Tuesday, 8 December 2009

பராக் ஒபாமாவின் வருகையை முன்னிட்டு நோர்வேயில் கவனயீர்ப்புப் பேரணி:-


அனைத்து தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு ஈழத் தமிழர் அவை அவை கேட்டுள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை (10) நோர்வேக்கு விஜயம் மேற்கொள்ளும் சமாதானத்திற்கான நோபல் விருது பெறும் அமெரிக்க அரச அதிபரின் விஜயத்தை முன்னிட்டு ஈழத் தமிழர் அவை பேரணி ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது. அதில் அனைத்து தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு ஈழத் தமிழர் அவை அவை கேட்டுள்ளது.

இதுகுறித்து ஈழத் தமிழர் அவை விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அமெரிக்க அரச தலைவரின் வருகையை முன்னிட்டு ஈழத்தமிழர் அவையினால், 10ஆம் நாள் வியாழன் அன்று மாலை 5.30 மணி முதல் 7மணி வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒழுங்கு செய்யப்படுகின்றது.

ஒஸ்லோ மத்திய தொடரூந்து நிலைய வளாகத்திலிருந்து (Oslo Sentralstasjon) நாடாளுமன்றம் நோக்கி பேரணி இடம்பெறவுள்ளது. நோர்வேயில் சமாதானத்திற்காக உழைக்கும் பல்லின அமைப்புக்களுடன் இணைந்து, ஈழத்தமிழர் அவை இக்கவனயீர்ப்புக்கான ஒழுங்கமைப்பினை மேற்கொள்கின்றது.

அனைத்து தமிழ் மக்களையும் அகவை பேதமின்றி அணிதிரளுமாறு வேண்டி நிற்கின்றோம்.

நன்றி
ஈழத் தமிழர் அவை.

No comments:

Post a Comment