கே.பி ஐ மலேசியாவில் வைத்து கைது செய்ததன் பின்னர் இப்போது ருத்திரகுமாரனுக்கு வலை வீசுகிறது இலங்கை அரசு. நாடுகடந்த தமிழீழத்துக்காக செயற்பாட்டில் இறங்கியுள்ள ருத்திரகுமாரன் அமெரிக்க மண்ணில் எந்தவித குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை, அதனால் அவரை கைது செய்யவேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு இல்லை என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க துணை வெளியுறவு செயலாளர் ரொபேர்ட் ஒ பிளேக் நேற்று தெரிவித்ததை அடுத்து தம்மிடம் அவர் குற்றம் புரிந்தவர் என்பதற்குரிய சான்றுகள் உள்ளதாகக் கூறியுள்ளார் இலங்கை பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல.
ருத்திரகுமாரன் விடுதலைப்புலிகளின் தீவிர செயற்பாட்டாளர் என்பதற்கு தம்மிடம் போதுமான புலானாய்வு தகவல்களும், சான்றுகளும் உள்ளதாகக் கூறியுள்ள கெஹெலிய இவற்றை வைத்து அமெரிக்கா அவரைக் கைது செய்யலாம் எனக் கூறியுள்ளார்.
புலிகளின் சட்ட ஆலோசகராக செயற்பட்டு வந்த ருத்திரகுமாரன் அமெரிக்க குடியுரிமை உடையவர். இவர் முன்னாள் யாழ் மேஜர் விஸ்வநாதனின் மகனாவார். இலங்கை அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் வெளிநாடுகளில் இவரும் பங்குபற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment