Wednesday, 9 June 2010

தமிழினப்படுகொலைகள் 1956-2008" நூல் வெளியீடு























'தமிழினப் படுகொலைகள்' புத்தகத்தின் தமிழ் - ஆங்கிலம் பதிப்புகள் வெளியீடு வருகின்ற வெள்ளிக்கிழமை ஜீன் 11, 2010ல் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தில்  நடைபெறுகிறது.

வடகிழக்கு மனித உரிமை செயலகத்தால் தொகுக்கப்பட்டு சென்னை மனிதம் வெளியீட்டகம் வெளியிட்ட 'தமிழினப் படுகொலைகள்' 1956 முதல் 2008 வரை தமிழர்கள் மீது இலங்கை அரசினால் நடத்தப்பட்ட 160க்கும் மேற்பட்ட படுகொலைகளை புள்ளிவிபரங்கள், வரைபடங்கள், நேரடி சாட்சிகளின் வாக்குமூலங்களை கொண்டுள்ள ஆவணத்தை புத்தகமாய் சென்னையில் உள்ள மனிதம் வெளியீட்டகம் அன்மையில் வெளியிட்டது. உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் இந்த ஆவண நூலை வாங்கி வரும் வேளையில், இந்நூல் கனடாவில் அன்மையில் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றது.

கனடாவைத் தொடர்ந்து, இப்பொழுது ஜீன் 11ம் தேதி மாலை 7 மணிக்கு நோர்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் இந்நூலை நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டு, இந்த விழாவை  நடாத்த உள்ளது. வெளியீட்டிற்காக அழைப்பிதழ் நோர்வே  தமிழர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இவ்விழாவினை சிறப்பிக்க, அனைத்து தமிழர்களையும், மனித உரிமை செயல்பாட்டாளர்களையும் வருக! வருக!!  என நோர்வே  தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வரவேற்கிறது.

No comments:

Post a Comment