அவர்கள் யாழ்ப்பாணத்தை அடையவேண்டியிருந்ததால் அங்கிருந்து வரும் சமிஞ்கைக்காகக் காத்திருந்தார்கள். அதே இரவு 10.30 மணியளவில் இந்தியக் கடற்படை கப்பல் ஒன்று விடுதலைப் புலிகளின் கப்பலை அணுகியது. இரவு நேரம் ஆதலால் இந்தியக் கப்பலை விடுதலைப் புலிகளால் அடையாளம் காண முடியவில்லை. இந்திய கடற்படைக் கப்பலிலிருந்து வானொலி மூலமாக் கப்பலின் காப்டன் ஜெயச்சந்திரனுடன் தொடர்பு கொள்ளப்பட்டது. ‘திரிகோணமலையை நோக்கி இந்தக் கப்பல் செல்கிறதா” என்று கேட்டபொழுது ‘ஆம்” என்று பதில் கொடுக்கப்பட்டது. பொதுவாக ஒரு கப்பலை நோக்கி இது போன்ற கேள்விகள் கேட்கப்படுவதில்லை. இடுத்த கேள்வியாக ‘நீங்கள் இலங்கைத் தமிழர்களா”? என்று கேட்கப்பட்டது. அதற்கும் ‘ஆம்” என்று பதில் கொடுக்கப்பட்டது. மேலும் ‘யகர்தா” கப்பலில் பயணிகள் யாரும் இருக்கின்றார்களா என்பதை பார்த்து அறிய இந்தி;யக் கடற்படைக் கப்பலின் காப்டன் விரும்புவதாகவும் கூறப்பட்டது. இதற்கு பின்னர் ஜெயச்சந்திரன் ”கேள்விகளுக்கு மேல் கேள்விகள் கேட்கும் நீங்கள் யார்?”" என்று வினாவினார். தாங்கள் ‘சர்வதேசக் காவல் பணிபுரிவதாக” இந்தியக் கடற்படைக் கப்பலின் காப்டன் பதில் கூறினார். ‘யகதா கப்பலின் பயணிகள் யாரும் இருக்கிறார்களா”? என்பதை அறிந்து கொள்வதில் மாத்திரமே அவர்கள் தீவிரம் காட்டினார்கள். அதன் பின்பு தங்கள் கப்பலை நெருங்கக்கூடாது என்று ஜெயச்சந்திரன் இந்தியக் கடற்படைக் கப்பலை எச்சரித்தார்.
சிங்களக் கடற்படைக் கப்பல்தான் தங்களை வழிமறிக்கிறது என்று ஜெயச்சந்திரனும் மற்றவர்களும் நினைத்தார்கள். எனவே அதை தாக்குவதற்கு ஆயத்தம் ஆனார்கள். இதற்குப் பின்னர்தான் இந்திய கடற்படைக் கப்பலின் காப்டன் தாங்கள் யார் என்ற உண்மையைத் தெரிவித்தார்.
ஜ.என்.எஸ்.38 விவேகா என்னும் இந்தியக் கடற்படைக் கப்பல்தான் தங்களை மறிக்கிறது என்ற விவரம் தெரியவந்தது. இந்த உண்மை தெரியவந்ததும் அந்தக் கப்பலை தாக்கவேண்டாம் என்று தளபதி கிட்டு ஜெயச்சந்திரனுக்கு ஆணையிட்டார். ஏற்களவே இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் உள்ள உறவு சீராக இல்லாததாலும் விடுதலைப் புலிகள் இந்தியாவுடன் பகையுணர்ச்சி கொண்டிருக்கின்றார்கள் என்ற பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டு வரும் சுூழ்நிலையிலும் இந்தியக் கடற்படைக் கப்பலை நாம் தாக்கினால் அது மேலும் வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தும் எனவே, நமது உயிரை இழக்க நேர்ந்தாலும் பரவாயில்லை இந்தியக் கப்பலைத் தாக்க வேண்டாம் என்று தளபதி கிட்டு திட்டவட்டமாகச் கூறினார்.
அதன் பின்பு இந்தியக் கடற்படைக்கப்பலின் காப்டனுடன் வானொலி மூலம் பேசுவதற்கு கிட்டு விரும்பினார்.
இந்திய காப்டன் கிட்டுவை யார் என் விசாரித்தார். அதற்கு கிட்டு பதில் அளிக்கும்போது ‘தன்னை இப்பொழுது மாறன் என்று அழைக்கலாம்” பின்பு தன்னுடைய உண்மையான அடையாளத்தை தெரிவிக்கிறேன்” என்று பதில் கூறினார். எங்களுடைய கப்பலை எதற்காக மறிக்கிறீர்கள் என்று கேட்ட பொழுது அதற்குப் பதில் அளித்த இந்தியக்; கப்பலின் காப்டன் ‘அது பற்றி எனக்குத் தெரியாது, உங்களுடைய கப்பலை கடற்கரைக்குக் கொண்டுவரும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு செய்யத் தவறினால் உங்கள் கப்பலைத் தாக்க நேரிடும்” என்று எச்சரித்தார்.
தங்களுடைய கப்பலில் பெட்ரோல், டீசல் ஆகியவை சேமித்து வைக்கப்பட்டு இருப்பதால் சண்டை மூண்டால் பெரும் சேதம் ஏற்படும் என்பதால் இந்தியக் கடற்படைக் கப்பலைத் தொடர்ந்து செல்லக் கிட்டு முடிவு செய்தார்.
சனவரி 14-ஆம் நாள் காலை 6 மணிக்கு மற்றொரு இந்தியக் கடற்படைக் கப்பல் கிட்டுவின் கப்பலுக்கு அருகே வந்தது. ஜ.என்.எஸ். பாப்பா 44 கிருபாணி என்னும் கப்பல் ஒருபுறமும், ஜ.என்.எஸ் 38 விவேகா மறுபுறமும் கிட்டுவின் கப்பலுக்குத் காவலாக இந்தியக் கடற்கரையை நோக்கி வழிநடத்திச் சென்றன. எம்.வி.யகதா கப்பலில் தளபதி கிட்டு பயணம் செய்கிறார் என்பதை நன்கு தெரிந்துகொண்டு, அவரை யாழ்ப்பாணம் செல்லவிடாமல் தடுத்து உயிரோடு சிறைபிடித்துச் செல்லவே இந்தியக் கடற்படைக்கப்பல்கள் வந்திருக்கின்றன என்ற உண்மை தெளிவாகியது. இருந்தாலும்; கிட்டு இந்தியக் கடற்படைக் காப்டனுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைச் சந்தித்து சமாதான் திட்டம் ஒன்றைப் பற்றி விவாதிக்கவே தான் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டு இருப்பதாகச் கிட்டு கூறினார். ஆனால் இந்தியக் காப்டனோ அவர்களைச் சென்னையை நோக்கி வருமாறு வற்புறுத் தினார். சென்னை அழைத்துவரவேண்டிய அவசியம் என்ன? என்று கேட்டபொழுது அவர் அதற்கு மழுப்பலான பதில் கூறினார். அது பற்றி தனக்கு எதுவும் தெரியாதென்றும், கிட்டு சென்னை வந்த பின்பு உயர் அதிகாரிகள் அவரைச் சந்தித்து மேலும் பேசுவார்கள் என்றும் கூறினார்.
இந்தப் பேச்சுக்களிடையே பயணட் தொடர்ந்தது. சென்னை அருகேயுள்ள எண்ணு}ரிலிருந்து கிழக்கே 16ஆவது மைலுக்கு யகாதா கப்பல் வந்த பொழுது அதை நிறுத்தி நங்கூரம் பாய்ச்சும்படி கிட்டு ஆணையிட்டார். அதற்குமேலும் பயணம் செய்தால் இந்தியாவின் கடல் எல்லைக்குள் நுழைவதற்கு கிட்டு திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்த நிலைமையில் மற்றொரு இந்தியக் கடற்படைக் கப்பலான ஜ.என்.எஸ் சாவித்திரி விரைந்து வந்து கிட்டுவின் கப்பலை முற்றுகையிட்ட கப்பல்களுடன் சேர்ந்துகொண்டது. உடனடியாகச் சரண் அடையும்படி கிட்டுவுக்கு ஆணையிடப்பட்டது. அதற்குக் கிட்டு மறுத்துவிட்டார். தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் இந்திய உளவுத்துறை தலைவர்களையோ சென்னையில் உள்ள அரசியல் தலைவர்களையோ அழைத்து வரும்படி கிட்டு கேட்டுக்கொண்டார். அதை ஏற்பதற்கு இந்திய கடற்படை தளபதி மறுத்துவிட்டார்.
16-ஆம் நாள் காலை 6 மணி வரை அவகாசம் தருவதாகவும் அதற்குள் கிட்டுவும் மற்றவர்களும் சரணடைய வேண்டும் என்றும் இல்லையென்னறால் அதிரடிப்படை அவர்களைத் தாக்கிச் சிறைபிடிக்கும் என்றும் எச்சரித்தார். சரியாக காலை 6 மணிக்கு இரண்டு உலங்குவானு}ர்திகளும் மூன்று போர் விமானங்களும் கிட்டுவின் கப்பலைச் சுற்றி வட்டமிட்டன. கப்பலின் மேல் தளத்தில் தளபதி கிட்டு நின்ற வண்ணம் எதையும் சந்திக்கத் தயாரானார்.
சிறிது நேரத்தில் கிட்டுவின் கப்பலை நோக்கி இந்திய கடற்படைக் கப்பல்கள் பீரங்கிகளால் சுட்டன. கப்பலின் கேப்டன் ஜெயசந்திரனையும் மற்றும் மாலுமிகளையும் கடலில் குதித்துத் தப்புமாறு கிட்டு ஆணையிட்டார். தன்னுடனிருந்த விடுதலைப் புலிகளை நச்சுக்குப்பிகளைத் தயாராக வைத்துக் கொள்ளும்படியும் உத்தரவிட்டார். ஆனால் மாலுமிகள் கிட்டுவை ஆபத்தில் சிக்கவைத்துவிட்டுத் தாங்கள் மட்டும் தப்பிச்செல்ல விரும்பவில்லை. ‘தேவையில்லாமல் அவர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்ய வேண்டியதில்லை” என்று கூறிய கிட்டு அவர்களை ஒவ்வொருவராக பிடித்துக் கடலில் தள்ளினார். கடலில் அவர்கள் குதிக்கும்பொழுது தங்கள் கப்பல் பற்றி எரிவதையும் எரிந்து கொண்டிருக்கும் தீச்சுவாலைக்கு நடுவே தளபதி கிட்டுவும் மற்ற விடுதலைப் புலிகளும் கம்பீரமாக நிற்பதையும் பார்த்தனர்.
16.1.93 அன்று அதிகாலை 6.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்தியக் கடற்படை கப்பல்கள் பீரங்கி குண்டுகளால் தாக்கியதால் கிட்டுவின் கப்பல் தீப் பிடித்து எரிந்தது. கடலில் குதித்த கப்பலின் மாலுமிகளை இந்தியக் கடற்படைக் கப்பல் காப்பாற்றிச் சிறைபிடித்தது. அவர்களில் சிவலிங்க கேசவன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவருக்கும் படுகாயம் எற்பட்டது. கைது செய்யப்பட்டவர்களை நியாயமாக சென்னைக்கு கொண்டு வந்திருக்கவேண்டும். ஏனென்றால் சென்னைக்கு அருகே கிட்டுவின் கப்பலைச் சுற்றி வளைத்தாக இந்தியக் கடற்படை குற்றம் சாட்டி இருந்தது. அதற்கு மாறாகவும் சட்டத்திற்குப் புறம்பாகவும் கைது செய்யப்பட்டவர்களை விசாகப்பட்டினத்திற்குக் கொண்டு சென்றார்கள். சென்னைக்கு கொண்டு வந்தால் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் கொதிப்புணர்வும் கிளர்ச்சியும் வெடிக்கலாம் என்று அவர்கள் அஞ்சியதே இதற்குக் காரணமாகும்.
கிட்டு தன்னுடைய கப்பலில் ஏறிற பொழுது ”தலைவர் பிரபாகரன் அவர்களிடம் கொடுப்பதற்காக பல முக்கியமான ஆவணங்களை ஒரு கைப்பெட்டியில் கிட்டு வைத்திருந்தார்.மேலும் இரண்டு அல்லது மூன்று பெட்டிகளில் 15 இலட்சம் அமெரிக்க டாலர்களையும் வைத்து இருப்பதாகக் கிட்டு என்னிடம் கூறியிருந்தார்”" எனக் கப்பலின் கேப்டன் ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
மேற்கு ஜரோப்பிய நாடுகள் தயாரித்து அளித்த சமாதானத் திட்டத்துடன் தமது தலைவரைச் சந்தித்துப் பேசுவதற்காகவே யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தளபதி கிட்டுவை இந்தியக் கடற்படை வழிமறித்துப் படுகொலை செய்தது.
தகவல் - காவியநாயகன் கிட்டு – Maaveerarkal – Heroes
- நடுக்கடலில் படுகொலை – பழ நெடுமாறன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment