Tuesday, 9 November 2010

Mahinda Rajapakse drops out of Britain visit over arrest fears - மகிந்த ராஜபக்ச பிரித்தானிய பயணத்தவிர்ப்பு












Sri Lanka’s president Mahinda Rajapaksa has become the latest foreign leader to drop out of a planned visit to Britain out of fears that dissident activists could engineer his arrest under the UK’s liberal human rights laws.

Mahinda Rajapaksa called off a visit to address the Oxford Union after lawyers raised fears that a court would issue an arrest warrant on war crimes charges relating to the successful campaign against the Tamil Tigers. As head of state, Mr Rajapaksa has diplomatic immunity but doubts were raised over the absence of an official meeting on his itinerary.

PM Amza, Sri Lanka’s deputy high commissioner in London, said the country had looked at the implications of British laws allowing courts to apply universal jurisdiction to war crimes charges. “This is a domestic issue for Britain, but we have taken note of the issue,” he said.

Magistrates’ courts in Britain have the power to issue warrants on war crimes charges. The scope of the power has become a diplomatic minefield as every other country allows the government the right to stop an arrest in the national interest.

Furious diplomatic protests spearheaded by Israel – whose deputy prime miniser, Dan Meridor, called off a similar private visit last week – forced the Government into a pledge to change the law.

A date to put an amended law before the House of Commons is expected to be announced this week. But it is expected to encounter opposition from Labour and some Liberal Democrat MPs. An early day motion by Jeremy Corbin, the Left-wing MP, opposing a review was signed by 53 Lib Dem MPs last year.

Experts believe the threat of arrest hanging over visiting officials has harmed the Foreign Office’s standing. “This is extremely dangerous because it allows the UK to become the headquarters of victims justice in war crimes,” said Patrick Basham, of the Democracy Institute, a think tank.


மகிந்த ராஜபக்ச பிரித்தானிய பயணத்தவிர்ப்பு
- பின்னனி தகவல்கள்

பிரித்தானியாவுக்கு தனிப்பட்ட பயணம் மேற்கொள்ளவிருந்த சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, திடீரென தனது பயணத்தை இடைநிறுத்திக்கொண்டுள்ளார்.

பிரித்தானியவாழ் தமிழர் அமைப்புக்களால் சிறிலங்காவில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் வழக்குத்தாக்கல் ஒன்றை மேற்கொள்ளவிருந்தனர் எனவும் அதனை கருத்திற்கொண்டே தனது பயணத்தை தவிர்த்துக்கொண்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதுள்ள சர்வதேச கடப்பாடுகளுக்கு அமைவாக ஒரு நாட்டின் அரசதலைவர், அரசமுறை பயணங்களை மேற்கொள்ளும்போது இன்னொரு நாட்டில் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது.

ஆனால் அவ்வாறான அரசதலைவர்கள் தனிப்பட்ட பயணங்களை மேற்கொண்டு இன்னொரு நாட்டுக்கு செல்லும்போது, போர்க்குற்றங்கள் தொடர்பில் தண்டனைக்குட்படுத்தமுடியும்.
இதனால் பிரித்தானியாவுக்கு தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு ஒக்ஸ்போட் யூனியனில் பங்குகொள்ளவிருந்த மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைவாக அப்பயணத்தை திடீரென இடைநிறுத்திக்கொண்டார்.

எனினும் சிறிலங்காவின் வெளியுறவுச்செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகிந்தராஜபக்சவுக்குரிய பல்வேறு பணிகள் காரணமாகவே அவரது பயணத்தை தவிர்க்கவேண்டிவந்தது எனவும் அவ்வாறு மகிந்த ராஜபக்ச கைதுசெய்யப்படக்கூடிய சூழ்நிலை இல்லையெனவும் தெரிவித்துள்ளது.


பிரித்தானியாவுக்கு 1988 ஆம் ஆண்டு பயணம் மேற்கொண்ட முன்னாள் சிலி சர்வாதிகாரி ஒகஸ்ரோ பினோசற் என்பவர் சர்வதேச கடப்பாடுகள் ஸ்கொட்லன்ட்யாட்டால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

தற்போதைய பிரித்தானிய சட்டங்களின்படி தனிப்பட்டவர்களாலோ அல்லது அமைப்புக்களாலோ போர்க்குற்றங்கள் மேற்கொண்ட ஒருவர் மீதான பிடியாணையை பெற்றுக்கொள்ள முடியும்.

இஸ்ரேல் பிரதமர் ஏரியல் சறோன் 2005 ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை இதே காரணங்களுக்காக தவிர்த்துக்கொண்டிருந்தார். இதனைப்போன்று இஸ்ரேலிய ஜெனரல் ஒருவர் தான் கைதுசெய்யப்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக பிரித்தானியாவில் தரையிறங்கியபோதும் அவ்விமானத்தை விட்டு வெளியேறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


அண்மையில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமறோன் சுதந்திரமான விசாரணைக்குழு அமைக்கப்படுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்கவேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தார்.

No comments:

Post a Comment