Tuesday, 22 December 2009

Sri Lankan guards 'sexually abused girls' in Tamil refugee camp - இராணுவத்தினர் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர்: வாணி


















A British medic held for months in an internment camp for Tamil civilians has revealed how military guards dealt out cruel punishments, while many suspected of links to Tiger rebels were taken away and have not been seen since Tamil women interned after escaping the horrors of the civil war in Sri Lanka were sexually abused by their guards who traded sex for food, a British medic has revealed.

Continue in english after the Tamil text.....

லண்டனைச் சேர்ந்த வாணி குமார் (25) வன்னிக்கு வந்திருந்தபோது ராணுவத்தினர் மேற்கொண்ட போரினால் பெரும் அவதிக்குள்ளாகி, வவுனியா தடுப்பு முகாமிலும் அடைபட்டுக் கிடந்து கடந்த செப்டம்பர் மாதம் விடுவிக்கப்பட்டார். அதன்பின் லண்டன் சென்ற அவர் ஆரம்பத்தில் இலங்கையில் நடந்த கொடூரங்களை விவரித்து வந்தார். ஆனால் அவரது குடும்பத்தினர் முகாம்களில் இருந்ததால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக பின்னர் பேட்டி கொடுப்பதை நிறுத்தியிருந்தார். ஆனால் மீண்டும் அவர் கூறியதாக சில தகவல்களை பிரிட்டிஷ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இப்போது அவரின் நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் முகாம்களிலிருந்து வெளியேறிவிட்டதால் அவர்கள் மீது பழிவாங்கல்கள் நடக்காது என்று அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.

வன்னியில் நடந்த சோதனைகளை விவரித்த வாணி, முகாம்கள் அடைபட்டிருந்ததையும் அங்கு பேசுவதற்கான சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்டிருந்ததையும் கூறியுள்ளதோடு, பல இளம் தமிழ் பெண்களை அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த படையினர் பாலியல் ரீதியான முறைகேடுகளுக்கு உள்ளாக்கியதைத் தாம் கண்டதாகக் கூறியுள்ளார். முள்வேலி அமைக்கப்பட்டிருந்த முகாம் வேலிக்கு வெளியே உறவினர்கள் வந்திருக்கும்போது பெண்கள் அவர்களுடன் பேசிக் கொண்டு இருப்பார்கள். அவ்வேளையில் அப்பக்கம் செல்லும் ராணுவத்தினர் இளம் பெண்களைத் தொடுவதைத் தாம் மட்டுமல்ல அங்கிருந்த அநேகர் பார்த்துள்ளார்கள் என்றார்.

இவ்வாறு ராணுவ அதிகாரிகள் நடந்து கொண்டாலும் பெண்கள் ஒன்றுமே திருப்பிப் பேசமாட்டார்கள், ஏனெனில் திருப்பி ஏதேனும் பேசினால் தமக்கு மேலும் கொடுமைகள் நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது என்று வாணி மேலும் குறிப்பிட்டுள்ளார். பாலியல் முறைகேடுகளுக்கு உள்ளாக்கிய பின்னர்தான் அங்கு பெண்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த உணவுக்கான பாலியல் உறவு என்ற வியாபாரத்தை ராணுவ உயர் அதிகாரிகள் செய்தது மட்டுமல்லாது உணவுக்காக பல மணி நேரம் வெயிலில் முட்டுக்காலில் நிற்க வைக்கப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது என்றார் அவர். சில வேளைகளில் பெண்கள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்டுவிட்டு பணமும் உணவும் கொடுத்துள்ள ராணுவத்தினர் தாம் நினைத்தபடி எதையுமே செய்யக்கூடியதாக இருந்தனர் என வருத்ததுடன் கூறியுள்ளார் வாணி.

வன்னிக் கொடும் போரில் இருந்து தப்பி வந்த பின்னர் தடுப்பு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பெண்கள் சிறிலங்காப் படையினரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.


ஒருவேளை உணவுக்காகக் கூட படையினருடன் உறவு கொள்ளும் நிலைக்கு அவர்கள் உள்ளாக்கப்பட்டனர் என்று கூறுகிறார் மருத்துவப் பணியாளர்.

வாணி குமார் என்ற இந்த மருத்துவப் பணியாளர் நான்கு மாதங்களாக இந்தத் தடுப்பு முகாமில் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.

தமிழ் கைதிகள் சுட்டெரிக்கும் சூரிய வெய்யிலின் கீழ் முழங்காலில் மணிக் கணக்காக நிற்க வைக்கப்படுகி்ன்றனர்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்பானவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் படையினரால் கொண்டு செல்லப்பட்டவர்களை - பின்னர் ஒருபோதுமே அவர்களது குடும்பங்களால் பார்க்க முடிந்ததில்லை என்றும் விபரிக்கிறார் வாணி.

வாணி கடந்த செப்டெம்பர் மாதமே விடுவிக்கப்பட்டார்; ஆனால், முகாம்களில் நடந்த கொடுமைகள் பற்றிய முழு விபரங்களையும் வெளியிடுவதற்கு அவர் இவ்வளவு காலமாகக் காத்திருந்தார்.

ஏனெனில், தான் வெளியிடும் தகவல்களால் ஆத்திரம் அடையும் படையினர் முகாமில் தன்னுடன் இருந்த தனது உறவினர்களையும் நண்பர்களையும் பழிவாங்கிவிடுவார்களே என்ற பயமே அதற்குக் காரணம்.

அனைத்துலக அழுத்தங்களைத் தொடர்ந்து சிறிலங்கா அரசாங்கம் இந்த மாதத் தொடக்கத்தில் முகாம்களைத் திறந்து விட்டதனால் வாணியின் உறவினர்களும் நண்பர்களும் இப்போது விடுவிக்கப்பட்டு விட்டனர்.
முகாம்களில் உடலியல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கும் ஐக்கிய நாடுகள் சபை அமைப்புக்களின் அறிக்கைகள் தமக்குக் கிடைத்துள்ளன என்பதை சிறிலங்கா அரசு உறுதிப்படுத்தி உள்ளது.

ஆனால், அத்தகைய குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்துவதற்கான வழிகள் ஏதும் இல்லை என்று அரசு தொடர்ந்து கூறி வருகின்றது; முகாம்களில் மக்கள் காணாமல் போனார்கள் என்பதையும் அரசு முற்றாக நிராகரிக்கிறது.

ஆனால், முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலை குறித்த தகவல்கள் வெளியில் வருவதைத் தடுப்பதற்குத் தன்னால் முடிந்த அனைத்தையும் கொழும்பு செய்கிறது என ஐ.நா. பேச்சாளர் குற்றஞ்சாட்டுகின்றார்.

தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் தவறாக நடத்தப்பட்டார்கள் என்பதை சிறிலங்கா அரசு தொடர்ந்து, உறுதியாக மறுத்து வருகின்றது.  ஆனால் - கொழும்பு அரசைத் திரும்பத் திரும்ப விமர்சித்து வரும் மனித உரிமை அமைப்புக்களுக்கு வாணியின் குற்றச்சாட்டு புதிய ஊக்கத்தைத் தரும்.

“அந்தத் தடுப்பு முகாம்கள் கொடுமையானவை; அங்கு மக்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்வதற்குக்கூட அனுமதி இல்லை.
முட்கம்பி வேலிக்கு வெளியே செல்ல முடியாது; அவர்கள் வெளி உலகத்தில் இருந்து முற்றாகப் பிரித்து வைக்கப்பட்டிருந்தார்கள்.

படையினரால் கொண்டு செல்லப்பட்டவர்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி அந்த மக்கள் யாருக்கும் சொல்ல முடியாதிருந்தது.
வெளியில் யாரும் அது பற்றி அறிந்து கொள்வதை அரசு விரும்பவில்லை.
பாலியல் துன்புறுத்தல்கள் அங்கு சாதாரணமானவை; அதனை நான் நேரடியாகவே பார்த்துள்ளேன். படை ஆட்கள் பெண் பிள்ளைகளின் மீது கைகளைப் போடுவார்கள்; அடுத்தவர்கள் முன்னிலையிலேயே அவர்கள் இதைச் செய்வார்கள். அது மாதிரியான சிலவற்றை நான் நேரடியாகவே கண்டிருக்கிறேன்.

தமிழ்ப் பெண் பிள்ளைகள் பொதுவாகவே பாலியல் முறைகேடுகள் பற்றிப் பேச விரும்புவதில்லை. அப்படி அவர்கள் ஏதாவது பேசினால் முகாம்களில் அவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.  அதே நேரம் - நிவாரணப் பணத்திற்காகவும் உணவிற்காகவும் தம்முடன் பாலியல் உறவு கொள்ளும் நிலைக்குத் தமிழ்ப் பெண்களை சிறிலங்காப் படை அதிகாரிகள் உட்படுத்தினர்கள்; அந்த மக்கள் விரக்தியின் விளிம்பிற்குப் போய்விட்டார்கள். அவர்கள் எல்லாவற்றிலுமே நம்பிக்கையிழந்து போய் இருக்கிறார்கள்.



தாம் நடத்தப்படும் விதம் குறித்து யாராவது முறையிட்டால் அவர்கள் படையினரால் தனிமைப்படுத்தப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள்.
ஒரு தடவை - ஒரு வயதான நபரை படை அதிகாரி ஒருவர் உதைந்து தள்ளியதை நான் நேரில் பார்த்தேன். அவர்களுக்கு இடையில் என்ன வாக்குவதாம் நிகழ்ந்தது என்பது எனக்குத் தெரியாது; ஆனால் அந்த மூத்தவரை படை அதிகாரி பின்னால் இருந்து உதைத்தான்.



அதே பகுதியில் சுட்டெரிக்கும் சூரியனின் கீழே மக்கள் மண்டியிட்டு நிற்க வைக்கப்பட்டிருந்தார்கள்; தமது உணவுக்காக படை அதிகாரிகளுடன் வாக்குவாதப்பட்டதே அவர்கள் செய்த குற்றம். சில சமயங்களில் மணிக்கணக்காகக் கூட அவர்கள் இவ்வாறு நிறுத்தப்பட்டார்கள்” என்று நிலைமையை விபரிக்கிறார் வாணி.

சில சமயங்களில் "வெள்ளை வான்"கள் முகாமிற்குள் தோன்றும். அதில் ஆட்களை அவர்கள் பிடித்துச் செல்வார்கள். "வெள்ளை வான்" என்பது சிறிலங்காவில் ஒரு பயங்கரத்தின் குறியீடு.  கொலைகாரக் கும்பல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பங்களுடன் அவற்றுக்குத் தொடர்புகள் உண்டு.

“விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் இருந்தால் கூறுமாறு படையினர் கேட்பார்கள்; அப்படியானவர்களின் பெயர்களைக் குறித்துக் கொள்வார்கள்; அதன் பின்னர் - "வெள்ளை வான்" வந்து குறிப்பிட்ட நபர்களைக் கொண்டு சென்றுவிடும்.

அதன் பின்னர் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பது யாருக்குமே தெரியாது. இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட தமது குடும்ப உறுப்பினர்கள் ஏராளமானோரை மக்கள் இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்” என வாணி கூறுகிறார்.  “முதல் இரண்டு மூன்று நாட்கள் முகாமி்ல் நான் தனியாக இருந்தேன்; இப்போது நினைத்தாலும் பீதியாக இருக்கிறது. அந்த முகாமை வந்தடைந்ததும்,என் பைகளைக் கீழே எறிந்துவிட்டு நான் கதறி அழுதேன். அந்த உணர்வுகள் என்றும் என்னை விட்டுப் போகாது.

முகாமில் இருந்த நாட்களில் எனக்கு என்ன நடக்கப் போகிறது என நினைத்து நான் பயந்ததை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்க்கவே நான் தயாராயில்லை.  முதல் சில நாட்கள் - இது கனவா அல்லது உண்மையிலேயே நடக்கிறதா என்று கூட நினைத்துக் கொண்டேன். எனது முகாம் வாழ்க்கை முடிவுக்கு வரும் என்று நான் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை” என்கிறார் வாணி.

கடுமையான வெப்பத்தில் இருந்து தப்பிப் பிழைக்க மெல்லிய நெகிழிக் கூரைகளின் கீழ் லட்சக்கணக்கான மக்கள் நெரிசல்பட்டுக் கிடந்தனர். கழிவறைகளிலும் தண்ணீர் வசதி தேவைக்கு ஏற்ற அளவில் இருக்கவில்லை; உணவும் குடிதண்ணீரும் கூட மிகக் குறைவாகவே வழங்கப்பட்டன.



“திறந்த வெளியில் மற்றவர்களின் முன்பாகவே தான் குளிக்க வேண்டும்; எனக்கு அது பெரும் சங்கடமாக இருந்தது.  எனது கூடாரம் படையினரின் ஒரு நிலைக்கு அருகே இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் நான் குளிக்கும் போது படையினர் பார்த்துக் கொண்டிருப்பார்கள்; யார் குளித்தாலும் அப்படித்தான்.  அதனால் நான் அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து குளித்து விடுவேன்; ஏனென்றால் அப்போது இருட்டாக இருக்கும். நாம் குளிப்பது அடுத்தவருக்குத் தெரியாது” என வாணி தனது வேதனையைக் கொட்டினார்.

“அந்த முகாம்களுக்குள் மனிதர்கள் வாழவே முடியாது. அதற்கான அடிப்படைகள் எதுவுமே அங்கு இல்லை. அடிப்படைத் தேவைகளான உணவுக்கும் தண்ணீருக்கும் எப்போதுமே பிரச்சினைதான்.  பெரும்பாலான நேரங்களில் தண்ணீருக்காக நீண்ட வரிசையில் காத்து நிற்க வேண்டும்.

கழிப்பிடங்களோ மிகப் பயங்கரமானவை; அங்கு கூட போதிய தண்ணீர் கிடையாது; அவற்றைத் துப்பரவு செய்வது முடியாத காரியம். அதனால் நோய்க் கிருமிகள் எங்கும் பரவின.  ஒரு கட்டத்தில் - இரண்டு மூன்று நாட்கள் பெய்த மழையில் மலக் கழிவுகள் அனைத்தும் தண்ணீரில் கலந்து கூடாரங்களுக்குள் புகுந்துவிட்டன

முழங்கால் அளவுக்கு இருந்த அந்த மலக் கழிவுத் தண்ணீரில் தான் அனைவரும் நடந்து செல்லவேண்டும்” என்கிறார் அவர்.  முகாம்களில் நடந்த முறைகேடுகள் பாலியல் கொடுமைகள் மற்றும் தண்டனைகள் குறித்துத் தான் அறிந்திருப்பதாகக் கூறும் சிறிலங்கா அரசு, இருப்பினும் அவை பெருமளவில் நிகழவில்லை என்று மறுக்கிறது.

அந்த தடுப்பு முகாம்களுக்கு உள்ளே “பெருமளவு பாலியல் உறவுகள் நடந்துள்ளன” என்கிறார் பேரிடர் முகாமை மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் ராஜீவ விஜேசிங்க [ Rajiva Wijesinha, the permanent secretary to the Ministry of Disaster Management and Human Rights ].  ஆனால், பெரும்பாலான பாலியல் கொடுகைள் முகாம்களுக்குள் இருந்தவர்களாலேயே அடுத்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.  “அங்கே எதுவும் நடக்கவில்லை என்று நான் உங்களுக்குச் சொல்ல முடியாது; ஏனெனில் நான் அங்கு இல்லை. அங்கொன்று இங்கொன்றாக சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம்.

அப்படி ஏதாவது நடந்திருந்தால் அதனை அறியத் தாருங்கள், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என அவர் மேலும் கூறினார்.  ஐ.நா. அமைப்பு ஒன்றிடம் இருந்த கிடைத்த அறிக்கை மூலமாக தான் ஒரு சம்பவத்தை அறிந்ததாக அவர் கூறினார்.  “படை ஆள் ஒருவர் கூடாரம் ஒன்றிற்குள் இரவு 11 மணிக்குச் சென்று அதிகாலை 3 மணக்குத்தான் திரும்பி வந்தார் என்று எமக்கு ஒரு அறிக்கை கிடைத்துள்ளது.

Kilde: The Observer

Vany Kumar, who was locked up behind barbed wire in the Menik Farm refugee camp for four months, also claims prisoners were punished by being made to kneel for hours in the hot sun, and those suspected of links to the defeated Tamil Tigers were taken away and not seen again by their families.

Kumar, 25, from Essex, was released from internment in September, but has waited until now to reveal the full scale of her ordeal in the hope of avoiding reprisals against friends and family held with her. They have now been released after the Sri Lankan government bowed to international pressure this month and opened the camps.

The Sri Lankan government confirmed to the Observer that it had received reports from United Nations agencies of physical and sexual abuse within the camps, but maintained that it had not been possible to substantiate the allegations. It denied that prisoners had disappeared. In response, a UN spokesman accused Colombo of "doing everything it could" to obstruct attempts to monitor the welfare of the hundreds of thousands interned in the camps.

Kumar, a biomedical graduate, was incarcerated in May in what she describes as a "concentration camp", along with nearly 300,000 Tamil civilians who managed to escape the slaughter which accompanied the defeat of the Tamil Tiger rebels, who had been fighting for 25 years for a separate state on the island. Working amid heavy shelling in an improvised field hospital, she had spent months helping save the lives of hundreds of civilians wounded as they were caught between advancing government soldiers and the cornered Tigers.

Sri Lanka has consistently denied mistreating the detainees, but Kumar's damning new evidence will bolster the claims of human rights organisations which have repeatedly criticised the government in Colombo.

Speaking at the family home in Chingford, she accused the Sri Lankan government of persecuting Tamils as it sought to round up rebels who had escaped the fighting. "It was a concentration camp, where people were not even allowed to talk, not even allowed to go near the fences," she said. "They were kept from the outside world. The government didn't want people to tell what happened to them, about the missing or the disappearances or the sexual abuse. They didn't want anyone to know.

"Sexual abuse is something that was a common thing, that I personally saw. In the visitor area relatives would be the other side of the fence and we would be in the camp. Girls came to wait for their relatives and military officers would come and touch them, and that's something I saw.

"The girls usually didn't talk back to them, because they knew that in the camp if they talked anything could happen to them. It was quite open, everyone could see the military officers touching the girls," she said.

"Tamil girls usually don't talk about sexual abuse, they won't open their mouths about it, but I heard the officers were giving the women money or food in return for sex. These people were desperate for everything."

She said prisoners who complained about their treatment were singled out by the guards. "One time I saw an old man was waiting to visit the next camp and this military officer hit the old man. I don't know what the argument was, but the officer just hit him in the back.

"In the same area people were made to kneel down in the hot weather for arguing with the officers. Sometimes it lasted for hours."

Sometimes white vans appeared in the camp and took people away. White vans hold a particular terror in Sri Lanka, where they are associated with the abduction of thousands of people by death squads. "They were asking people to come in and take their names down if they had any sort of contact [with the Tamil Tigers]. They did an investigation and then a van would come in and they would take them away and nobody would know after that. I know people still searching for family members."

Kumar said that on arrival at the camp, near the northern town of Vavuniya, she was put in a large tent with several people she did not know. The camp was guarded by armed soldiers and ringed with high fences and rolls of razor wire. "The first two or three days I was alone there still scare me. When I arrived at the camp I put my bag down and just cried. That feeling still won't go. I just don't want to think about those two or three days in the camp, the fear about what was going to happen to me.

"For the first few days I didn't eat anything. We didn't know where to go to get food. I thought, 'Am I dreaming or is this really happening?' I never thought I would end up in a camp." Tens of thousands of people were crammed into flimsy tents which provided little respite from the intense heat. Toilets and washing facilities could not cope with the demands and food and water were in short supply.

"You have to bathe in an open area in front of others, which I find very uneasy. I stayed next to the police station, so every day I had a bath with the police officers looking at me, men and women. Everyone can see you when you are having a bath. So I would get up early in the morning about 3.30am, so it was dark," she said.

Kumar was held in the best-equipped part of the camp, but even there conditions were dire. "It is not a standard a human being can live in. The basic needs like water and food [were] always a problem. Most of the time you were queuing for water.

"The toilets were terrible, and there was not enough water, so we could not clean them. There were insects and flies everywhere. After two or three days of continuous rain, the sewage was floating on the water and going into the tents and everyone [was] walking through it, up to knee height." She was finally released into the custody of the British High Commission in early September.

The Sri Lankan government says it is aware of allegations of sexual abuse and punishment of prisoners, but denied large-scale abuse. Rajiva Wijesinha, the permanent secretary to the Ministry of Disaster Management and Human Rights, said "there was a lot of sex going on" inside the camp, but he claimed that most reports involved abuse by fellow detainees. "I can't tell you nothing happened, because I wasn't there," he said. "Individual aberrations could have happened, but our position is 'Please tell us and they will be looked into'."

He said he was aware of one report from a UN agency, but claimed that establishing the facts was very difficult. "We received a report that a soldier went into a tent at 11pm and came out at 3am. It could have been sex for pleasure, it could have been sex for favours, or it could have been a discussion on Ancient Greek philosophy, we don't know."

As many as 100,000 people are believed to have died in Sri Lanka's 25-year civil war

Kilde: guardian.co.uk

http://link.brightcove.com/services/player/bcpid1184614595?bctid=40472652001

No comments:

Post a Comment