Monday, 10 May 2010

மே மாதம் 18 - முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் முதலாம் ஆண்டு


முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட அனைத்து மக்களுக்கும் இம் மாவீரர்களுக்கும் தலைசாய்த்து வணங்வோம்.

மே மாதம் 18. - தமிழர்களின் வரலாற்றில் மிகவும் கோரமானதும் மறக்கமுடியாததுமான மிகப்பெரும் இன அழிப்பையும் அவலத்தையும் தமிழினம் சந்தித்த அந்த கறுப்பு நாட்களின் ஓராண்டு நினைவுநாட்கள் .

இலங்கைத்தீவில் சிங்கள பேரினவாத அரசு பல ஆண்டுகாலமாக தொடர்ந்து தமிழின அழிப்பு போரில் ஈடுபட்டு வந்த போதும், கடந்த ஆண்டு வன்னிப்போர் உக்கிரமடைந்த வேளையில் தான் தமிழினம் வரரலாறு காணாத பேரழிவை சந்திக்க நேர்ந்தது. சர்வதேசத்தின் ஆதரவோடு மேற்கொள்ளப்பட்ட இந்த இன அழிப்பில் சர்வதேசங்களால் தடைசெய்யப்பட்ட கொத்துக்குண்டு, மற்றும் இரசாயண நச்சுவாயுத் தாக்குதல்களையும் நடாத்தி ஈவிரக்கமற்ற முறையில் எம் மக்களையும், எமக்காகவும் எம் மண்ணின் விடுதலைக்காகவும் போராடிவந்த தமிழர் படையணியாம் தமிழீழ விடுதலைப்புலிகளையும் சதிவலைக்குள் விக்கவைத்த கொடூரத்தின் ஆண்டொன்று இது. இந்த காலப்பகுதியில் மட்டும் சிங்களத்தின் இனவெறி அழிப்பில் 40.000 ற்கும் மேற்பட்ட மக்களும் மக்களை காக்கும் பணியில் எதிரியுடன் கடும் சமர் புரிந்து தாயக விடுதலைக்காக தம்முயிரை ஈர்ந்து வித்துக்களான 7.000 ற்கும் மேற்பட்ட மாவீரர்களும் என பெரும் எண்ணிக்கையில் இழந்து உலகத் தமிழினம் இன்று தவிக்கிறது.

இந்த தவிப்பில் இருந்து மீண்டு தம்மை தயார்படுத்திக்கொண்டு ஒவ்வொரு தமிழரும் தமிழீழ விடுதலைக்காக போராடவேண்டிய தேவை உள்ளது. அதற்கான உறுதி எடுக்கும் இடமாகவே இந்த முள்ளிவாய்க்காலை நினைவு கொள்ளுவோம். ஒவ்வொருவரும் எங்கள் நெஞ்சங்களில் உறுதியெடுத்துக் கொண்டு தமிழீழ விடுதலைக்காக இனியேனும் அர்ப்பணிப்போடு செயற்படுவோம். தமிழர்களிடம் இருந்த பிளவும், துரோகத்தனங்களுமே இன்று தமிழர்களை இந்த இன அழிப்பில் சிக்கவைத்தது. தமிழர்களால் கட்டியெழுப்பப்பட்டு வந்த தமிழீழ படையணியும் பேரழிவை சந்திக்க நேர்ந்தது. இதனை மாற்றுவோம்.

நாம் தமிழராய் ஒன்றுபடுவோம். எமக்கான விடுதலையை நாமே வென்றெடுப்போம். தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்கும், அவர் மக்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கைக்கும் பலம் சேர்ப்போம். இன்று இங்கும் அங்குமாக சிதறுண்டுள்ள எம் உறவுகளுக்காக குரல் கொடுப்போம். சர்வதேசங்களில் எங்கள் குரல் இராஜதந்திர ரீதியில் ஒலிக்கட்டும். அந்த இராஜதந்திர நகர்வே எமக்கான ஈழ விடுதலையை விரைவில் பெற்றுத்தரட்டும்.

இணைவோம் ... எழுவோம்.....

எம் கரங்களில் ஒப்படைக்கப் பட்ட தமிழீழ விடுதலையை நாமே வென்றேடுப்போம்.

"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"

No comments:

Post a Comment