Welcome to this blogg. More than 80 million tamil people live in many countries across distant seas. There is no state without a Tamil - but there is no state for the tamils. Velkommen til denne bloggen. Her vil jeg oppdatere nyheter om tamiler og deres kamp for et selvstyre både på Sri Lanka og utenfor øya. என்னுடைய இந்த இணைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி: தமிழன் இல்லாத நாடில்லை, தமிழனுக்கென்று ஓர் நாடில்லை
Sunday, 6 December 2009
Singalam now speaks the truth!
இலங்கையில் ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு படைத்தளபதிகளே காரணமாக இருந்தனர்: கோத்தபாய
இலங்கையில் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமையின் பின்னணி தமக்கு தெரிந்திருந்த போதும், இராணுவ தளபதிகளை காப்பாற்றும் முகமாகவே அதனை வெளிப்படுத்தவில்லை என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா, ஊடக சுதந்திரம் குறித்து கருத்துரைத்து வருகின்ற நிலையிலேயே இந்த தகவலை கோத்தபாய வெளியிட்டுள்ளார்.
பல ஊடகவியலாளர்கள் இலங்கையில் கொலை செய்யப்பட்டனர். இதில் சண்டே லீடர் செய்திதாளின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவும் அடங்குகிறார். இவரின் கொலை தொடர்பில் பின்னணியில் இருந்து செயற்பட்டவர்கள் யார் என்ற விடயம் தமக்கு தெரியும் என்ற போதும் அதனை தற்போதும் வெளியிட முடியாது என கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சரத் பொன்சேகா, ஊடக சுதந்திரம் தொடர்பாக பேசி வருவதால் அதனை பற்றிக் கதைப்பது கட்டாயமாகி விட்டது என கோத்தபாய தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த குற்றச்சாட்டுக்கள் யாவும் தம்மீதே சுமத்தப்பட்டு வந்ததாக கோத்தபாய தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர், 2006 ஆண்டுக்கும் 2008 ஆம் ஆண்டுக்கும் இடையிலான காலப்பகுதியில் மட்டும்,16 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 39 பேர் தாக்குதல்களுக்கு உள்ளாகினர்.
Kilde: Paristamil.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment