Wednesday, 5 May 2010

பிரித்தானிய அரசியல் கட்சிகளுக்கு, தமிழரின் போராட்டத்தை உணரவைத்த பிரித்தானிய தலைவிகள்


தொழிற்கட்சி மாநாட்டின் மைய மண்டபத்தில் நின்று " இலங்கையின் பொருட்களை புறக்கணியுங்கள் " என்று முழங்கிய சிவோன் மக்டொனா அம்மையாரை தமிழர்கள் மறந்துவிட மாட்டார்கள்.

போராட்டத்திற்கு பயங்கரவாத முத்திரை குத்திய அதே அரசில் அங்கம் வகிக்கும் ஒரு பெண் இலங்கை அரசை தூற்றும், அறைகூவலை விடுக்கும் அளவிற்கு , அதனை கண்டிக்கும் பிரேரணையை அக்கட்சியில் நிறைவேற்றும் அளவிற்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது தமிழர்களுக்கு உற்சாகத்தைதருகின்றது.

தொழிற்கட்சியில் இவ்வாறான‌ மாற்றத்திற்கு வழிசமைத்ததில் ஜோன் ரயன் அம்மையார் பெரும் பங்கு வகித்துள்ளார். தமிழர்கள் பயங்கரவாதிகள் அவர்களைஅணுகாதீர்கள் என அம்மையாருக்கு பலரும் கூறிய பொழுது, தமிழர்களின் நியாயங்களை அவர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களின் மனங்களை வெல்வதில் பெரும் பங்காற்றியுள்ளார்.

அதேவேளை தமிழர்களின் நியாயங்களை கென்சவேட்டிவ் கட்சிக்குள் எடுத்துச்சென்று அக்கட்சியோடு தமிழர்கள் உறவைப் பலப்படுத்த உறவுப்பாலமாக செயற்படுபவர் டாக்டர் ரேச்சல் ஜொய்ஸ் அம்மையாராவார். ஆளும் கட்சியாக தொழிற்கட்சி இருந்தமையால் தமிழர்களும் அக் கட்சியோடு கூட நெருங்கி வேலை செய்துள்ளார்கள்.

தற்போது ஆட்சி மாறும் என்ற நிலையில் கென்சவேட்விவ் கட்சியினுள்ளும் எமது நண்பர்கள் பெருக வேண்டும் . அதனை செய்யக்கூடிய வல்லமை ரேச்சல் அம்மையாருக்கு உண்டு என்பதை ஒரு குறுகிய காலத்திற்குள் அவர் நிருபித்துள்ளார்.

பிரித்தானிய வெளியுறவுச் செயலர் திரு. டேவிட் மிலிபான்ட் இலங்கை செல்வதற்கு கட்சிக்குள் பிரசாரத்தை மேற்கொண்டதில் சிவோன் மக்டொனால் அம்மையாரும், ஜோன் ரையன் அம்மையாரும் பெரும் பங்கு வகித்துள்ளனர். அதேபோல உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் திரு.டேவிட் மிலிபாண்ட்தோன்றியமைக்கும், பிரதமர் திரு கோர்டண் பிரவுண் பேரவையினரை அழைத்து பேசியமைக்கும் ஜோன் ரையன் அம்மையாரின் பங்கும் பெருமளவில் இருப்பது தமிழர்களால் போற்றப்படுகின்றது.

அவ்வாறான ஒரு பணியை கென்சவேட்டிவ் கட்சிக்குள் செய்து முடித்தவர் ரீச்சல் அமையாராவார். தற்போதைய நிலையில் கென்சவேட்டிவ் கட்சி தலைவர்களுக்கு தமிழர்கள் தேசியத்தை ஆதரிக்கும் மேடை பொதுவாக புதியது. ஆனாலும் அம்மேடையில் அக் கசட்சியின் சக்திவாய்ந்த தலைவரான நிழல் வெளியுறவு அமைச்சர் திரு. வில்லியம் கேக் அவர்களை தோன்றச் செய்தமை, ரேச்சல் அம்மையார் தமிழரின் போராட்டத்தை அக் கட்சிக்குள் பலமாக கொண்டு செல்லக்கூடியவர் என்பதை உணர்த்துகின்றது.

இந்த தலைவிகள் தேர்தலில் வெல்ல வேண்டும். எமது நண்பர்களின் வெற்றி எமது வெற்றிசெவோன் மக்டொனா (‍ மிச்சம் & மோடன் தொகுதி ) ‍தொழிற்க‌ட்சி, ஜோன் றயன் ( என்பீல்ட் வடக்கு தொகுதி ) ‍ ‍தொழிற்க‌ட்சி, ரீச்ச‌ல் ஜாய்ஸ் ( ஹ‌ரோ மேற்கு ) கென்ச‌வேட்சிவ் க‌ட்சி.

No comments:

Post a Comment