Welcome to this blogg. More than 80 million tamil people live in many countries across distant seas. There is no state without a Tamil - but there is no state for the tamils. Velkommen til denne bloggen. Her vil jeg oppdatere nyheter om tamiler og deres kamp for et selvstyre både på Sri Lanka og utenfor øya. என்னுடைய இந்த இணைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி: தமிழன் இல்லாத நாடில்லை, தமிழனுக்கென்று ஓர் நாடில்லை
Wednesday, 23 February 2011
Easy life for Singalease: Jaffna vegetables & fish to Sri Lanka யாழில் இருந்து பெருமளவான மரக்கறிகள் தென்னிலங்கைக்கு ஏற்றுமதி!
A large quantity of certain consumer items, including Red Onions, Potatoes and Beetroot & other vegetables, has reached Dambulla from Jaffna. These vegetables will be sold at the market in Colombo. The Colombo prices are expected to drop when the goods from Jaffna reach Colombo in a few days.
Sources said that 100,000 Kg each of Red Onions and Beetroot and 50,000 Kg of Potatoes had reached the Dambulla Economic Centre. Red Onion prices, too, have come down. Beetroot has come down to Rs. 45 a Kg from Rs. 120 and Potatoes sell at Rs. 55 to Rs. 65. Red Onions was sold at Rs. 600 a Kilo a month ago has come down to Rs. 350.
Prices of other vegetables at the Dambulla have decreased. Pumpkin is sold to the retailer at Rs. 67.50 and wholesale traders at Rs. 48.75, Snake Gourd Rs. 110 a Kg (Retail) and Rs. 85 (Wholesale), Ash Plantain Rs. 97.50 (Retail) and Rs. 72.50 (Wholesale), Beans Rs. 176.50 (Retail) and Rs. 149 (Wholesale), Carrot Rs. 160 (Retail) and Rs. 126.50 (Wholesale) and Tomatoes Rs. 100 (Retail) and Rs. 74 (Wholesale).
According to the Ministry of Cooperatives and Internal Trade prices of rice at Lanka Sathosa outlets are:
Samba Rs. 70 a kilo, Rathu Kekulu/Sudu Kekulu and Nadu Rs. 60.
Kilde: The Island
தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள மரக்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்தி தனது அரசியல் நலநன பேணும் முகமாக சிறீலங்கா அரசு யாழில் இருந்து பெருமளவான மரக்கறிகளை தென்னிலங்கைக்கு கொண்டு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் இருந்து செல்லும் மரக்கறிகளால் தென்னிலங்கையின் தம்புள்ள பொருளாதார மையத்தில் மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளது. யாழ் மாவட்டத்தில் இருந்து 100,000 கிலோ பீற்றூட், 50,000 கிலோ உருளைக்கிழங்கு, 100,000 கிலோ சின்ன வெங்காயம் ஆகியன தம்புள்ளை பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
யாழ் மாவட்டத்தில் இருந்து கொண்டுசெல்லப்பட்ட இந்த மரக்கறிகளால் தம்புள்ளை சந்தையில் ஏற்பட்டிருந்த மரக்கறிகளின் விலை உயர்வு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. முன்னர் 120 ரூபாய்கள் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பீற்றூட் 45 ரூபாயாகவும், 300 ரூபாய்கள் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சின்ன வெங்காயம் 100 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.
மரக்கறி வியாபாரத்தில் இராணுவம்
இலங்கையை மன்னிக்கவும், சிறிலங்காவை ஆசியாவின் அதிசயமாக உருவாக்கப்போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.இது எல்லோரும் அறிந்த விடயம். அவருடைய கனவு ஒரு வகையில் நனவாகி
ஏனென்றால் வருடங்களாக சிறிலங்காவை நிம்மதியற்ற நாடாக்கியிருந்த விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவதற்காக வலிமையான படையாக உருவாக்கப்பட்ட இராணுவத்தினர் இப்போது மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடப் போகின்றார்களாம்.இராணுவத்தினர் மரக்கறி வியாபாரம் செய்யப் போகின்றார்கள். இல்லை இல்லை,நாட்டின் சில பகுதிகளில் ஏற்கனவே அவர்கள் மரக்கறிய வியாபாரத்தை நடத்தி வருகின்றார்கள்.சிறிலங்கா மக்களைப் பொருத்தமட்டில் இராணுவம் மரக்கறி வியாபாரம் செய்கின்றது என்றால், அது புதினம் தானே.
இராணுவம் என்றால் சண்டை பிடிப்பவர்கள்,சட்டம் ஒழுங்கைப் பேணுகின்ற பொலிசாரினால் அந்தக் கடமையைச் செய்ய முடியாமல் போகும் இடங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகச் செயற்படுபவர்கள். அவசரமான ஆபத்தான நேரங்களில் மக்களைப் பாதுகாப்பதற்கும் காப்பாற்றுவதற்கும் வருகின்றவர்கள் என்று தான் எமது மக்கள் மனங்களில் இராணுவத்தைப் பற்றிய மனப்பதிவு இருக்கின்றது.
இந்த நிலையில் இராணுவம் மரக்கறி விற்பனை செய்கின்றார்கள் என்றால் அது அதிசயம் தானே.
இராணுவப் புரட்சி இடம்பெற்ற நாடுகளிலும்சரி,அரசாங்கங்களுக்கு எதிராகப் புரட்சி செய்த ஆயுதக்குழுக்களை அடக்கியதன் பின்னர் சூழ்நிலைக்கேற்ப தேவையைக் கருதி நாட்டின் ஆட்சிப் பொறுப்பை இராணுவத்தினர் ஏற்றிருந்த நாடுகளிலும்சரி,இராணுவம் எமது நாட்டில் நடப்பதைப்போல மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்களா என்பது பற்றி தெரியவில்லை. ஆனால், இராணுவம் மரக்கறி வியாபாரம் செய்கின்றார்கள் என்பது புதினமாகவும்,அதிசயமாகவுமே இருக்கின்றது.
நாட்டில் உக்கிரமடைந்திருந்த வடக்கில் மீள்குடியேற்றப் பணிகளுக்கு இராணுவம் பெருமளவில் உதவி வருவதாக அரசாங்கம் கூறுகின்றது. கண்ணிவெடிகளை அகற்றுவது,மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் மத்தியில் ஆண்துணையற்ற குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுப்பது, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது என்ற வகையில் இராணுவம் அங்கு மக்களுக்குப் பல்வேறு வழிகளில் உதவி செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுக்கமால் இருப்பதற்காக வடக்கு கிழக்குப் பகுதிகளில் மாவட்டங்கள்தோறும் வசதிகள் மிகுந்த இடங்களில் நவீன வசதிகளுடன் கூடிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது,அமைக்கப்பட்டு வருகின்றது.பயங்கரவாதம் மீண்டும் இந்தப் பகுதிகளில் தலையெடுக்காமல் தடுப்பதற்காகவே இந்த ஏற்பாடு என ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இத்தகைய இராணுவ முகாம்களை அமைப்பதற்கான இடங்கள் அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்படுவதுடன், விடுதலைப் புலிகள் நிலைகொண்டிருந்த இடங்கள்,காணிகள், கட்டிடங்கள் வீடுகள் என்பனவும் இராணுவத்தினரால் கையேற்கப்பட்டுள்ளன. இதனால் குறிப்பாக வடக்கில் பல காணிகள் இராணுவத்தின் வசமாகியிருக்கின்றன.
மக்கள் குடியிருப்புக்கள், தனியாருக்குச் சொந்தமான காணிகள்,அரச காணிகள் ,குளங்கள், வயல் காணிகள் என்பனவும் இவ்வாறு இராணுவத்தின் பயன்பாட்டிற்காக எடுக்கப்பட்டுள்ளதாகப் பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் குற்றம் சுமத்தியுள்ளமையும் தெரிந்ததே. இவ்வாறு இராணுவம் நிலைகொண்டுள்ள இடங்களில் குளங்களுக்கு அருகிலும் வயல்காணிகளிலும் தண்ணீர் வசதியுள்ள மேட்டுக்காணிகளிலும் இராணுவத்தினர் தோட்டச் செய்கைகளிலும் ஈடுபட்டிருக்கின்றார்கள்.இத்தகைய தோட்டச் செய்கையின் மூலம் கிடைக்கின்ற மரக்கறிகள் அந்தந்தப் பகுதிகளில் இராணுவத்தினரால் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மீள்குடியேற்றப் பகுதிகளில் இது ஒரு சாதாரண நிகழ்வாக இருப்பதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றார்கள். இந்த அனுபவத்தின் அடிப்படையில்தான் இராணுவம் இப்போது மரக்கறி வியாபாரத்தில் பெரிய அளவில் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கொழும்பில் கொட்டாஞ்சேனை பகுதிகளில் இராணுவத்தினர் தமது ட்ரக் வண்டிகளில் பெருமளவிலான மரக்கறிகளை வீதிகளில் கொண்டு சென்று வீடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றார்கள்.மரக்கறி சந்தைகளைவிட இதில் விலைகள் குறைவாக இருப்பதாக இந்தப் பகுதிகளைச் சேர்ந்த இல்லத்தரசிகள் பலரும் தெரிவித்துள்ளனர்.
இது ஜனவரி மாதமாக இருந்த போதிலும் நாடு முழுவதிலும் இப்போது மாரிகாலமாக மாறியிருப்பதாக காலநிலை அவதான நிலையம் கூறியிருக்கின்றது.அந்தக் கூற்றுக்கு ஏற்ப நாட்டின் பல பகுதிகளிலும் இப்போது மழை பெய்து வருகின்றது.பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.மக்கள் பெரும் எண்ணிக்கையில் வெள்ளத்தினால் வீடு வாசல்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே மாரி காலத்து நிலைமை காரணமாக நாட்டின் பல இடங்களிலும் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.மாரிகாலம் என்றாலே மேட்டுக்காணிகளில் கூட மரக்கறிச் செய்கைகள் பாதிக்கப்பட்டிருக்கும். இப்போதைய அடை மழை காரணமாக இந்தப் பாதிப்பு வழமையைவிட இந்த வருடம் அதிகமாக இருக்கின்றது.இதனால் சந்தைகளில் மரக்கறிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விலைகளும் எக்கச்சக்கமாக ஏறியிருக்கின்றன.
இந்தச் சூழ்நிலையில்தான் இராணுவம் தலைநகராகிய கொழும்பில் மரக்கறி வியாபாரத்தில் பெரிய அளவில் ஈடுபடப்போவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதற்கான பணிப்புரையை ஜனாதிபதி விடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
கொழும்பில் இடங்களில் இராணுவத்தின் மரக்கறி கடைகள் அமையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடைகளில் மரக்கறிகள் குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மரக்கறிகளை உற்பத்தியாளர்களான விவசாயிகளிடம் இருந்து நியாயமான விலைக்கு இராணுவம் கொள்வனவு செய்து இந்தக் கடைகளில் விற்பனை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்களான தோட்டக்கார்களிடமிருந்து இராணுவம் அச்சுறுத்தியோ அல்லது இராணுவம் என்ற ரீதியில் சலுகை அடிப்படையிலோ மரக்கறிகளைக் குறைந்த விலைக்குக் கொள்வனவு செய்யமாட்டாது என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும் மரக்கறிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டு நிலைமையைப் பயன்படுத்தி தரகர்கள் தோட்டக்காரர்களிடம் கொள்ளையடிப்பது போல நியாயமற்ற முறையில் குறைந்த விலைக்குக் கொள்வனவு செய்வதைத் தடுப்பதற்காகவே இராணுவம் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது எந்த அளவிற்கு நடைமுறையில் சாத்தியம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால் சிறிலங்கா இராணுவமானது,வியாபாரத்தில் கைதேர்ந்தது என்பது போர் முடிவடைந்ததன் பின்னர் நன்றாகவே தெரிகின்றது.விடுதலைப் புலிகளிடமிருந்து வன்னிப்பிரதேசம் முழுமையாக மீட்கப்பட்டதையடுத்து.போர்க்காலத்தில் தடைப்பட்டிருந்த ஏ9 வீதி பொதுமக்களின் பாவனைக்காகத் திறக்கப்பட்டதையடுத்து,அந்த வீதி நெடுகிலும் அமைக்கப்பட்டுள்ள கடைகளை இராணுவத்தினரே நடத்தி வருகின்றார்கள். இந்தக் கடைகள் பெரும்பாலும் தேநீர்க்கடைகளாகவும், உணவு விடுதிகளாகவும், ஏனைய பொருட்களள விற்பனை செய்யும் நிலையங்களாகவும் இருக்கின்றன.
இவ்வாறான உணவு விடுதிகள் ,சாப்பாட்டுக்கடைகள் தேநீர்க்கடைகள் மற்றும் கடைகள் என்பன முன்னர் ஏ9 வீதியோரத்தில் வீதி நெடுகிலும் குடியிருக்கின்ற சாதாரண மக்களினால் ஆங்காங்கு நடத்தப்பட்டு வந்தன. இதன் மூலம் அந்தக் குடும்பங்கள் தமது வாழ்க்கையை நடத்தக் கூடியதாக இருந்தது.ஆனால் அந்த நிலைமை இப்போது பெரிய அளவில் மாற்றப்பட்டுள்ளது. இந்த வியாபாரச் செயற்பாடுகளை இராணுவத்தினரே முன்னெடுத்திருக்கின்றனர்.
அள்ளி வீசியதுபோல ஆங்காங்கே ஒருசில குடும்பங்கள் மீள்குடியேற்றத்தின் பின்னர் சிறிய அளவில் கடைகளை நடத்தி வந்தாலும் பெருமளவான கடைகள் இராணுவத்தினராலேயே நடத்தப்பட்டு வருகின்றன.இந்தக் கடைகளிலும் விடுதிகளிலும் தெற்கில் இருந்து வடக்கிற்குச் செல்கின்ற உள்ளூர் உல்லாசப் பயணிகளின் கூட்டம் அலைமோதுவதைச் சாதாரணமாகக் காணலாம்.
இந்த வியாபார வாய்ப்பு போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து மீண்டும் சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ள மக்களுக்கு மறுக்கப்பட்டிருப்பதாகவே அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் கூறுகின்றார்கள். அதுமட்டுமல்லாமல் பெரும்பாலான இடங்களில் விசாலமான வாகனத் தரிப்பிட வசதிகளுடன் கூடிய இத்தகைய தேநீர்க்கடைகள் உணவகங்கள் உணவு விடுதிகள் என்பன பொதுமக்களின் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளன என்றும் காணி உரிமையாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். காணிகள் இராணுவ தேவைக்காக இவ்வாறு பயன்படுத்தப்படுவதனால் தாங்கள் இன்னும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் கவலையோடு கூறுகின்றார்கள்.
உல்லாசப் பயணிகளுக்கு நியாயமான விலைகளில் தரமான உணவும் மற்றும் பொருட்களும் சேவைகளும் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என்பது சரிதான் அதற்காக காணிகளின் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாதல்லவா?
போர் முடிவுக்கு வந்ததன் பின்பும் நாட்டில் பாதுகாப்புக்குப் பெருமளவிலான நிதி ஒதுக்கப்பட்டு பாதுகாப்புப் படைகளின் வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.யுத்த காலத்திலும் பார்க்க பாதுகாப்புச் செலவினம் இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி வருகின்றன யுத்த காலத்திலும் பார்க்க ஆயுதக் கொள்வனவும் மேற்கொள்ளப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இத்தகைய ஒரு சூழ்நிலையிலேயே இராணுவம் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதுயுத்த காலத்திலும் பார்க்க நாட்டின் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை கொடுத்து காரியங்கள் இடம்பெற்று வருவதும் அதிகரித்துச் செல்கின்ற வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கு அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்காமல் சாக்குப் போக்குகளைக் கூறியபடி தன் இஸ்டப்படி நடந்து கொள்வதும் ஒருவகையில் சிறிலங்காவை ஆசியாவின் அதிசயமாக்கும் முயற்சியாகவே தோன்றுகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment